
17th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ₹3,250 கோடி மதிப்புள்ள ரயில், சாலை உள்கட்டமைப்பு திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
- மேற்கு வங்காளத்தின் மால்டாவில் ₹3,250 கோடி மதிப்பிலான பல ரயில், சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.01.2026) தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- பிரதமர் மால்டா டவுன் ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு அவர் ஹவுரா - குவஹாத்தி (காமாக்யா) இடையேயான இந்தியாவின் முதல் வந்தே பாரத் தூங்கும் வசதி கொண்ட ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் சாலை இணைப்பை மேம்படுத்தவும், சீரான போக்குவரத்தை எளிதாக்கவும் உதவும் ஒரு முக்கிய சாலைத் திட்டமான தேசிய நெடுஞ்சாலை-31டி-யின் துப்குரி-ஃபாலகட்டா பிரிவின் மறுசீரமைப்பு மற்றும் நான்கு வழிச்சாலைப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- பாலுர்காட் - ஹிலி இடையேயான புதிய ரயில் பாதை, நியூ ஜல்பைகுரியில் அடுத்த தலைமுறை ரயில்வே சரக்கு பராமரிப்பு வசதிகள், ஜல்பைகுரி மாவட்டத்தில் வந்தே பாரத் ரயில் பராமரிப்பு வசதிகளை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட நான்கு முக்கிய ரயில் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- நியூ கூச்பெஹார்-பமன்ஹாட், நியூ கூச்பெஹார்-பாக்சிர்ஹாட் இடையேயான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டதை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- மேலும், பிரதமர் 4 புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில்களை காணொலி வழியே கொடியசைத்து தொடங்கி வைத்தார். நியூ ஜல்பைகுரி- நாகர்கோவில், நியூ ஜல்பைகுரி- திருச்சிராப்பள்ளி, அலிப்பூர்துவார் - எஸ்எம்விடி பெங்களூரு, அலிப்பூர்துவார் - மும்பை (பன்வெல்) அம்ரித் விரைவு ரயில் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார்.
- மேற்கு வங்கத்தின் மால்டா டவுன் நிலையத்தில் இருந்து ஹவுரா மற்றும் கவுஹாத்தி (காமாக்யா) இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை பிரதமர் மோடி இன்று ( ஜன.17) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- மேலும், அவர் கவுஹாத்தி - ஹவுரா இடையேயான வந்தே பாரத் படுக்கை வசதி வந்தே பாரத் ரயிலையும் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அத்துடன், பிரதமர் மோடி காணொலி மூலம் நான்கு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் தொடங்கி வைத்தார்.
- நவீன இந்தியாவின் வளர்ந்து வரும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட, முழுவதுமாக குளிரூட்டப்பட்ட இந்த வந்தே பாரத் படுக்கை வசதி ரயில், பயணிகளுக்கு சிக்கனமான கட்டணத்தில் விமானப் பயணம் போன்ற பயண அனுபவத்தை வழங்கும்.

