
2nd JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.74 லட்சம் கோடி
- டிசம்பர் மாதம் ரூ. 1,74,550 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதம் வசூல் ஆன 1.64 லட்சம் கோடியை விட 6.1 சதவீதம் அதிகம்.
- 2024 டிசம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.64 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருந்தது. கடந்த செப்டம்பர் 22 முதல், சுமார் 375 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன. அதன்பின் வருவாய் மெதுவான வளர்ச்சி ஏற்பட்ட நிலையில் இது நிகழ்ந்துள்ளது.
- விமானப்படை துணைத் தளபதியாக இருந்த ஏர் மார்ஷல் நம்தேஸ்வர் திவாரி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து தென்மேற்கு மண்டல தலைமை அதிகாரியாக பணியாற்றிய ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் விமானப்படை துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
- இவர் டெல்லியில் உள்ள வாயு பவனில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு விமானப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
- விமானப்படையில் கடந்த 1986-ம் ஆண்டு சேர்ந்த நாகேஷ் கபூர், பலவித போர் விமானங்களை இயக்கிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

