
ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் ரூ.1100 கோடி முதலீட்டில் அலகிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1100 கோடி ரூபாய் முதலீட்டில் 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் அமைக்கவுள்ள Multilayer & HDI Printed Circuit Boards உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
- தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
- மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கைக்கேற்ப ஈர்க்கப்படும் தொழில் திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு, இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- குடியரசு துணைத் தலைவராகத் தேர்வானதால், சி.பி. ராதாகிருஷ்ணன் தனது மகாராஷ்டிர ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதையடுத்து குஜராத் ஆளுநருக்கு மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
- குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- ஆச்சார்ய தேவவிரத் முதலில் குஜராத் மாநில ஆளுநராகவும் பின்னர் ஹிமாசலப் பிரதேச ஆளுநராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.