//
Type Here to Get Search Results !

31st JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

31st JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மகாராஷ்டிரா துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்றார்
  • மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் சமீபத்தில் பராமதியில் நடந்த விமான விபத்தில் காலமானார். இதனைத் தொடர்ந்து, காலியாக உள்ள துணை முதல்வர் பதவிக்கு அவரது மனைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான (MP) சுனேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார்.
  • இந்நிலையில் மராட்டிய துணை முதல்வராக பதவி ஏற்ற முதல் பெண் என்ற பெருமையை சுனேத்ரா பவார் பெற்றுள்ளார். 
  • 62 வயதான சுனேத்ரா பவார் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலேவிடம் தோற்றார். இதனைத் தொடர்ந்து அவர் மேல்சபை எம்.பி. ஆனார். தற்போது துணை முதல்வராகிறார். 
  • பாராமதி பகுதியை உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்காவாக மாற்றியதில் சுனேத்ராவுக்கு பங்கு உண்டு. சுனேத்ரா பவார் துணை முதல்வராக ஆவதால், அவரது மேல்சபை எம்.பி. பதவியை அவரது மகன் பரத் பெறுகிறார்.
இந்தியாவின் ராம்சர் பட்டியலில் 2 புதிய ஈரநிலங்கள் சேர்ப்பு
  • 2014ம் ஆண்டில் 26 தளங்கள் என்ற எண்ணிக்கையிலிருந்து, தற்போது 98 தளங்களாக, 276 சதவீதத்திற்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது.
  • உத்தரப் பிரதேச மாநிலம் இட்டா மாவட்டத்தில் உள்ள பாட்னா பறவைகள் சரணாலயம் மற்றும் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள சாரி-தாண்ட் ஆகியவை ராம்சர் தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
  • இந்த இரண்டு ஈரநிலங்களும் நூற்றுக்கணக்கான வலசை போகும் மற்றும் உள்ளூர் பறவை இனங்களுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளன. இந்த பகுதிகள், அழிந்து வரும் பறவைகளைத் தவிர, சிங்காரா, ஓநாய்கள், காரக்கால், பாலைவனப் பூனைகள் மற்றும் பாலைவன நரிகள் போன்ற வனவிலங்குகளுக்கும் புகலிடமாக உள்ளன.
  • ஈரானின் ராம்சர் நகரில், கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற ஈரநிலங்கள் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில், இது குறித்த உடன்படிக்கை ஒன்றில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 1982ம் ஆண்டு பிப்ரவரி 1 - ம் தேதி இந்தியா இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
ஆஸ்திரேலிய ஓபன் 2026 - எலெனா சாம்பியன்
  • ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை கஜகாஸ்தான் வீராங்கனை எலெனா ரிபாகினா வென்றார்.
  • இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையான பெலராஸின் அரியானா சபலென்காவை 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தனது முதல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், ஒட்டுமொத்தமாக இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel