
6th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
- உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
- இதைத் தொடா்ந்து, ரூ.727 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடக்கி வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
- ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பனில் கடல் நடுவே ரூ.550 கோடி செலவில் புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. பழைய பாம்பன் ரயில் பாலத்தில் அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டதால் ராமேஸ்வரம் பாம்பன் இடையே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
- இந்த புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை பிரிவில் புதிய 4 வழிச்சாலை திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- மேலும் விழுப்புரம் புதுச்சேரி இடையே அமைக்கப்பட்ட 4 வழிச்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சோழபுரம் தஞ்சை 4 வழிச்சாலை திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.