குழந்தைகளின் உடல் பருமன் குறித்த யுனிசெஃப் அறிக்கை / UNICEF REPORT ON CHILDREN OBESITY
TNPSCSHOUTERSSeptember 11, 2025
0
குழந்தைகளின் உடல் பருமன் குறித்த யுனிசெஃப் அறிக்கை / UNICEF REPORT ON CHILDREN OBESITY: யுனிசெஃப் அறிக்கையின்படி, 5 முதல் 19 வயதுக்குள்பட்ட சுமார் 18.8 கோடி குழந்தைகளில் தோராயமாக 10ல் ஒருவருக்கு தற்போது உடல் பருமன் இருக்கிறது. 2000 ஆம் ஆண்டில் இது வெறும் 3% ஆக இருந்த நிலையில் தற்போது 9.4% ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு முழு முதற்காரணம் உணவுதான் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். முன்பெல்லாம் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், புரதம் நிறைந்த உணவுகள், நமது வாழ்க்கை முறையில் அதிகம் இருந்தன.
இவை குறைந்த கலோரியுடன் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை வழங்கின. ஆனால் இப்போதெல்லாம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை குழந்தைகள் அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர்.
இதனால் குழந்தைகளுக்கு உடல் பருமன், டைப்-2 நீரிழிவு நோய், இதய நோய், புற்றுநோய்கள் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி குழந்தைகளின் வளர்ச்சி, அறிவாற்றல் மற்றும் மன நல்வாழ்வைப் பாதிக்கிறது.
இதனைத் தவிர்க்க வேண்டுமென்றால் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள பழக்க வேண்டும். அதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பொருந்தா உணவு எனும் ஜங்க் ஃ புட் காரணமாக குழந்தைகளின் உடல் பருமன் அதிகரித்திருப்பதாக 190-க்கும் மேற்பட்ட நாடுகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு யுனிசெஃப் அறிக்கை கூறுகிறது.
துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் குறைவான எடை கொண்ட குழந்தைகளைவிட அதிக எடை கொண்ட குழந்தைகள்தான் அதிகம் இருக்கின்றனர்.
உலகளவில் 5 குழந்தைகளில் ஒருவருக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. பசிபிக் தீவுகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிகமாக உடல் பருமன் காணப்படுகிறது.
நியுவே 38%, குக் தீவுகள் 37%, நவ்ரு 33%. சிலி, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலும் உடல் பருமன் பிரச்னை அதீத கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குளிர் பானங்கள், சமைக்கப்பட்ட உணவுகள், பிஸ்கட் போன்ற அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் இதற்கு காரணமாக இருக்கின்றன.
இவற்றில் பெரும்பாலும் சர்க்கரை, கொழுப்பு, உப்பு, செயற்கை இனிப்புகள் அதிகமாக உள்ளன. இந்த பொருள்கள் அதிகளவில் விளம்பரம் செய்யப்படுவதால் குழந்தைகளிடம் நேரடி தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன.
பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதம் நிறைந்த பாரம்பரிய உணவுகளுக்கு மாற்றினால் மட்டுமே இதனை சரிசெய்ய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எதிர்கால விளைவுகள் என்னென்ன?
குழந்தைகளின் உடல் பருமன் குறித்த யுனிசெஃப் அறிக்கை / UNICEF REPORT ON CHILDREN OBESITY: குழந்தை பருவத்தில் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது வாழ்நாள் முழுவதும் விளைவுகளை ஏற்படுத்தும்.
உடல் பருமன், டைப்-2 நீரிழிவு, இதய நோய்கள் மட்டுமின்றி சில புற்றுநோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இது அறிவாற்றல் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.
பல நாடுகளில், குழந்தைகள் உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய இரண்டையும் எதிர்கொள்கின்றனர். அதாவது உடல் பருமனுடன் இருப்பார்கள், அதேநேரத்தில் ஊட்டச்சத்து குறைவாகவும் இருப்பார்கள். அவர்கள் சாப்பிடும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்து இருக்காது. இது குழந்தைகளின் உடல்நலனை இன்னும் சிக்கலாக்குகிறது.
குழந்தைகளின் உடல் பருமன் பிரச்னைக்கு யுனிசெஃப் சில வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
பள்ளிகள், வீடுகளில் குழந்தைகள், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.
ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு கூடுதல் வரிகள் மற்றும் லேபிளிங் இருக்க வேண்டும். இதன் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
உணவுப் பொருள்களின் சீரமைப்பு முக்கியம். உணவுப் பாதுகாப்புக்கான கொள்கைகளை வகுக்க வேண்டும்.
மெக்ஸிகோ போன்ற நாடுகள், பள்ளிகளில் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை தடை செய்துள்ளன. பிற நாடுகளும் இவற்றை கருத்தில் கொள்ளலாம்.
பொருளாதார பிரச்னைகள்
குழந்தைகளின் உடல் பருமன் குறித்த யுனிசெஃப் அறிக்கை / UNICEF REPORT ON CHILDREN OBESITY: குழந்தைகளின் உடல் பருமன் பிரச்னையைத் தடுக்கத் தவறினால் மிகப்பெரிய பொருளாதார தாக்கங்கள் ஏற்படும் என்று யுனிசெஃப் அறிக்கை எச்சரிக்கிறது.
ஏனெனில் 2035 ஆம் ஆண்டுக்குள் உடல் பருமனுக்கான செலவு ஆண்டுதோறும் 4 டிரில்லியன் டாலரைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் உடல்ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, ஆரம்பத்திலேயே இதில் தலையிட்டு சரிசெய்து ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
ENGLISH
UNICEF REPORT ON CHILDREN OBESITY: According to a UNICEF report, approximately one in 10 of the 188 million children between the ages of 5 and 19 are currently obese. This has increased to 9.4% from just 3% in 2000.
Nutrition experts say that the main reason for this is food. Earlier, vegetables, fruits, grains, and protein-rich foods were abundant in our lifestyle. These provided the body with more nutrition with fewer calories. But nowadays, children consume more processed foods and fast foods.
This causes problems such as obesity, type 2 diabetes, heart disease, and cancer in children. Apart from that, it also affects children's development, cognition, and mental well-being. To avoid this, children should get used to eating healthy foods. Experts recommend that an environment be created for this.
Based on data from more than 190 countries, the UNICEF report says that the increase in childhood obesity is due to junk food, which is inappropriate food. In almost every region except sub-Saharan Africa and South Asia, there are more overweight children than underweight children.
Worldwide, one in five children is obese. The Pacific Islands have the highest rates of obesity. Niue has 38%, the Cook Islands 37%, and Nauru 33%. Countries such as Chile, the United States, and the United Arab Emirates are also facing serious obesity problems.
This is due to the consumption of highly processed foods such as soft drinks, processed foods, and biscuits. These are often high in sugar, fat, salt, and artificial sweeteners. These products are heavily advertised and have a direct impact on children.
Experts say that the only way to reverse this is to switch to a more traditional diet rich in fruits, vegetables, and protein.
What are the future consequences?
UNICEF REPORT ON CHILDREN OBESITY: Being overweight or obese in childhood has lifelong consequences. Obesity increases the risk of type 2 diabetes, heart disease, and some cancers. This can affect not only cognition but also mental health.
In many countries, children face both obesity and malnutrition. That is, they are obese, but they are also undernourished. The foods they eat do not have enough nutrients. This further complicates children's health.
UNICEF provides some guidelines for the problem of childhood obesity.
Schools and homes should limit the consumption of highly processed foods by children.
There should be additional taxes and labeling for unhealthy foods. This can help create awareness.
Food safety is important. Policies should be formulated for food safety.
Countries such as Mexico have banned highly processed foods in schools. Other countries may also consider this.
Economic problems
UNICEF REPORT ON CHILDREN OBESITY: A UNICEF report warns that failure to curb the problem of childhood obesity will have huge economic impacts. Because it is estimated that the cost of obesity will exceed $4 trillion annually by 2035.
It can also cause physical problems throughout the child's life. Therefore, various organizations emphasize that it should be intervened and corrected at the earliest to create a healthy future generation.