
20th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
- பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
- அப்போது பேசிய அவர், இந்த ஆண்டின் கருப்பொருளான 'ஆரோக்கியத்திற்கான ஒரு உலகம்' என்பதை எடுத்துரைத்து, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
- நீதித்துறை பணியில் சேர குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இந்த தீர்ப்பின்படி, சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு ஆஜராவதற்கு, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும்.
- இருப்பினும், இந்த தீர்ப்பு தற்போது தொடங்கி தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நீதித்துறை பணியமர்த்தலுக்கு பொருந்தாது.
- அதன்படி, உயர் நீதிமன்றங்கள் ஏற்கனவே ஜூனியர் பிரிவு சிவில் நீதிபதிகள் நியமன நடைமுறையைத் தொடங்கியுள்ளதால், தற்போதைய நியமனத்துக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் குறைந்தபட்ச நடைமுறைத் தேவை பொருந்தாது.
- அதேவேளையில், அடுத்த முறை தொடங்கப்படும் நியமன நடைமுறையில் இருந்து இந்த தீர்ப்பு பொருந்தும் என்று நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.