
27th AUGUST 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2025 - இரட்டை தங்கம் வென்றார் சிப்ட் கவுர் சம்ரா
- கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா, சீனா வின் யாங் யுஜியை எதிர்த்து விளையாடினார்.
- இதில் சிப்ட் கவுர் சம்ரா 459.2 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றார். யாங் யுஜி 458.8 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஜப்பானின் நோபாடா மிசாகி 448.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
- மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் அணிகள் பிரிவில் சிப்ட் கவுர் சம்ரா, அஞ்சும் மவுத்கில், அஷி சவுஸ்கி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,753 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2030-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துதற்கான ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- ஏல விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், அதிகாரிகளிடமிருந்து தேவையான நடைமுறைகளுடன் போட்டிகளை நடத்த குஜராத் மாநில அரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், குஜராத் அரசுக்குத் தேவையான மானிய உதவிகளை வழங்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 72 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். விளையாட்டுப் போட்டிகளின் போது ஏராளமான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருவார்கள் என்பதால் உள்ளூர் வணிகங்கள் பயனடைந்து அதிக வருவாய் ஈட்டப்படும்.
- உலகத்தரம் வாய்ந்த மைதானங்கள், அதிநவீன பயிற்சி வசதிகள் ஆகியவற்றுடன் தீவிர விளையாட்டு கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு சிறந்த நகரமாக அகமதாபாத் உள்ளது.
- உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில், 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் மூலம் அதன் திறன் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (27.08.2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், "பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதித் (பிரதமரின் ஸ்வநிதி) திட்டத்தில், 31.12.2024க்குப் பிறகும் கடன் காலத்தை மறுசீரமைத்து 2030 மார்ச் 31 வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு 7,332 கோடி ரூபாய். மறுசீரமைக்கப்பட்ட இந்தத் திட்டம் 50 லட்சம் புதிய பயனாளிகள் உட்பட 1.15 கோடி பேருக்குப் பயனளிக்கும்.
- இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டியது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பாகும். மேலும் வங்கிகள்/நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வழங்குவது நிதிச் சேவைகள் துறையின் பொறுப்பாகும்.
- மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தின் முக்கிய அம்சங்களில் முதல் மற்றும் இரண்டாம் தவணைகளில் மேம்படுத்தப்பட்ட கடன் தொகை, இரண்டாவது கடனைத் திருப்பிச் செலுத்திய பயனாளிகளுக்கு யுபிஐ-யுடன் இணைந்த ரூபே கடன் அட்டை வழங்குதல், சில்லறை - மொத்த பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் கேஷ்பேக் சலுகைகள் ஆகியவை அடங்கும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் நான்கு திட்டங்களுக்கு மொத்தம் 12,328 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்தத் திட்டங்களில் பின்வருவன அடங்கும் தேஷால்பர்-ஹாஜிபிர்-லூனா மற்றும் வாயோர்-லக்பட் புதிய பாதை, செகந்திராபாத் (சனத்நகர்)- வாடி 3-வது, 4-வது பாதை, பகல்பூர் - ஜமால்பூர் 3-வது பாதை & ஃபர்கேட்டிங் - நியூ தின்சுகியா இரட்டை ரயில் பாதை.
- பயணிகள், சரக்குகள் ஆகிய இரண்டின் தடையற்ற, விரைவான போக்குவரத்தை உறுதி செய்வதை மேற்கண்ட திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
- இந்தத் திட்டங்கள் பயண வசதியை மேம்படுத்துவதோடு, சரக்குப் போக்குவரத்து செலவைக் குறைக்கும். இந்தத் திட்டங்கள் அதன் கட்டுமானத்தின் போது சுமார் 251 லட்சம் மனித நாட்கள் நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும்.
- குஜராத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பாதை, கட்ச் பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதிக்கு இணைப்பை வழங்கும். திட்டத்தின் நிறைவுக்கான காலக்கெடு 3 ஆண்டுகள் ஆகும்.
- இது குஜராத் மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, உப்பு, சிமெண்ட், நிலக்கரி போன்றவற்றின் போக்குவரத்திற்கும் உதவும். இதில் 13 புதிய ரயில் நிலையங்கள் சேர்க்கப்படும். இதனால் 866 கிராமங்கள், சுமார் 16 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.