
1st NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
விலையில்லா மடிக்கணினி வழங்க ஹெச்.பி, டெல், ஏசர் ஆகிய நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
- தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழகத்தில் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக முதல்கட்டமாக நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்கீழ் ஒரு மடிக்கணினியை ரூ.21,650-க்கு தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்கிறது.
- முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கு ஹெச்.பி, டெல், ஏசர் ஆகிய 3 நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கிய எல்காட் நிறுவனம். மார்ச் மாத இறுதிக்குள் மடிக்கணினி விநியோகம் செய்யும் பணியினை முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் போன்ற சிறப்பு பிரிவினருக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- அதில் ஒன்றாக, 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வீட்டிற்கு நேரடியாக வழங்கும் தாயுமானவர் திட்டம் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
- இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று குடிமைப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.
- தற்போது, இந்தத் திட்டத்தில் வயது வரம்பு 70-ல் இருந்து 65 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் மேலும் பல முதியோர் பயனடைய உள்ளனர்.
- மத்திய நிதியமைச்சகம் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று, நாடு முழுவதும் அதற்கு முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது.
- அந்தவகையில், அக்டோபர் மாதம் வசூலான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்தில் ரூ. 1.89 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் அக்டோபர் மாதத்தில் 4.6 சதவீதம் அதிகரித்து ரூ.195.936 கோடியாக உயர்ந்துள்ளது.
- இது கடந்தாண்டு 2024 அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 9 சதவீதம் அதிகம். தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியைத் தாண்டி வருகிறது.
- இதனிடையே ஜிஎஸ்டி முறை மாற்றப்பட்டு, இரு விகித (5%, 18%) முறை கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான பொருள்களின் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

