Type Here to Get Search Results !

6th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


6th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாட்டில் மே 5 ஆம் தேதி வணிகர் நாளாக விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
  • வணிகர் சங்க கோரிக்கை மாநாடு மதுராந்தகத்தில் இன்று (மே 5) நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது, ''தமிழக மக்களுக்கும் வணிகர்களுக்கும் வணிகர் நாள் வாழ்த்துகள். மே 5ஆம் தேதியை வணிகர் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை ஏற்று விரைவில் அரசாணை வெளியிடப்படும்.
  • வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினர்களுக்கான உதவித்தொகை ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கை கால நிர்ணயம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.
  • சென்னை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில் கடைகள் அமைக்க வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இதேபோன்று பேரூராட்சி, ஊராட்சிகளுக்கும் குழு அமைக்கப்படும்.
  • 9 சதுர மிட்டருக்கு மிகாமல் வைக்கப்படும் பெயர்ப் பலகைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
  • வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்குவதற்கான அனுமதி மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
  • எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை அமைதி மாநிலமாக மாற்றியிருக்கிறோம்'' என மு.க. ஸ்டாலின் பேசினார்.
கடலுக்கடியில் எம்.ஐ.ஜி.எம் வெடிகுண்டு சோதனை வெற்றி
  • இந்திய கடற்படை தங்களது ஆயுத சோதனைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஒ. மற்றும் இந்திய கடற்படை இணைந்து உருவாக்கிய எம்.ஐ.ஜி.எம். என்ற சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஆயுதத்தை சோதனை செய்து வெற்றி கண்டுள்ளார்கள்.
  • இந்த சோதனை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. எம்.ஐ.ஜி.எம். குறைந்த அளவிலான வெடிபொருளுடன் கடலுக்கடியில் சோதனை செய்யப்பட்டது. 
  • இது கடலுக்கு அடியில் வெடிக்கும் கண்ணிவெடி தாக்குதல் ஆகும். மேலும் எதிரி நாட்டின் அதிநவீன போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை குறிவைத்து தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐஎம்எஃப் வாரியத்தில் பரமேஸ்வரன் ஐயா் செயல் இயக்குநராக நியமனம்
  • மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான கே.வி.சுப்பிரமணியன், ஐஎம்எஃப்பில் இந்தியா, இலங்கை, பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகள் அடங்கிய குழு சாா்பில் செயல் இயக்குநராக இருந்தாா்.
  • அவரின் பதவிக்காலம் நிறைவடைய 6 மாதங்கள் உள்ள நிலையில், அந்தப் பதிவியில் இருந்து அவரை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அவரின் பதவி நீக்கத்துக்கான காரணம் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.
  • இந்நிலையில், உலக வங்கியின் செயல் இயக்குநராக உள்ள பரமேஸ்வரன் ஐயருக்கு, ஐஎம்எஃப் வாரியத்தில் இந்தியாவின் நியமன இயக்குநராக தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel