
15th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஐஎம்எஃப் கணிப்பு
- நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.4 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது 6.6% ஆக உயர்த்தி சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. அதேவேளையில், 2026- 27 நிதியாண்டுக்கான வளர்ச்சி 20 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.2 சதவீதமாகவும் கணித்துள்ளது.
- முன்னதாக, அக்டோபர் தொடக்கத்தில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த 6.3 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயர்த்தி உலக வங்கி கணித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
- 4.8 விழுக்காடு வளர்ச்சியுடன் சீனா 2ம் இடத்தில் உள்ளது. ஜெர்மனி 0.2 விழுக்காடு, ரஷ்யா 0.6 விழுக்காடு,பிரான்ஸ் 0.7 விழுக்காடு, ஜப்பான் 1.1 விழுக்காடு, பிரிட்டன் 1.3 விழுக்காடு, அமெரிக்கா 2 விழுக்காடு வளர்ச்சி காணும் என கணிக்கப்பட்டுள்ளது.
- வரும் நிதியாண்டில் வளர்ச்சிக் குறித்த கணிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 6.2 விழுக்காடு வளர்ச்சி விகிதத்துடன் முன்னிலையில் உள்ள நிலையில் சீனாவும், நைஜீரியாவும் தலா 4.2 விழுக்காடு வளர்ச்சியுடன் 2ம் இடத்தில் உள்ளன.
- அமெரிக்கா 2.1 விழுக்காடு,பிரிட்டன் 1.3 விழுக்காடு, ரஷ்யா 1 விழுக்காடு, ஜெர்மனி 0.9 விழுக்காடு, பிரான்ஸ் 0.9 விழுக்காடு, ஜப்பான் 0.6 விழுக்காடு வளர்ச்சி காணும் என ஐஎம்எஃப் கணித்துள்ளது.
- இந்திய கடற்படை, இந்தோனேஷிய கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளும் இருதரப்பு கூட்டுப்பயிற்சியின் ஐந்தாவது பதிப்பான சமுத்ரா சக்தி-2025 விசாகப்பட்டினத்தில் 2025 அக்டோபர் 14 முதல் 17 வரை நடைபெறுகிறது.
- இந்திய கடற்படையின் நீர் மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான ஐஎன்எஸ் கவரட்டி, இந்தோனேஷிய கடற்படையின் கேஆர்ஐ ஜான் லி போர்க்கப்பல் ஆகியவை பங்கேற்கின்றன.
- இருதரப்பு கப்பல் பயணம், கூட்டு யோகா அமர்வுகள், நட்பு ரீதியிலான விளையாட்டுகள், நிபுணர்களின் கருத்து பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் துறைமுகத்தில் நடைபெறும் பயிற்சியின் போது மேற்கொள்ளப்படுகின்றன.
- கடல் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் இயக்குதல், விமானப் பயிற்சி, ஆயுதங்களை கையாளுதல், தேடுதல் மற்றும் பறிமுதல் பயிற்சி போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.
- முன்னாள் படைவீரர்கள் நலத்துறை மூலம் அமல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான நிதியுதவியை நூறு சதவீதம் அதிகரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
- நிரந்தர வருவாய் இல்லாத மூத்த மற்றும் ஓய்வூதியம் பெறாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் 65-க்கு மேற்பட்ட வயதுடைய விதவைகளுக்கு வறியோர் நிதியுதவியாக மாதாந்திர நிதியுதவி ரூ.4000-த்திலிருந்து ரூ.8000 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
- இரண்டாண்டு முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் விதவைகள் மற்றும் இரண்டு குழந்தைகள் உடையவர்களுக்கு (1-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை) கல்வி நிதியுதவி மாதந்தோறும் ரூ.1000-லிருந்து, ரூ.2000- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- திருமண நிதியுதவி ரூ.50,000-லிருந்து ரூ.1,00,000-மாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்களின் 2 மகள்கள், விதவை மறுமணம் மற்றும் இந்த உத்தரவுக்குப் பிந்தைய திருமணத்திற்கும் இது பொருந்தும்.
- இந்தத் திருத்தப்பட்ட விகிதங்கள் 2025 நவம்பர் 1 முதல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு வழங்கப்படும். ஆயுதப்படையினர் கொடி நாள் நிதியத்தில் இடம்பெற்றுள்ள முன்னாள் படைவீரர்கள் நலநிதி மூலம் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.257 கோடி செலவாகும்.
- முன்னாள் படைவீரர்களின் தியாகம் மற்றும் சேவையை கவுரவிக்க வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப குறைந்த வருவாய் உடைய மூத்த மற்றும் ஓய்வூதியம் பெறாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சமூகப் பாதுகாப்பை இம்முடிவு வலுப்படுத்துகிறது.