
4th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழகத்தில் அழிந்து வரும் 4 வகை உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் ரூ.1 கோடியில் புதிய திட்டம்
- தமிழகத்தில் மேற்கு மற்றும் கிழக்கு தொடா்ச்சி மலைகளைக் கொண்ட பகுதிகள், உலகளவில் பல்லுயிா் பெருக்க மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
- இங்குள்ள, மேற்குத் தொடா்ச்சி மலை பகுதிகளில் காணப்படும் சிங்கவால் குரங்கு, தமிழ்நாடு, ஆந்திரம், கேரளத்தின் வட நிலப்பரப்புகளில் காணப்படும் சென்னை முள்ளம்பன்றி, முதுமலை புலிகள் காப்பக நிலப்பரப்பில் வாழும் கழுதைப் புலி, மோயாறு ஆற்றில் வாழும் கூம்புத் தலை மஹ்சீா் மீன் வகை ஆகியவை அழிந்து வரும் உயிரினங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.
- இந்த உயிரினங்களைப் பாதுகாக்க தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்து, அதற்காக ரூ.1 கோடியை ஒதுக்கியுள்ளது.
- அதன்படி, சிங்கவால் குரங்கை பாதுகாக்க ரூ.48.50 லட்சம், மெட்ராஸ் முள்ளம்பன்றிக்கு ரூ.20.50 லட்சம், வரி கழுதைப் புலிக்கு ரூ.14 லட்சம், கூம்புத் தலை மஹ்சீா் மீன் வகைக்கு ரூ.17 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்நிதியின் மூலம் அழிவு நிலையில் உள்ள இந்த உயிரினங்களின் வாழ்விடங்களைக் கண்காணித்து, அது தொடா்பாக ஆய்வுகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த உயிரினங்களுக்கு, அவை வாழும் இடங்களிலேயே பாதுகாப்பான இனப்பெருக்க மையங்களும் அமைக்கப்பட உள்ளன.
- இதுமட்டுமன்றி, வனத் துறை ஊழியா்களின் திறன் மேம்படுத்தப்படுவதுடன், விலங்குகளின் முக்கிய வாழ்விடங்களான மழைக் காடுகள், வட நிலங்கள், நதி அமைப்புகள் போன்றவற்றை முன்னேற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பிகாரில் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இந்த நிலையில், இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரூ. 62 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தில்லியின் விக்ஞன் பவனிலிருந்து காணொளி வாயிலாகப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
- இதன்மூலம் 2000 ஐடிஐக்களை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, பிகாரில் உள்ள பாட்னா, தர்பங்காவில் உள்ள ஐடிஐக்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
- பிகாரில் புதுப்பிக்கப்பட்ட 'முக்கியமந்திரி நிச்சய ஸ்வயம் சஹாயத பட்டா யோஜனா' திட்டத்தை மோடி தொடங்கிவைத்தார், இதன் கீழ் 5 லட்சம் பட்டதாரிகள் இலவச திறன் பயிற்சியுடன் இரண்டு ஆண்டுகளுக்கு தலா ரூ. 1,000 மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவார்கள்.
- மேலும் பிகாரில் மாணவர் கல்வி கடன் அட்டை திட்டத்தையும் அவர் தொடங்கினார். இதன்மூலம் ரூ. 4 லட்சம் வரை வட்டியில்லா கல்விக் கடன்கள் வழங்கும்.
- இந்தத் திட்டத்தின் கீழ் 3.92 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஏற்கெனவே ரூ.7,880 கோடிக்கும் அதிகமான கடன்களைப் பெற்றுள்ளனர். அதோடு, யுவ ஆயோக் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
- பிகாரில் ஜன நாயக் கர்பூரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகத்தையும் திறந்து வைத்தார், இது உலகளாவிய அளவில் போட்டித்தன்மை வாய்ந்த பணியாளர்களை உருவாக்கத் தொழில் சார்ந்த படிப்புகள் மற்றும் தொழிற்கல்வியை வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்திய கடலோரக் காவல் படையின் மையம் காரைக்காலில் அமைந்துள்ளது. காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட கடல் பகுதியில் ரோந்து பணியில் கப்பல் மற்றும் ரோந்து படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
- காவல் படையை வலுப்படுத்தம் விதமாக புதிதாக கோவா கப்பல் கட்டும் தளத்திலிருந்து ரோந்து கப்பல் தயாரிக்கப்பட்டு சனிக்கிழமை காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு இயக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
- அக்சர் என்று பெயரிடப்பட்ட புதிய கப்பல் சுமாா் 51 மீட்டர் நீளமும் 320 மெட்ரிக் டன் ஆகும். மணிக்கு 27 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது.
- புதிய ரோந்துக் கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டு, நாட்டுக்கு அா்ப்பணிப்பு செய்யும் நிகழ்ச்சி காரைக்கால் தனியார் துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
- இதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் தீப்தி மொஹில் சாவ்லா கலந்து கொண்டு கப்பலை முறைப்படி நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.