Type Here to Get Search Results !

13th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


13th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஏப்ரல், 2025 மாதத்திற்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண்
  • 2024 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2025 ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆண்டுக்கு ஆண்டு என்ற முறையில் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் 3.16% ஆக உள்ளது. 
  • 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 18 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது. 2019 ஜூலை மாதத்திற்கு பிறகு இது மிகக் குறைந்த பணவீக்க விகிதமாகும்.
  • 2024 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025 ஏப்ரல் மாதத்திற்கான உணவு பணவீக்க விகிதம் 1.78%-ஆக இருந்தது. 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 ஏப்ரல் மாதத்தில் உணவுப் பணவீக்க விகிதம் 91 அடிப்படைப் புள்ளிகள் சரிவுடன் காணப்படுகிறது.
  • 2025 ஏப்ரலில் பணவீக்கம் மற்றும் உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சரிவுக்கு காய்கறிகள், பருப்பு வகைகள், பொருட்கள், பழங்கள், இறைச்சி, மீன், தானியங்கள் மற்றும் தயாரிப்புகளின் பணவீக்கம் குறைந்ததே முக்கியக் காரணமாகும்.
  • 2025 ஏப்ரல் மாதம் கிராமப்புற உணவுப் பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்பட்டது. 2025 மார்ச் மாதத்தில் 2.82% ஆக இருந்த கிராமப்புற உணவுப் பணவீக்கம் 2025 ஏப்ரல்-இல் 1.85% ஆகக் காணப்படுகிறது.
  • 2025 மார்ச் இல் நகர்ப்புற பணவீக்கம் 3.43%-லிருந்த நிலையில், 2025 ஏப்ரலில் அது 3.36%-ஆக குறைந்து காணப்பட்டது. உணவுப் பணவீக்கம் 2025 மார்ச் மாதத்தில்  2.48%-லிருந்து 2025 ஏப்ரலில் 1.64% ஆக குறைந்துள்ளது.
  • 2025 ஏப்ரல் மாதத்தில் வீட்டுவசதி பணவீக்க விகிதம் 3.00% ஆக இருந்தது. இது 2025 மார்ச் மாதத்தில் விகிதம் 3.03% ஆக இருந்தது.
  • 2025 ஏப்ரல் மாதத்திற்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற கல்வி பணவீக்க விகிதம் 4.13%-மாகும்.  இது 2025 மார்ச் மாதத்தில் 3.98%-ஆக இருந்தது.
  • 2025 ஏப்ரல் மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார பணவீக்க விகிதம் 4.25%-ஆகும். இது 2025 மார்ச் மாதத்தில் 4.26%-ஆக இருந்தது.
  • 2025 ஏப்ரல் மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் தொடர்பு பணவீக்க விகிதம் 3.73%-ஆகும். இது 2025 மார்ச் மாதத்தில் விகிதம் 3.36%-ஆக இருந்தது.
  • 2025 ஏப்ரல் மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற எரிபொருள் மற்றும் மின் கட்டண பணவீக்க விகிதம் 2.92%-ஆகும். இது 2025 மார்ச் மாதத்தில் 1.42%-மாக இருந்தது.
90 நாள்களுக்கு வா்த்தகப் போா் நிறுத்தம் -  அமெரிக்கா சீனா ஒப்புதல்
  • அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு பதிலடியாக சீனா மட்டுமே அந்த நாட்டுப் பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி விதித்தது. இதன் காரணமாக, உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வா்த்தகப் போா் தீவிரமடைந்தது.
  • இந்தச் சூழலில், பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாடுகளும் ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் கடந்த சனிக்கிழமை முதல் பேச்சுவாா்த்தை நடத்திவந்தன. அதன் பலனாக தற்போது கூடுதல் வரி விதிப்புகளை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க இரு நாடுகளும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளன.
  • இந்தப் பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்னரே, சீன பொருள்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள 145 சதவீதமாக கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாகக் குறைப்பது குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel