
23rd DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்' என்ற விருதை வென்ற சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை உலக வங்கி பாராட்டு
- சென்னை மாநகரில் உள்ளூர் போக்குவரத்துக்கு பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என பெரும்பாலான சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- பல போக்குவரத்து சேவைகள் இருப்பினும், பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது அரசின் பேருந்து சேவையைதான். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 27 பணிமனைகளில் இருந்து தினந்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.
- இந்த பேருந்துகளில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினந்தோறும் பயணிக்கின்றனர். இந்த நிலையில், ஒன்றிய அரசின் சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என்ற விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ளது.
- முந்தைய வீழ்ச்சியிலிருந்து மீண்டு, ஒன்றிய அரசின் சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என்ற விருதை வென்று சாதனை படைத்துள்ள எம்.டி.சி.க்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
- உலக வங்கி வெளியிட்டுள்ள கட்டுரையில், “3 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையின் பயணிகள் பொதுப் பேருந்துகளைப் புறக்கணித்து வந்தனர்.
- அப்போது, மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) குறைந்த பயணிகளின் எண்ணிக்கை, சிறிய பேருந்துத் தொகுதி மற்றும் பொது மக்களின் நம்பிக்கையின்மை போன்ற சவால்களால் தத்தளித்து வந்தது.
- இன்று, சென்னை இந்த நிலையை முற்றிலுமாக மாற்றிச் சாதனை புரிந்துள்ளது. மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சரிடமிருந்து “சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்” (City with the Best Public Transport System) என்ற இந்தியாவின் உயரிய நகர்ப்புறப் போக்குவரத்து விருதை வென்றுள்ளது. இது சென்னை பெருமை கொள்ளத்தக்க ஒரு அங்கீகாரம்.”
- டிட்வா (Ditwah) புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, 450 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹3,700 கோடி) மதிப்பிலான விரிவான நிதியுதவித் திட்டத்தை இந்தியா முன்மொழிந்துள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதராக இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை கொழும்பில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
- புயல் தாக்கிய உடனே, இந்தியா 'ஆபரேஷன் சாகர் பந்து' (Operation Sagar Bandhu) என்ற பெயரில் துரித கதியில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. இதன் மூலம் சுமார் 1,100 டன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
- 14.5 டன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர கால மருத்துவ சேவைகளை வழங்க இந்தியக் குழுவினர் முன்னின்றார்கள்.
- தற்போது அவசர நிவாரணப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நாட்டின் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா இந்த பெரும் தொகையை வழங்குகிறது.
- இந்த 450 மில்லியன் டாலர் தொகுப்பு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சலுகை அடிப்படையிலான கடன் உதவிக்கு 350 மில்லியன் டாலரும் நேரடி மானியமாக 100 மில்லியன் டாலரும் வழங்கப்படுகிறது.

