
வேலையின்மை அளவில் தேசிய அளவில் 11 வது இடத்தில் தமிழகம்
- ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றை எடை போடும் அளவுகோல்களில் முக்கியமானது வேலையின்மை விகிதம். வேலை செய்யத் தகுதியும் விருப்பமும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பவர்களின் சதவீதமே இந்த வேலையின்மை விகிதமாகும்.
- நாடு முழுவதும் இருப்பது போலவே, தமிழகத்திலும் இந்த விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் உயர்வதும், குறைவதும் இயல்பாகவே இருக்கிறது.
- தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் (NSO) காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (PLFS) அடிப்படையில் ஆண்டுக்கு நான்கு முறை இந்தத் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
- அதன்படி, ஜூலை - செப்டம்பர் 2025 எனும் மூன்றாவது காலாண்டுக்கான புதிய புள்ளிவிவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் 5.7% என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்திய மாநிலங்களில் வேலையின்மை குறைவாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 11வது இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் மிகக் குறைந்த வேலையின்மை விகிதம் கொண்ட மாநிலம் குஜராத்.
- அங்கு இந்த விகிதம் வெறும் 2.2% தான். அதனைத் தொடர்ந்து கர்நாடகா 2.8% விகிதத்துடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

