Type Here to Get Search Results !

21st JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


21st JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம்
  • ஆசிய வெப்பமண்டலப் பகுதிகளில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கவர்ச்சிகரமான பறவைகளில் ஒன்றான இருவாச்சி பறவையினை பாதுகாப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாக, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் (ATR) இருவாச்சி பறவைகள் பாதுகாப்புக்கான சிறப்பு மையத்தை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
  • இப்புதிய முன்னெடுப்பின் மூலம் இந்தியாவில் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பில் தமிழ் நாடு முன்னணியில் உள்ளது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள வெப்பமண்டல வன சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் ஒரு பெரிய முன்னேற்றமாகும். 
  • இருவாச்சி பறவைகள் வெப்பமண்டல காடுகளில் விதைகளைப் பரப்பி, மரங்களில் மீளுருவாக்கத்திற்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. இருப்பினும், வாழ்விடச் சீரழிவு, காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த பறவை இனங்கள் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. 
  • இப்பறவைகளின் பாதுகாப்பிற்கான அவசரத்தை உணர்ந்து, அறிவியல் ஆராய்ச்சி, வாழ்விட மறுசீரமைப்பு, சமூக ஈடுபாடு மற்றும் தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மூலம் இந்த சவால்களை எதிர்கொள்ள தமிழ் நாடு ஒரு பிரத்யேக மையத்தை நிறுவுகிறது.
புதுக்கோட்டையில் 14-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
  • புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூா் வட்டம், கிள்ளனூா் அருகே கங்கம்பட்டி கிராம சிவன் கோயில் அருகே கல்வெட்டுப் பலகை ஒன்று இருப்பதாக அந்த ஊரைச் சோ்ந்த காா்த்திகேயன் அளித்த தகவலின்படி பேராசிரியா் சுப. முத்தழகன் மற்றும் தொல்லியல் ஆா்வலா்கள் நாராயணமூா்த்தி, ராகுல்பிரசாத் ஆகியோா் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
  • கங்கம்பட்டி கிராம சிவன் கோயிலையொட்டி இரண்டடி நீளமும், ஒன்றேகால் அடி அகலமும் கொண்ட கற்பலகையில் 17 வரிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில், சிதலமடைந்து கிடந்த கருணாகர சதுா்வேதிமங்கலத்தின் பெருநக்கினி ஈசுவரமுடைய நாயனாா் திருக்கோவிலை தொண்டைய முத்தரையன் என்பவா் சீா்செய்து தந்த தகவல் கூறப்பட்டுள்ளது.
  • கங்கம்பட்டி சிவன் கோயிலானது இந்தக் கல்வெட்டில் பெருநக்கினி ஈசுவரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா
  • குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக இன்று (ஜூலை 21) அறிவித்துள்ளார்.
  • அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ)ன் படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி, மருத்துவ காரணங்களுக்காக பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • ராஜிநாமா குறித்து உரிய விளக்கத்துடன் குடியரசுத் தலைவருக்கு தன்கர் கடிதம் எழுதியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel