ஆபரேஷன் சிந்தூர் / OPERATION SINDOOR: பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நமது பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களின் மீது "ஆப்ரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் 07.05.2025 அன்று அதிகாலை 1.05 மணி அளவில் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
அதாவது, ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் வெறும் 25 நிமிடங்களில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளான முசாபராபாத், கோட்லி, பஹவல்பூர், ராவலகோட், சக்ஸ்வரி, பிம்பர், நீலம் பள்ளத்தாக்கு, ஜீலம், சக்வால் போன்ற 9 இடங்களில் 24 குண்டுகளை செலுத்தி தாக்குதல் தொடுத்துள்ளது.
இந்த முகாம்கள் அனைத்தும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாதிகள் தங்கி பயிற்சி பெற்று வந்த முகாம்கள் என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 70-80 பயங்கரவாதிகள் பலியாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்களே தாக்கப்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தானின் ராணுவ முகாம்களோ, உள்கட்டமைப்புகளின் மீதோ தாக்குதல் நடத்தவில்லை என்றும் இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியதன் வீடியோ ஆதாரத்தையும் இந்திய ராணுவம் வெளியிட்டிருக்கிறது.
பாகிஸ்தானின் இதயத்தையே இந்தியா தாக்கியிருப்பதாகவும், இந்த ஆப்ரேஷன் சிந்தூர் அதிதீவிரமான தாக்குதலை தொடுத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக பார்க்கப்படுகிறது.
ரஃபேல் போர் விமானங்களில் பொருத்தப்பட்ட ஸ்கால்ப் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் குண்டுகள் மூலம் இந்த ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து நடத்தியிருக்கிறது.
அதாவது, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் பொதுமக்களை பாதிக்காமல், உளவுத்துறையின் மூலம் கிடைத்த பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை மட்டும் குறிவைத்து தாக்கவே, இந்த ஸ்கால்ப் ஏவுகணையையும், துல்லியமாக வழிநடத்தப்படும் ஹேமர் குண்டுகளையும் இந்தியா பயன்படுத்தியிருக்கிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு பாலகோட் வான்வழித் தாக்குதலின் போது இந்தியா காலாவதியான மிராஜ் 2000 (Mirage 2000) போர் விமானங்களை கொண்டே பயங்கரவாதிகளின் ஏவுதளங்களை தாக்கியது.
ஆனால் இந்த முறை வலுவான ரஃபேல் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் தொடுத்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயருக்கான காரணம்
ஆபரேஷன் சிந்தூர் / OPERATION SINDOOR: கணவர்களை கொன்று பெண்களின் குங்குமத்தை அழித்தவர்களை பழி தீர்க்கவே ஆபரேஷன் சிந்தூர் பெயரிடப்பட்டுள்ளது. 'சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயர் குறியீட்டு மதிப்பைக் கொண்டுள்ளது.
சிந்தூர் அல்லது குங்குமம் என்பது திருமணமான இந்துப் பெண்கள் பாரம்பரியமாக நெற்றியில் அணியும் ஒரு சிவப்புப் பொடியாகும். இந்து மதத்திலும் குங்குமத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
திருமண உறவை உறுதி செய்வது முதல் வெற்றியை குறிப்பது வரை அனைத்திலும் குங்குமத்தின் பங்கு பெரிது. இருப்பினும், இந்தச் சூழலில், பஹல்காம் தாக்குதலின் போது ஆண்களை குறி வைத்து கொன்று பெண்களின் குங்குமத்தை அழித்ததை இந்தப் பெயர் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. தீவிரவாதிகள் பஹல்காமில் அப்பாவிகளை கொல்வதற்கு முன்பு பெயர் மற்றும் மதத்தால் அடையாளம் கண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடுவதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களை கௌரவிப்பதையும், நீதி மற்றும் நினைவுச் செய்தியை அனுப்புவதையும் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.
ஸ்கால்ப் ஏவுகணை
ஆபரேஷன் சிந்தூர் / OPERATION SINDOOR: ஸ்கால்ப் ஏவுகணையை Storm Shadow என்றும் அழைக்கின்றனர். ஸ்கால்ப் என்பது நீண்ட தூர ஆழமான தாக்குதல்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வான்வழி ஏவுகணை ஆகும்.
இது உலகெங்கிலும் உள்ள பாதுகாப்புப் படைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது இதன் சிறப்பம்சமே, இரவிலும், அனைத்து விதமான வானிலையிலும் இயக்கப்படும் திறன் கொண்டது என்பதே ஆகும்.
ஸ்கால்ப் ஏவுகணையை கொண்டு 450 கி.மீ., தூரம் வரை தாக்குதல் தொடுக்கலாம். இதன் ஏவுகணையின் துல்லியத்தன்மைக்கு முதன்மையான காரணம் அதன் மேம்பட்ட வழிசெலுத்தல் அமைப்பாகும்.
இது INS, GPS மற்றும் நிலப்பரப்பு குறிப்புகளை பயன்படுத்தி இலக்குகளை துல்லியமாக தாக்குகிறது. இந்த ஏவுகணை ஐரோப்பிய கூட்டமைப்பான MBDA மூலம் தயாரிக்கப்படுகிறது.
தாக்குதலில் இருந்து தப்பிக்க எதிரிகள் உருவாக்கிய மிகவும் சாதுரியமான பதுங்கு குழிகள், வெடிபொருள் கிடங்குகள் உள்ளிட்டவற்றை ஊடுருவிச் செல்வதற்கு இது ஒரு சிறந்த ஆயுதமாகக் கருதப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு முதல்முறையாக ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளை தாக்க இதே ஏவுகணையைதான் உக்ரைன் பயன்படுத்தியது.
450 கிலோ எடையுள்ள வெடிமருந்தை சுமந்து செல்லக்கூடிய இந்த ஏவுகணை, ஜெட் விமானத்தில் இருந்து ஏவப்படும்போது தாழ்வாகப் பறக்கும் என்பதால் இதனை கண்டறிவதும் கடினம்.
ஹேமர் வெடிகுண்டின் சிறப்பம்சம்
ஆபரேஷன் சிந்தூர் / OPERATION SINDOOR: ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஹேமர் வெடிகுண்டு என்பது (HAMMER - Highly Agile Modular Munition Extended Range), அனைத்துவிதமான வானிலையிலும் வானில் இருந்து தரைக்கு துல்லியமாக வழிநடத்தப்படும் ஒன்றாகும்.
சறுக்கு குண்டு என்றும் அழைக்கப்படும் இது 70 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. மேலும், 250 கிலோ, 500 கிலோ, 1,000 கிலோ என நிலையான குண்டுகளில் பொருத்தப்படலாம்.
பிரான்ஸ் நாட்டின் நிறுவனமான சஃப்ரான் தயாரித்த இந்த வெடிகுண்டு, கரடுமுரடான நிலப்பரப்பில் குறைந்த உயரத்தில் இருந்தும் ஏவலாம். இதனை இடைமறிப்பது கடினம். கோட்டை போன்ற வலிமையான கட்டமைப்புகளையும் இதனால் ஊடுருவ முடியும் என்பதே இதை இதன் சிறப்பம்சம்.
புல்வாமா, பகல்காம் பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஜெய்ஷ் மற்றும் லஷ்கர் போன்றவற்றின் தலைமையகங்களை தரைமட்டமாக்கியது மட்டுமின்றி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பில் இவ்வளவு பெரிய சேதத்தை இந்தியா ஏற்படுத்தியதற்கான காரணமும், இந்த ஹேமர் வெடிகுண்டுதான்.
ENGLISH
OPERATION SINDOOR: In retaliation to the Pahalgam terrorist attack, the Indian Army carried out an airstrike on 9 terrorist camps in Pakistan at 1.05 am on 07.05.2025 under the name of "Operation Sindoor".
That is, in just 25 minutes, through Operation Sindoor, 24 bombs were dropped on 9 locations in Pakistan and Pakistan-occupied areas such as Muzaffarabad, Kotli, Bahawalpur, Rawalakot, Sakswari, Bhimber, Neelum Valley, Jhelum, and Chakwal.
The Indian Army has stated that all these camps were camps where Lashkar-e-Taiba (LeT) and Jaish-e-Mohammed (JeM) terrorists were staying and training. Reports also indicate that 70-80 terrorists were killed in this attack.
The Indian Army also said that the attack targeted terrorist camps, did not target Pakistani military camps or infrastructure, and that no civilians were killed in the attack. The Indian Army has also released video evidence of the attack.
It is believed that India has struck the heart of Pakistan, and Operation Sindh is considered to have had a major impact by launching a very intense attack. The Indian Air Force and the Indian Navy have jointly carried out this Operation Sindh attack using Scalp missiles and Hammer bombs mounted on Rafale fighter jets.
That is, India has used this Scalp missile and precision-guided Hammer bombs to target only the locations of terrorists found through intelligence, without affecting civilians in Pakistan and Pakistani-occupied areas.
During the Balakot airstrike in 2019, India used outdated Mirage 2000 fighter jets to strike at terrorist launch pads. But it should also be noted that this time the attack was carried out with powerful Rafale fighter jets.
Reason for the name Operation Sindoor
OPERATION SINDOOR: Operation Sindoor is named to avenge those who killed their husbands and destroyed the saffron of women. The code name 'Sindoor' has symbolic value. Sindoor or saffron is a red powder that married Hindu women traditionally wear on their foreheads. Saffron also has great importance in Hinduism.
Saffron plays a big role in everything from securing marital ties to signifying success. However, in this context, the name seems to refer to the targeted killing of men during the Pahalgam attack and destroying the saffron of women.
The terrorists were said to have identified the innocent people in Pahalgam by name and religion before killing them. In this case, by naming the attack Operation Sindoor, India is believed to be aiming to honor the victims and send a message of justice and remembrance.
Scalp Missile
OPERATION SINDOOR: The Scalp missile, also known as Storm Shadow, is an air-to-air missile designed for long-range deep strikes. It is used by security forces around the world. Its special feature is that it can be operated at night and in all weather conditions.
The Scalp missile can be used to strike targets up to a distance of 450 km. The primary reason for the missile's accuracy is its advanced navigation system. It uses INS, GPS and terrain references to accurately hit targets. The missile is manufactured by the European consortium MBDA.
It is considered an excellent weapon for penetrating the most sophisticated bunkers and explosive depots created by the enemy to escape from attack.
Moreover, Ukraine used this same missile to attack targets inside Russia for the first time last year. This missile, which can carry a 450 kg warhead, is difficult to detect because it flies low when launched from a jet aircraft.
Special features of the Hammer bomb
OPERATION SINDOOR: The Hammer bomb used in the Operation Sindhur attack is the HAMMER (Highly Agile Modular Munition Extended Range) bomb, which can be accurately guided from air to ground in all weather conditions. Also known as a glide bomb, it has a range of up to 70 km. Moreover, it can be mounted on fixed bombs of 250 kg, 500 kg, and 1,000 kg.
This bomb, manufactured by the French company Safran, can be launched from low altitudes over rough terrain. It is difficult to intercept. Its special feature is that it can penetrate strong structures like forts.
This Hammer bomb is the reason why India not only destroyed the headquarters of Jaish and Lashkar, which were the masterminds of the Pulwama and Bagalkot terror attacks, but also caused such huge damage to the terrorist infrastructure in Pakistan.