
2nd JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
குருகிராமின் மனேசரில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களின் முதலாவது தேசிய மாநாட்டை மக்களவைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்
- ஹரியானாவின் குருகிராமில் உள்ள மனேசரில் சர்வதேச ஆட்டோமேட்டிவ் தொழில்நுட்ப மையத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களின் முதலாவது தேசிய அளவிலான மாநாட்டை நாளை (ஜூலை 03) மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தொடங்கி வைக்கிறார்.
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு மனோகர் லால், ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங், ஹரியானா சட்டப்பேரவைத் தலைவர் திரு ஹர்விந்தர் கல்யாண் மற்றும் பல பிரமுகர்கள் தொடக்க அமர்வில் கலந்து கொள்கின்றனர்.
- விரைவாக நகரமயமாக்கப்பட்டு வரும் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியப் பங்கை சுட்டிக் காட்டுவதற்கான ஒரு முக்கிய தளமாக செயல்படுவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், நகர்ப்புற நிர்வாகத்திற்கான புதுமையான அணுகுமுறைகளை ஆராய்ந்து முன்னிலைப்படுத்துதல் ஆகியவற்றையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் நாட்டின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு என்ற கருப்பொருளில் இம்மாநாடு நடைபெறுகிறது.
- தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தை மேம்பாட்டு நிறுவனமானது சாவித்ரிபாய் புலே தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் என்று அதிகாரப்பூர்மாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- மக்கள் தொடர்பை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஜார்க்கண்டின் ராஞ்சியில் ஒரு புதிய பிராந்திய மையம் 2025 ஜூலை 4 அன்று திறக்கப்பட உள்ளது.
- இந்த மையம், ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை உள்ளடக்கிய கிழக்குப் பிராந்தியங்களில் குறிப்பாக கவனம் செலுத்தும் அமைச்சகத்தின் முதன்மைத் திட்டங்களான மிஷன் சக்தி, மிஷன் வாத்சல்யா மற்றும் மிஷன் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 ஆகியவற்றின் சிறப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தேவைகளை நிறைவு செய்யும்.
- முன்னதாக, இந்த மாநிலங்களின் பயிற்சித் தேவைகள் குவஹாத்தி மற்றும் லக்னோவில் அமைந்துள்ள பிராந்திய மையங்கள் மூலம் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டன. நீண்ட பயண தூரம் காரணமாக பல செயல்பாட்டாளர்களுக்கும் போக்குவரத்து சிரமங்கள் ஏற்பட்டன.
- ஐநாவின் சர்வதேச அணுசக்தி அமைப்பின் கண்காணிப்பிலிருந்து வெளியேறுவதாக ஈரான் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த தீர்மானத்தில் அந்நாட்டு அதிபர் கையெழுத்திட்டிருக்கிறார்.
- இதன் மூலம் ஈரான், 'அணுசக்தி அமைப்பின்' கண்காணிப்பிலிருந்து வெளியேறியுள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெஷ்கியன் இது தொடர்பான சட்டத்தில் கையெழுத்திட்டிருப்பதை அந்நாட்டு அரசு தொலைக்காட்சி உறுதி செய்திருக்கிறது.
- கடந்த ஜூன் 13ம் தேதியன்று இஸ்ரேல், ஈரானின் அணு ஆய்வு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது.
- இதன் காரணமாகவே சர்வதேச அணுசக்தி அமைப்பின்' கண்காணிப்பிலிருந்து வெளியேறுவதாக ஈரான் நாடாளுமன்றம் கூறியுள்ளது.