உலகில் சிறந்த உணவு நகரங்களின் பட்டியல் 2025 / BEST FOOD CITIES IN THE WORLD 2025
TNPSCSHOUTERSJuly 02, 2025
0
உலகில் சிறந்த உணவு நகரங்களின் பட்டியல் 2025 / BEST FOOD CITIES IN THE WORLD 2025: உலகில் சிறந்த உணவுகள், சிறந்த உணவு நகரங்கள் ஆகியவற்றின் பட்டியலை பயண வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட்அட்லஸ் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் உலகில் 100 சிறந்த உணவு நகரங்களின் பட்டியலை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் 4 இடங்களை இத்தாலி நாட்டின் நகரங்கள் உள்ளன. அவற்றில் நேபிள்ஸ், 4.8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இங்கு மிக உயர்ந்த ரேட்டிங் உணவுப்பொருள் என்பது பீட்சா.
இந்தியாவில் பீட்சா இருந்தாலும் அது தோன்றியது இத்தாலியில்தான். 18 ஆம் நூற்றாண்டில் நேபிள்ஸில் மலிவான, ஊட்டச்சத்து மிக்க உணவாக பீட்சா பிரபலமடைந்தது. விவசாயிகளால் இதனை உணவாக அதிகம் எடுத்துக்கொண்டனர்.
5 ஆவது இடத்தை இந்தியாவின் மும்பை நகரம் பிடித்துள்ளது. மும்பையைப் பொருத்தவரை அதிக மதிப்பீடு பெற்ற உணவுகள் வடை பாவ், பாவ் பாஜி, ரக்தா பஜ்ஜி, பாம்பே பிரியாணி.
முதல் 50 இடங்களுக்குள் அமிர்தசரஸ் 43-வது இடத்தையும் , புது தில்லி 45- வது இடத்தையும் மற்றும் ஹைதராபாத் 50-வது இடத்தையும் பெற்றுள்ளது.
அமிர்தசரஸில் குல்ச்சா அதிக ரேட்டிங் பெற்றுள்ளது. தில்லியில் சில பிரபலமான உணவுகள் சோல் பதுரே, நிஹாரி, பட்டர் சிக்கன்.
ஹைதராபாத்தில் பிரியாணி, கெபாப், மட்டன் ஹலீம். முகலாயா, துருக்கி, அரேபிய முறை உணவுகளின் கலவையே ஹைதராபாத் உணவு வகைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து கொல்கத்தா 71 ஆவது இடத்தில் உள்ள நிலையில், சென்னைக்கு 75 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் சாலையோர உணவுகள், ரசகுல்லா, சந்தேஷ் ஆகியவை பிரபலமான உணவுகள் என்று குறிப்பிட்டுள்ளது இந்நிறுவனம்.
சென்னையில் தோசை, இட்லி, செட்டிநாடு கறி ஆகியவற்றுக்கு ரேட்டிங் அதிகம் கிடைத்துள்ளன.
எங்களுடைய இணையதள தரவுகளில் உள்ள 17,073 நகரங்களில் 15,478 உணவுகளுக்கான 477,287 உணவு ரேட்டிங் அடிப்படையில் இந்த 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் அங்குள்ள உள்ளூர் மற்றும் தேசிய உணவுகளுக்கான மதிப்பீடுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
இதேபோன்று இந்தியாவில் பல நகரங்களில் பிரபலமாக அதிக மக்களால் விருப்பப்படும் உணவுகள் பல இருக்கின்றன.
ENGLISH
BEST FOOD CITIES IN THE WORLD 2025: The travel guide company TasteAtlas has released a list of the best foods and best food cities in the world. In this way, the company has released a list of the 100 best food cities in the world.
The top 4 places are in Italian cities. Among them, Naples has topped the list with 4.8 points. The highest rated food item here is pizza. Although pizza is available in India, it originated in Italy. Pizza became popular in Naples in the 18th century as a cheap and nutritious food. It was widely consumed by farmers.
The 5th place is taken by the Indian city of Mumbai. The most rated foods in Mumbai are vada pav, pav bhaji, rakta bhaji, and bombay biryani. Amritsar has 43rd place, New Delhi has 45th place, and Hyderabad has 50th place among the top 50 places.
Kulcha has the highest rating in Amritsar. Some of the popular dishes in Delhi are shole bhadure, nihari, butter chicken. In Hyderabad, biryani, kebab, mutton haleem. Hyderabadi cuisine is said to be a blend of Mughlai, Turkish and Arabic cuisine.
Kolkata is next at 71st place, while Chennai is given 75th place. The company has mentioned that street food, rasgulla and sandesh are popular dishes in Kolkata. Dosa, idli and Chettinad curry have received high ratings in Chennai.
The company says that these 100 cities have been selected based on 477,287 food ratings for 15,478 dishes out of 17,073 cities in our online data and that the rankings have been based on the ratings for local and national dishes there. Similarly, many cities in India have many popular dishes that are loved by people.