
5th JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பெருவில் கண்டறியப்பட்ட 5 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம்
- பெருநாட்டில் 3,500 ஆண்டு பழமையான நகரத்தை தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து 1970 அடி உயரத்தில் உள்ள மறைப்பகுதி மண்ணாலும், கற்களாலும் கட்டப்பட்ட வீடுகள் கட்டடங்களை கொண்டு பழங்கால நகரத்தை டிரோன் காட்சிகள் வெளியிட்டுள்ளனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.
- இந்த இடம் பசுபிக் கடலோர பகுதிகளையும், அந்தஸ் மற்றும் அமேசானை இணைக்கும் வணிக மையமாக அமைத்திருக்கலாம் என்று கணிக்கிறார்கள் ஆய்வாளர்கள். பரகா மாகாணத்தில் உள்ள பெனிகோ என்ற இந்நகரம் கிமு1200 மற்றும் 1500 ஆண்டுகள் காலத்தை ஒட்டியதாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
- அமெரிக்காவின் மிக பழமையான 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காரல் சுப் நாகரிகத்தின் தொடர்ச்சியாக இந்த இடம் பார்க்கப்படுகிறது. 5000ன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காரல் நாகரிகம் பழமையான 32 கட்டமைப்புகள் எகிப்த், இந்தியா, சுமேரியா மற்றும் சீனா நாகரிகங்களில் சம காலத்து நாகரிகமாக கருதப்படுகிறது.
- பெனிகோவில் தொழில் ஆய்வாளர்கள் தொடர்ந்து தங்களது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். காரல் நாகரிகம் இயற்கை பேரிடர்களால் அழிந்து இருக்கும் கூடும் என வல்லுநர்கள் கருதும் வேளையில், புதிதாக கண்டறியப்பட்ட இந்த தொல் நகரம் பல மர்மங்கள் கட்டவிழ்க்கும் என்று தொல்லியல் அறிஞர்கள் நம்புகிறார்கள்.
- குஜராத்தின் ஆனந்தில் நாட்டின் முதல் கூட்டுறவு பல்கலைக்கழகமான 'திரிபுவன்' சஹ்காரி பல்கலைக்கழகத்தின் பூமி பூஜையை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான ஸ்ரீ அமித் ஷா இன்று நிகழ்த்தினார்.
- இந்த நிகழ்வில் குஜராத் முதல்வர் ஸ்ரீ பூபேந்திரபாய் படேல், கூட்டுறவு அமைச்சக செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூதானி மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- இந்தியாவின் முதல் கூட்டுறவு பல்கலைக்கழகமான "திரிபுவன்" சஹ்காரி பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழக வளாகம் ரூ. 500 கோடி செலவில் கட்டப்படும்.
- உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த ஜூன் மாதத்தில் 57.8-ஆக இருந்து, ஜூலையில் 57.7-ஆகச் சரிந்தது. ஆனால், கடந்த ஆகஸ்டில் 58.6-ஆக அதிகரித்த பிஎம்ஐ, செப்டம்பரில் மீண்டும் 57.5-ஆக சரிந்தது.
- கடந்த அக்டோபரில் அது மேலும் சரிந்து 55.5-ஆக இருந்தது. இது, கடந்த 8 மாதங்கள் காணாத குறைந்தபட்ச பிஎம்ஐ எண்ணாகும். இவ்வாறு தொடா் சரிவைச் சந்தித்து வந்த பிஎம்ஐ, கடந்த நவம்பரில் 56-ஆக அதிகரித்தது.
- பின்னா் டிசம்பரில் 18 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 54.9-ஆக சரிந்தது. ஜனவரியில் 56.5-ஆகவும், பிப்ரவரியில் 56.9-ஆகவும் அதிகரித்த பிஎம்ஐ, மாா்ச் மாதத்தில் 56.4-ஆக இருந்தது. அதைத் தொடா்ந்து அது கடந்த ஏப்ரலில் 58.2-ஆக அதிகரித்து, பின்னா் மே மாதத்தில் 57.6-ஆகச் சரிந்தது.
- இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த ஜூன் மாதத்தில் 58.4-ஆகக் குறைந்துள்ளது. இது, கடந்த 14 மாதங்களில் இல்லாத அதிகபட்ச பிஎம்ஐ எண்ணாகும்.
- இதன்மூலம், தொடா்ந்து 48-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.
- கடந்த ஜூன் மாதத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான புதிய தேவைகள் உருவானதும், இதுவரை இல்லாத அளவுக்கு துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்ததும் அந்தத் துறைக்கான பிஎம்ஐ மாதங்கள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்ததில் முக்கிய பங்கு வகித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடான கானாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கிருந்து கரீபியன் தீவு நாடான டிரினிடாட்-டொபாகோ சென்றுள்ளார்.
- அங்கு மோடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் அங்கேயே பிரதமர் மோடிக்கு பாரம்பரிய அணிவகுப்பும், ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.
- 1999-ம் ஆண்டுக்குப்பிறகு இந்திய பிரதமர் ஒருவர் டிரினிடாட் டொபாகோ செல்வது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது. கவுவாவில் திரண்ட ஏராளமான இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
- சுமார் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட டிரினிடாட் டொபாகோவில் 45 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்நிகழ்ச்சியில் அந்த நாட்டு பிரதமரும், இந்தியா வம்சாவளியுமான கமலா பெர்சாத் பிசேசர், மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 4000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தான் கொண்டு சென்ற கும்பமேளா புனித நீரை அந்நாட்டு பிரதமர் கமலாவிடம் வழங்கினார்.
- 2 நாள் பயணமாக டிரினிடாட் டொபாகோ சென்ற பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருதான 'தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் டிரினிடாட் டொபாகோ' விருது வழங்கப்பட்டது.