
16th JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியாவில் 2027 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்
- தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 2021ல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கரோனா தொற்று பரவல் காரணமாக நடத்த முடியாமல் போனது. தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக இன்று அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- லடாக், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் மட்டும் 2026 அக்டோபா் 1 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் நாட்டின் பிற மாநிலங்களில் 2027-ஆம் ஆண்டு மாா்ச் 1 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஒட்டுமொத்தமாக இரண்டு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 2.8% அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதத்திற்கான நாட்டின் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி 71.12 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 2.77% வளர்ச்சியைக் குறிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
- மே மாதத்துக்கான நாட்டின் மொத்த வணிகப் பொருள்கள் மற்றும் சேவைத் துறைகளுக்கான இறக்குமதி 77.75 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 1.02% சரிவாகும்.
- மே மாதத்தில் நடந்த சரக்கு ஏற்றுமதி வளர்ச்சியில், வணிகப் பொருள்கள், கெமிக்கல்ஸ், மருந்துப் பொருள்கள், கடல் பொருள்கள், ரெடிமேட் ஆடைகள் ஆகியவை முக்கியமானவையாகும்.
- குறிப்பாக, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு பொருள்கள் ஏற்றுமதி மதிப்பு 4.57 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 54% அதிகமாகும். கடந்த ஆண்டு மே மாதத்தில் 2.97 பில்லியன் டாலராக இது இருந்தது.
- இதேபோன்று கெமிக்கல் பொருள்கள் ஏற்றுமதி 16% அதிகரித்து 2.68 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இது 2.31 பில்லியனாக இருந்தது.
- மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி 7.38% அதிகரித்து 2.48 பில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 2.31 பில்லியனாக இருந்தது.
- கடல் பொருள்கள் ஏற்றுமதியும் 26.79% அதிகரித்து 0.73 பில்லியனாகவும், ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி 11.35% அதிகரித்து 1.51 பில்லியன் டாலராகவும் உள்ளது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண்ணின் அடிப்படையில் 2025 மே மாதத்திற்கான (2024 மே மாதத்தை விட) பணவீக்க விகிதம் 0.39% ஆக உள்ளது.
- 2025 மே மாதத்தில் முதன்மையான உணவுப் பொருட்கள், மின்சாரம், பிற உற்பத்தி பொருட்கள், ரசாயனப் பொருட்கள், பிற போக்குவரத்து உபகரணங்கள், உணவுப் பொருள் அல்லாத பொருட்களின் உற்பத்தி போன்றவற்றின் விலை உயர்வு, பணவீக்கத்தின் நேர்மறையான விகிதத்திற்கு காரணமாகும்.
- முதன்மைப் பொருட்கள் (சிறப்பு நிலை 22.62%):- கனிமங்கள் (-7.16%) மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை (-0.63%) 2025 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 மே மாதத்தில் குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை (0.56%) 2025 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 மே மாதத்தில் அதிகரித்துள்ளது,
- எரிபொருள் & மின்சக்தி ( 13.15%:- தாது எண்ணெய்களின் விலை (-2.06%) 2025 ஏப்ரல் உடன் ஒப்பிடும்போது 2025 மே மாதத்தில் குறைந்துள்ளது. நிலக்கரி (0.81%) மற்றும் மின்சக்தியின் விலை (0.80%) 2025 ஏப்ரல் உடன் ஒப்பிடும்போது 2025 மே மாதத்தில் அதிகரித்துள்ளது.
- உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் (சிறப்பு நிலை 64.23%):- பிற உலோகம் அல்லாத கனிமப் பொருட்களின் உற்பத்தி; கணினி, மின்னணு, கண்ணாடி இழைப் பொருட்கள்; மருந்துகள், ரசாயன மற்றும் தாவரவியல் பொருட்கள், ஜவுளி போன்றவை. மாதந்தோறும் விலை உயர்ந்தன.
- உணவுப் பொருட்கள் உற்பத்தி, அடிப்படை உலோகங்கள், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயன பொருட்கள், மின் உபகரணங்கள் போன்றவை விலையில் சரிவை கண்டன.
- மொத்த விலை உணவு குறியீடு (சிறப்பு நிலை 24.38%):- உணவுப் பொருள் குறியீடு ஏப்ரல் மாதத்தில் 189.3 ல் இருந்து மே மாதத்தில் 189.5 ஆக அதிகரித்துள்ளது.
- மொத்த விலை உணவு குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட பணவீக்க விகிதம் 2025 ஏப்ரல் மாதத்தில் 2.55% இருந்து 2025 மே மாதத்தில் 1.72% ஆகக் குறைந்துள்ளது.
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ருத்ராஷ்ட்ரா' என்ற ட்ரோனை இந்திய ராணுவம் நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இந்த ட்ரோனால் செங்குத்தாக மேலெழும்பி பறந்து சென்று, இலக்கை நெருங்கியதும் செங்குத்தாக தரையிறங்கி துல்லிய தாக்குதல் நடத்த முடியும்.
- 'ருத்ராஷ்ட்ரா' என்ற ட்ரோனை சோலார் ஏரோஸ்பேஸ் அண்ட் டிபன்ஸ் லிமிடெட்(எஸ்டிஏஎல்) நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயார் செய்தது. இது செங்குத்தாக மேலெழும்பி மற்றும் தரையிறங்கும் திறன் படைத்தது.
- இந்த ஏவுகணை போக்ரானில் கள பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்தது. பரிசோதனையில் 50 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தகர்த்தது. இலக்கு தூரத்தை அதிகரித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளும் வெற்றிகரமாக முடிந்தன.
- ருத்ராஷ்ட்ரா ட்ரோனால் 1.5 மணி நேரம் பறந்து சென்று 170 கி.மீ இலக்கை தாக்க முடியும். இந்த ட்ரோனால் தன்னிச்சையாக செயல்பட்டு தாக்குதல் நடத்தியபின் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வர முடியும். அதோடு இதில் உள்ள கேமிரா மூலம் தாக்குதல் காட்சிகளை நேரடியாக காணலாம்.
- மேக் இன் இந்தியா திட்டத்தால், தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோனால், எதிரி நாட்டுக்குள் 100 கி.மீ தூரம் சென்று இலக்குகள் மற்றும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த முடியும்.
- இந்த பரிசோதனையை பார்வையிட ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது. இது அவர்களுக்கு ஊக்குவிப்பாகவும், புதுமையை கண்டுபிடிக்கவும் உதவும். இதன் மூலம் ட்ரோன்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பது குறையும்.
- நவீனகால போர் முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் முக்கிய பங்கு வகிப்பதால், அதி நவீன ட்ரோன்களை தயாரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் டரோன் தயாரிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு இந்திய ராணுவம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
- 3 நாடுகளுக்கான 5 நாட்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரசுக்கு பிரதமா் மோடி சென்றுள்ளார்.
- இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து தலைநகா் நிகோசியாவில் சைப்ரஸ் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸ் மற்றும் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
- இந்நிலையில், இருநாட்டு உறவின் அடையாளமாக சைப்ரஸ் நாட்டின் உயரிய 'கிராண்ட் க்ராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் III' விருதை அந்நாட்டின் அதிபர் கிறிஸ்டோடெளலிடிஸ், பிரதமர் மோடிக்கு அளித்து கெளரவித்துள்ளார்.
- பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின்படி மலைப்பாங்கான நாடுகளில் புலிகள் உள்ளிட்ட பெரும் பூனைகளைப் பாதுகாப்பதற்காக, சர்வதேச பெரும் பூனைகள் கூட்டமைப்பின் முதல் மாநாடு இன்று புதுதில்லியில் நடைபெற்றது.
- மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில், பூடான், கம்போடியா எஸ்வதினி, கினியா, இந்தியா, லைபீரியா, சுரினாம், சோமாலியா, கஜகஸ்தான் உள்ளிட்ட 9 நாடுகளின் அமைச்சர்கள் குழு பங்கேற்றது.
- மத்திய அரசால் உருவாக்கப்பட்ட சர்வதேச பெரும் புலிகள் கூட்டமைப்பானது புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை, ஜாகுவார் உள்ளிட்ட ஏழு பெரிய பூனை இனங்களை பாதுகாக்கும் 95 நாடுகள் சேர்ந்த கூட்டமைப்பாகும்.