
13th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழக ஊர்க்காவல் படையில் 50 திருநங்கைகள் சேர்ப்பு
- சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு ஊர்க்காவல் படையில் சேர்க்கும் திட்டம் 2025-2026 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக சென்னை, தாம்பரம், ஆவடி, திருச்சி, கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கீழ், 50 திருநங்கைகளுக்கு பயிற்சி வழங்கப்படும் என அறிவித்து, அதன்படி தகுதி வாய்ந்த திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு ஊர்க்காவல் படை பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இன்று தேர்வான திருநங்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- முதற்கட்டமாக தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தாம்பரத்தில் 15 நபர்கள், ஆவடியில் 10 நபர்கள், மதுரையில் 7 நபர்கள், கோயம்புத்தூரில் 7 நபர்கள், திருச்சியில் 6 நபர்கள் மற்றும் சென்னையில் 5 நபர்கள் என மொத்தம் 50 திருநங்கைகள் காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் பயிற்சிகளை வழங்கி ஊர்க்காவல் படையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
- சென்னை தலைமைச் செயலகத்தில் சர்வம் நிறுவனம் மற்றும் தமிழக அரசு கூடிய விரைவில் ஒரு செயற்கை நுண்ணறிவு தகவல் மையம் அமைப்பதற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளது.
- சர்வம் நிறுவனத்துடன் ஐஐடி இயக்குநர் காமகோடி மற்றும் துறை செயலாளர் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்டுள்ளது.
- இதற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 1000 நபர்களுக்கு உயர் ஊதியம் வழங்கும் D TECH பணி வழங்கப்படும் , தமிழக மக்களுக்கு மிகவும் உதவி அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படும்.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை (Startups) ஊக்குவிக்கும் வகையில், ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவின் முதல் பிரத்யேக 'டீப் டெக் ஸ்டார்ட்அப் கொள்கையை' (Deep Tech Startup Policy 2025-26) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
- சென்னையில் நடைபெற்ற 'யுமாஜின் டிஎன்' (Umagine TN) சர்வதேச தொழில்நுட்ப மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் இந்தக் கொள்கை தொடங்கி வைக்கப்பட்டது.
- இது தமிழ்நாடு அரசு நடத்தும் ஒரு சர்வதேச தொழில்நுட்ப மற்றும் புதுமை (Technology + Innovation) மாநாடாகும். தமிழ்நாட்டை உலகளாவிய தொழில்நுட்ப மையமாக (Global Tech Hub) மாற்றும் நோக்கோடும், 'வருங்காலத்திற்குத் தயாரான தமிழ்நாடு' (Future Ready Tamil Nadu) என்ற இலக்கை முன்னிறுத்தியும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
- இதில் செயற்கை நுண்ணறிவு (AI), தரவு அறிவியல் (Data Science), நிதித் தொழில்நுட்பம் (FinTech), சுகாதாரம் (HealthTech), மற்றும் பருவநிலை தொழில்நுட்பம் (ClimateTech) போன்ற துறைகளின் முன்னணி நிறுவனங்களும் ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

