
7th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் ஓராண்டு நீடிப்பு
- நமது நாட்டில் உள்ள முக்கியமான புலனாய்வு அமைப்புகளில் ஒன்று சிபிஐ. நாட்டின் பல முக்கிய வழக்குகளை சிபிஐ வெற்றிகரமாக விசாரித்துள்ளன. சிக்கலான வழக்குகளிலும் கூட குற்றவாளிகளை சிபிஐ சரியாக அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கும்.
- இந்த சிபிஐ அமைப்பின் இயக்குநராக பிரவீன் சூட் இருந்தார். கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற இவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் இருந்தது.
- அதன்படி அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், அதை ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- கடந்த திங்கள்கிழமை புதிய சிபிஐ இயக்குநரை நியமிப்பது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- இதில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தான் பிரவீன் சூட் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நாட்டில் தொழிற்கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஒரு முக்கிய படியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தொழில் பயிற்சி நிறுவனங்களின் (ஐடிஐ) மேம்பாடு மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஐந்து தேசிய திறன் மேம்பாட்டு மையங்களை அமைத்தல் ஆகியவற்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- 2024-25-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, மத்திய அரசு நிதியுதவியுடன் தேசிய தொழில் பயிற்சி நிறுவனங்களின் (ஐடிஐ) மேம்பாடு, ஐந்து தேசிய திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு மையங்களை அமைத்தல் ஆகியவை செயல்படுத்தப்படும்.
- 2024-25 ஆம் ஆண்டு பட்ஜெட் மற்றும் 2025-26-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ரூ.60,000 கோடி இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- இதில் மத்திய அரசு பங்களிப்பு: ரூ.30,000 கோடி, மாநில அரசின் பங்களிப்பு: ரூ.20,000 கோடி மற்றும் தொழில்துறை பங்களிப்பு: ரூ.10,000 கோடி ஆகும்.
- இந்தத் திட்டம் 1,000 அரசு ஐடிஐ-களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்.
- மாநில அரசுகள் மற்றும் தொழில்துறையுடன் இணைந்து, தற்போதுள்ள ஐடிஐக்களை அரசுக்குச் சொந்தமான, தொழில்துறையால் நிர்வகிக்கப்படும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களாக நிலைநிறுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதன் மூலம் ஐந்தாண்டு காலத்தில், 20 லட்சம் இளைஞர்கள் திறன் மேம்பாடு பெறுவார்கள்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஐஐடி திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்), ஐஐடி பாலக்காடு (கேரளா), ஐஐடி பிலாய் (சத்தீஸ்கர்), ஐஐடி ஜம்மு (ஜம்மு – காஷ்மீர்), ஐஐடி தார்வாட் (கர்நாடகா) ஆகிய புதிதாக நிறுவப்பட்ட ஐந்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐஐடி) கல்வி, உள்கட்டமைப்பு திறனை விரிவுபடுத்துவதற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
- இதற்கான மொத்த செலவு 2025-26 முதல் 2028-29 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு 11,828.79 கோடி ரூபாய் ஆகும். இந்த ஐஐடிகளில் 130 ஆசிரியப் பணியிடங்களை உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- தொழில்துறைக்கும், கல்வித்துறைக்கும் இணைப்பை வலுப்படுத்த ஐந்து புதிய அதிநவீன ஆராய்ச்சி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஐஐடி-க்களில் மாணவர் எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் 6500-க்கும் கூடுதலாக அதிகரிக்கப்படும்.
- இதன் மூலம் முதல் ஆண்டில் 1364 மாணவர்கள், 2-ம் ஆண்டில் 1738 மாணவர்கள், 3-ம் ஆண்டில் 1767 மாணவர்கள் மற்றும் 4-ம் ஆண்டில் 1707 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
- புதிய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும், இந்த ஐந்து ஐஐடிகளிலும் தற்போதைய மாணவர் எண்ணிக்கையான 7,111 என்பது 13,687 ஆக அதிகரிக்கும். அதாவது 6,576 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்படுவார்கள். இதன் மூலம் மொத்த இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
- மத்திய / மாநில அரசுகளின் அனல்மின் திட்டங்கள், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு புதிதாக நிலக்கரி இணைப்புகளை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- மத்திய/மாநில அரசுகளின் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட விலையில் நிலக்கரி இணைப்பு, அறிவிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பிரீமியம் அடிப்படையில் அனைத்து மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் நிலக்கரி இணைப்பு என இரு வழிகள் திருத்தப்பட்ட ஷக்தி கொள்கையின் கீழ் முன்மொழியப்பட்டுள்ளன.
- இந்த முடிவுகளை நடைமுறைப்படுத்த இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- சம்மந்தப்பட்ட துறைகள், நிறுவனங்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள் ஆகியவற்றுக்கு திருத்தப்பட்ட ஷக்தி கொள்கையை பரவலாகக் கொண்டு செல்லும் வகையில் சம்மந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் இது பற்றி எடுத்துரைக்கப்படும்.
- திருத்தியமைக்கப்பட்ட கொள்கை காரணமாக நிலக்கரி நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு எதுவும் இருக்காது. இந்தக் கொள்கையின் மூலம் அனல்மின் நிலையங்கள், ரயில்வே, இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேணி நிலக்கரி நிறுவனம், இறுதி பயன்பாட்டாளர்கள் மாநில அரசுகள் பயனடையும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.05.2025) காணொலிக் காட்சி மூலம் உலகளாவிய விண்வெளி ஆய்வுக்கான மாநாடான ஜிஎல்இஎக்ஸ் (GLEX) - 2025-ல் உரையாற்றினார்.
- உலகெங்கிலும் இருந்து வந்திருந்த புகழ்பெற்ற பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்களை வரவேற்ற அவர், இந்தியாவின் குறிப்பிடத்தக்க விண்வெளிப் பயணங்கள் குறித்து எடுத்துரைத்தார்.