
22nd OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வனப் பரப்பளவில் இந்தியா உலகளவில் 9-வது இடத்திற்கு முன்னேற்றம்
- பாலித் தீவில் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (எப்ஏஓ) வெளியிட்ட உலகளாவிய வன வள மதிப்பீடு 2025-ன் படி, உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையை எட்டியுள்ளது. உலகளவில் மொத்த வனப் பரப்பளவில் 9-வது இடத்திற்கு அது முன்னேறியுள்ளது.
- மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், சமூக ஊடக எக்ஸ் பதிவில் இந்த வளர்ச்சியைப் பற்றி தெரிவித்துள்ளார்.
- முந்தைய மதிப்பீட்டில், இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. வருடாந்திர வனப் பரப்பளவு ஆதாயத்தின் அடிப்படையில் இந்தியா உலகளவில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
- ஜப்பான் – இந்தியா இடையே கடற்படை பயிற்சி 2025-ல் இந்திய கடற்படைக் கப்பல் சஹ்யாத்ரி பங்கேற்றது. இந்தப் பயிற்சி 2025 அக்டோபர் 16 முதல் 18 வரை நடைபெற்றது.
- துறைமுக கட்டத்தின் போது, இந்தியக் கடற்படை ஜப்பானில் உள்ள யோகோசுகா துறைமுகத்திற்கு சென்றது. யோகோசுகா துறைமுகத்திற்கு செல்வதற்கு முன் ஐஎன்எஸ் சஹ்யாத்ரி, ஜப்பானின் கடற்பகுதி தற்காப்புப்படைக் கப்பல்களான அசாஹி, ஊமி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் ஜின்ரியூ ஆகியவை கடற்படை பயிற்சியில் ஈடுபட்டன.
- ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரரும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை, புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வழங்கினார்.
- லெப்டினன்ட் கர்னல் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடிய அமைச்சர், விடாமுயற்சி, தேசபக்தி, சிறந்தவற்றுக்காக பாடுபடும் இந்திய உணர்வு ஆகியவற்றின் அடையாளமாக நீரஜ் சோப்ரா திகழ்வதாக தெரிவித்தார்.

 
 
