
8th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா மாற்றம்
- திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் இன்று (மே 8) இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமங்கள், சுரங்கம் மற்றும் இயற்கைவளத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
- ஆனால் கல்வி நிறுவனம் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனத்தால் அனுமதி கட்டணம் வசூலித்து நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் கேளிக்கை வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் அதிகாரம் அளிக்க சட்டங்கள் எதுவும் தற்போது இல்லை.
- எனவே அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதிக் கட்டணத்தின் மீது 10 சதவீதம் கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிவகை செய்ய அரசு முடிவெடுத்தது.
- இதற்காக தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரிச்சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது.
- அதன்படி, கல்வி நிறுவனம், சங்கம், குழுமம், யாருடைய பெயரிலாவது அமைக்கப்பட்டுள்ள கழகம் போன்ற நிறுவனங்களின் வளாகங்கள் மற்றும் நுழைவுச்சீட்டு அல்லது பங்களிப்பு அல்லது சந்தா போன்ற கட்டணங்கள் செலுத்த வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சியின் அனுமதிக் கட்டணத்தில் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.
- இந்நிலையில், இந்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
- கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) நிறுவனம் உள்நாட்டிலேயே வடிவமைக்கும் எட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல்களில் முதலாவது கப்பல் இன்று (மே 08, 2025) காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது.
- இந்தப் போர்க்கப்பல் எல் அண்ட் டி, ஜிஆர்எஸ்இ பொதுத்துறை, தனியார் துறை ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு உற்பத்தியில் தனியார், பொதுத்துறை கூட்டு செயல்பாட்டின் வெற்றியை நிரூபிக்கிறது.
- இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாக மகாராஷ்டிராவின் வசாய் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டையான ‘அர்னாலா’வின் பெயர் இந்தக் கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.
- 77 மீ நீளமுள்ள இந்தப் போர்க்கப்பல், டீசல் இஞ்ஜின்-வாட்டர்ஜெட் ஆகிய இரண்டின் அடிப்படையில் இயக்கப்படும் மிகப்பெரிய கடற்படை போர்க்கப்பலாகும்.
- இந்தக் கப்பல் நீருக்கடியில் கண்காணிப்பு, தேடல், மீட்பு நடவடிக்கைகள், குறைந்த தீவிரம் கொண்ட கடல்சார் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் இணைவது இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை கணிசமாக அதிகரிக்கும்.
- 80%-க்கும் அதிகமான உள்நாட்டு உள்ளடக்கத்துடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கப்பல் தற்சார்பு இந்தியா என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்துகிறது.