
13th AUGUST 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சில்லறை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு
- நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 1.55 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 2.1 சதவீதமாகவும், 2024 ஜூலை மாதத்தில் 3.6 சதவீதமாகவும் இருந்தது.
- இது 2017 ஜூன் மாதத்தில் 1.46 சதவீதமாக இருந்ததற்குப் பிறகு மிகக் குறைந்த பணவீக்கமாகும்.கடந்த ஜூலை மாதத்தில் உணவு அடிப்படையிலான பணவீக்கம் -1.76 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
- சில்லறை பணவீக்கம் மற்றும் உணவு பணவீக்கம் குறைந்ததற்கு, பருப்பு வகைகள், காய்கறிகள், தானியங்கள், முட்டை, சா்க்கரை மற்றும் இனிப்புகள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடா்பு, கல்வி ஆகியவற்றின் விலைகள் குறைந்தது முக்கிய காரணமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐசிசி அமைப்பானது ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
- அதன்படி ஐ.சி.சி.யானது சமீபத்தில் ஜூலை மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பட்டியலை வெளியிட்டிருந்தது.
- இந்த பட்டியலில் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், தென் ஆப்பிரிக்காவின் வியான் முல்டர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றனர். இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஜூலை மாத சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
- சமீபத்தில் இந்தியா டெஸ்ட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ரோகித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வை அடுத்து இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
- ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-2 என்ற கணக்கில் தொடர் சமன் செய்யப்பட்டது. இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பல்வேறு சாதனைகளை படைத்தார். தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் சுப்மன் கில் 4 சதங்களை விளாசினார்.
- இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத் தியதற்காக, இந்த விருதுக்கு ஷுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதினை சுப்மன் கில் ஏற்கனவே 3 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் நலத்துறையின்கீழ் செயல்படும் மை பாரத் அமைப்பு அறிவுப்பகிர்தல், திறன் கட்டமைப்பு, இளைஞர் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றில் இணைந்து செயலாற்றுவதற்காக அல்ட்டிமேட் லீடர்ஷிப் பவுண்டேஷன் பள்ளியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- நாடு முழுவதும் 18-29 வயதுப் பிரிவினரில் ஒரு லட்சம் இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையை செயலாக்க உதவும் வகையில் இந்தக் கூட்டாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ஆளுகை, பொதுக்கொள்கை, சமுதாயத் தொழில்முனைவு, டிஜிட்டல் கல்வியறிவு, நிதிசார் கல்வியறிவு ஆகியவற்றில் கூட்டுச் செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்புதலின் கீழ் இதன் காலம் நீட்டிக்கப்படலாம்.
- தலைமைத்துவ செயல்திட்டங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்துதல், மாநாடுகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துதல், கூட்டாக இணைந்து ஆய்வு மேற்கொள்ளுதல், இளைஞர்களுக்காக சேவை ஆற்றும் நிறுவனங்களுக்கு திறன் கட்டமைப்பு பயிற்சி அளித்தல் ஆகியவற்றை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தியா முழுவதிலும் இருந்து அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறையில் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- நிர்ணயிக்கப்பட்ட தொடர்பு இடங்களில் மற்றும் கூட்டு பணிக்குழுக்கள் மூலமாக கீழ்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- தலைமைத்துவ மேம்பாட்டிற்காக இளையோர் மாநாடுகள் கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தப்படும்.
- இளைஞர்களுக்கு சேவையாற்றும் நிறவனங்கள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு திறன் கட்டமைப்பு பயிற்சி அளிக்கப்படும்.
- இளையோர் தலமைத்துவத்தில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
- இளையோர் தலைமைத்துவம் மற்றும் திறன் கட்டமைப்பில் சிறந்த நடைமுறைகள் பரவலாக்கப்படும்.
- மைபாரத் மற்றும் அல்ட்டிமேட் லீடர்ஷிப் பவுண்டேஷன் பள்ளி இடையே பயிற்சியாளர்கள், நிபுணர்கள் ஆகியோர் பரிமாறிக் கொள்ளப்படுவார்கள்.
- பயிற்சிக்கான கருவிகள், பாடத்திட்டம், மதிப்பீடு செய்தல் ஆகியன மேம்படுத்தப்படும்.
- நாடு முழுவதும் இளம் தலைவர்களை இணைப்பதற்காக நெட்வொர்க்கிங் முயற்சி மேற்கொள்ளப்படும்.
- தகுதி அடிப்படையில் அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறையில் ஆன்லைனில் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் நாட்டின் இளைஞர்களுக்கு ஆன்லைன் மூலம் தலைமைத்துவத் திறன்களில் பயிற்சி அளிக்கும் செயல்திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்படும்.
- கலாச்சார அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் தன்னாட்சி அறக்கட்டளையாக செயல்படும் இந்திராகாந்தி தேசிய கலைகள் மையம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக லக்னோவில் செயல்படும் பீர்பால் சஹானி தொல்பொருள் அறிவியல் நிறுவனத்துடன் இன்று புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு நாட்டின் அறிவியல் மற்றும் கலாச்சார சாதனைகளை எடுத்துக்காட்டும் வகையில் ஒருங்கிணைந்த அறிவியல், கலாச்சார தளத்தை உருவாக்குவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி பலதுறை ஆராய்ச்சிகள், கூட்டுநிகழ்வுகள் மற்றும் நிபுணத்துவ பகிர்வுகள் மேற்கொள்ளப்படும். ஆராய்ச்சி, ஆவணப்படுத்துதல், பாதுகாப்பு, அருங்காட்சியக மேம்பாடு, களப்பணி, ஒலி-ஒளிப் பதிவுகள், வெளியீடுகள், பயிற்சி மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஆகிய செயல்பாடுகளை இரண்டு அமைப்புகளும் கூட்டாக மேற்கொள்ளும்.