Type Here to Get Search Results !

3rd JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


3rd JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் இரு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
  • தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசின் திருத்தச் சட்டமுன்வடிவுகள் முன்னதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
  • அதாவது, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுவார்கள்.
  • இதன்மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்டமுன்வடிவுகள் வழிவகுக்கும்.
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய  துறைகளின் சார்பாக இரண்டு சட்டமுன்வடிவுகள் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் முன்னதாக அறிமுகப்படுத்தினார்.
  • இந்த நிலையில், இரு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியா முதலாவது துருவ ஆராய்ச்சி கப்பலை கட்டமைப்பதற்காக நார்வேயின் காங்ஸ்பெர்க்குடன் ஜிஆர்எஸ்இ புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • நார்வேயின் காங்ஸ்பெர்க்குக்கும் கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் கப்பல் கட்டுபவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கலந்து கொண்டார்.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா தனது முதலாவது துருவ ஆராய்ச்சி கப்பலை உள்நாட்டிலேயே கட்டுவதற்கு வழி வகுக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel