Type Here to Get Search Results !

உலக சுகாதார தினம் 2024 / WORLD HEALTH DAY 2024

 

  • உலக சுகாதார தினம் 2024 / WORLD HEALTH DAY 2024: 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலக சுகாதார அமைப்பின் (World Health Organization) உருவாக்கத்தை கொண்டாடும் விதமாக 'உலக சுகாதார தினம்' ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • WHO என்று பரவலாக அறியப்படும் இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தீமின் அடிப்படையில் இந்த நாளை கொண்டாடுகிறது.
  • சுற்றுசூழல் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டுமே கிட்டத்தட்ட 1.3 கோடி அளவுக்கு உலகம் முழுவதிலும் மக்கள் இறக்கிறார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது. 

குளோபல் வார்மிங்கால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்?

  • உலக சுகாதார தினம் 2024 / WORLD HEALTH DAY 2024: பூவி வெப்பமடைவதை தான் குளோபல் வார்மிங் என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 
  • பூமியின் தட்ப வெப்பம் அதிகரிக்கும் பொழுது ட்ராபிகல் இடங்களில் மனிதர்களின் ஆரோக்கியம் கேள்விக்குரியதாக மாறி வருகிறது. குளோபல் வார்மிங் பிரச்சனையால் நேரடியாக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
  • உதாரணமாக இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து அதனால் ஏற்படக்கூடிய தீவிரமான நோய்களான மலேரியா, டெங்கு காய்ச்சல் மற்றும் வேறு சில நோய் கிருமிகளால் உண்டாகும் நோய்கள் யாவும் மனிதர்களை பெரிய அளவில் பாதிக்கிறது. 
  • அதிகப்படியான வெப்பத்தால் பகல் பொழுது மட்டும் அன்றி இரவிலும் குளிச்சி இன்றி கணிசமான அளவு வெப்பமான சூழலே நிலவி வருகிறது. 
  • இதனால் விவசாயம், உணவு பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆபத்து நேரும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எல்லா மனிதர்களாலும் நாட்பட்ட வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது. ஏற்கனவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அதிகமான வெப்பம், உடல்நலத்தை மோசமாக்கும்.

பின்தங்கிய நாடுகளில் இந்த பருவநிலை மாற்றங்கள் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்

  • உலக சுகாதார தினம் 2024 / WORLD HEALTH DAY 2024: பருவநிலை மாற்றங்களால் கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு 1,50,000 நபர்கள் இறக்கிறார்கள் என்று WHO ஏற்கனவே ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளுக்குள் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக மாறலாம் என்றும் கூறியுள்ளது. 
  • பின்தங்கிய நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் ஏற்படக்கூடிய பருவ நிலை மாற்றங்கள் மக்கள் தொகை, ஏழ்மை மற்றும் நோய்களையும் கணிசமாக அளவு அதிகரிக்கிறது.

குளோபல் வார்மிங்கால் இந்தியாவில் எத்தகைய பாதிப்பு ஏற்படும்

  • உலக சுகாதார தினம் 2024 / WORLD HEALTH DAY 2024: இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் அதிகமாக காணப்படும் நோய்களில் ஒன்று தொற்றுநோய். கோவிட் தொற்று என்பதை தவிர்த்து டெங்கு காய்ச்சல், மலேரியா, காசநோய் ஆகியவை இந்தியாவில் எளிதாக பரவக்கூடிய நோய்களில் முதன்மையில் இருப்பவை. இந்தியாவில் மழைக்காலத்தில் டெங்கு அதிகமாக பரவுகிறது என்று WHO கூறியுள்ளது.
  • பூமி ஆரோக்கியமாக இல்லாமல் புவி வெப்பமடைவதால் இந்த தொற்று நோய் பாதிக்கும் தன்மை தீவிரமாகும் மற்றும் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்படுவார்கள். 
  • அது மட்டுமின்றி குளோபல் வார்மிங்கால் இந்தியாவில் பல இடங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹீட்வேவ் என்று கூறப்படும் திடீரென்று அதிகரிக்கும் வெப்பச்சலனம் இந்தியாவில் பரவலாக மார்ச் முதல் ஜூன் மாதம் வரை காணப்படுகிறது.
  • இந்த அதீத வெப்பத்தால் 2500 மேற்பட்ட நபர்கள் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதனால் மின்வெட்டு, உணவு தட்டுப்பாடு மற்றும் வாழ்வாதார பிரச்சனை ஆகியவையும் ஏற்படுகிறது. 
  • இந்தியாவில் ஏற்படக்கூடிய அதீதமான பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நபர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

உலக சுகாதார தினத்தின் வரலாறு

  • உலக சுகாதார தினம் 2024 / WORLD HEALTH DAY 2024: டிசம்பர் 1945 இல், பிரேசிலிய மற்றும் சீன அதிகாரிகள் உலகளாவிய சுகாதார அமைப்பை உருவாக்க முன்மொழிந்தனர். இந்த அமைப்பு முற்றிலும் சுதந்திரமாக இருக்கும் மற்றும் எந்த நாட்டின் அரசாங்க அல்லது அரசியல் அதிகாரங்களையும் அனுபவிக்காது.
  • அடுத்த ஆண்டைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பின் அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது, ஏப்ரல் 7, 1948 அன்று, WHO இன் தொடக்கத்தில் 61 நாடுகள் கையெழுத்திட்டன. மாணவர் பங்கேற்பை ஊக்குவிக்க, உலக சுகாதார தினம் ஏப்ரல் 7 அன்று நிர்ணயிக்கப்பட்டது. 
  • உலக சுகாதார தினத்தின் 50 வது ஆண்டு விழா 1998 இல் கொண்டாடப்பட்டது, மேலும் அந்த ஆண்டு, பாதுகாப்பான தாய்மை என்ற தலைப்பு கையாளப்பட்டது.
  • உலக மலேரியா தினம், உலக காசநோய் தினம், உலக நோய்த்தடுப்பு வாரம், உலக புகையிலை எதிர்ப்பு தினம், உலக எய்ட்ஸ் தினம், உலக இரத்த தானம் செய்பவர்கள் தினம், உலக நோயாளி பாதுகாப்பு தினம், உலக ஹெபடைடிஸ் தினம் மற்றும் இன்னும் பல நாட்கள் போன்ற பல சுகாதார காரணங்களுக்காக WHO பிரச்சாரம் செய்கிறது.
  • WHO அச்சுறுத்தும் பெரும்பாலான சுகாதார பிரச்சினைகள் மற்றும் வேலைகளில் வெளிச்சம் போடுகிறது, இதனால் நிவாரணங்களும் கவலைகளும் உலகின் ஏழ்மையான நாடுகளுக்கும் சென்றடையும்.

உலக சுகாதார தினம் 2024 தீம்

  • உலக சுகாதார தினம் 2024 / WORLD HEALTH DAY 2024: 2024 ஆம் ஆண்டு WHO இன் 76 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது மற்றும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக WHO 'எனது உடல்நலம், எனது உரிமை' என்பதை 2024 உலக சுகாதார தினத்தின் கருப்பொருளாக தேர்ந்தெடுத்துள்ளது. 
  • இது தரமான சுகாதாரம், கல்வி மற்றும் தகவல்களுக்கான அடிப்படை மனித உரிமை அணுகலை மையமாகக் கொண்டுள்ளது.

உலக சுகாதார தின தீம் 2023

  • உலக சுகாதார தினம் 2024 / WORLD HEALTH DAY 2024: உலக சுகாதார தின தீம் 2023 "அனைவருக்கும் ஆரோக்கியம்"
  • உலக சுகாதார நிறுவனம் தனது 75வது பிறந்த நாளை 7 ஏப்ரல் 2023 அன்று கொண்டாடுகிறது.
  • கடந்த ஏழு தசாப்தங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய பொது சுகாதார வெற்றிகளை திரும்பிப் பார்க்க WHO இன் 75 ஆண்டு நிறைவு ஆண்டு ஒரு வாய்ப்பாகும். இன்று ̶ மற்றும் நாளைய சுகாதார சவால்களை சமாளிக்க நடவடிக்கையை ஊக்குவிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும்.

ENGLISH

  • WORLD HEALTH DAY 2024: World Health Day is celebrated on April 7 each year to commemorate the founding of the World Health Organization in 1948. This organization, widely known as the WHO, celebrates this day every year on the basis of each theme.
  • The World Health Organization (WHO) has released a shocking report that nearly 1.3 billion people worldwide die each year from environmental damage.

How are people affected by global warming?

  • WORLD HEALTH DAY 2024: Global warming is said to be the result of global warming. Over the past few years, various efforts have been made to prevent global warming.
  • Human health in tropical areas is becoming questionable as the Earth's warming climate increases. People are directly affected by the problem of global warming.
  • For example, it increases mosquito production and causes serious illnesses such as malaria, dengue fever and some other germs that affect humans on a large scale.
  • Due to the extreme heat, not only during the day but also at night there is a considerable amount of warmth without bathing.
  • This poses a risk to agriculture and food security, but not all human beings can withstand chronic heat. Excessive heat can worsen the health of those who are already suffering from poor health.

What impact will these climate changes have on backward countries?

  • WORLD HEALTH DAY 2024: The WHO has already reported that climate change kills about 150,000 people a year. It said the number could double in 10 years. Climate change in backward and developing countries significantly increases population, poverty and disease.

What will be the impact on India of global warming?

  • WORLD HEALTH DAY 2024: Infectious disease is one of the most common diseases in India. Apart from Govt infection, dengue fever, malaria and tuberculosis are the major contagious diseases in India. The WHO has said that dengue is most prevalent in India during the monsoon season.
  • The vulnerability of this epidemic is exacerbated by global warming without healthy earth and a large number of people will be affected.
  • Not only that but people in many parts of India have been affected by global warming. The so-called heatwave is the most widespread heat wave in India from March to June.
  • It is noteworthy that more than 2500 people died a few years ago due to this extreme heat. In addition, it causes power outages, food shortages and livelihood problems.
  • Children, pregnant women, the elderly and the economically disadvantaged are most affected by extreme climate change in India.

History of World Health Day

  • WORLD HEALTH DAY 2024: In December 1945, Brazilian and Chinese officials proposed the formation of a global health organization. The organization would be completely independent and would not enjoy the governmental or political powers of any country. 
  • Following the next year, the constitution of the World Health Organization was approved, and on April 7, 1948, 61 countries signed the inception of WHO. To encourage student participation, World Health Day was fixed on April 7. The 50th Anniversary of World Health Day was celebrated in 1998, and that year, the theme tackled was the Topic of Safe Motherhood. 
  • WHO campaigns for many other health causes like World Malaria Day, World Tuberculosis Day, World Immunization Week, World No Tobacco Day, World AIDS Day, World Blood Donor Day, World Patient Safety Day, World Hepatitis Day, and many more such Days. 
  • WHO shines a light on most of the threatening health issues and works so that reliefs and concerns reach even the poorest nations of the world.  

World Health Day 2024 Theme

  • WORLD HEALTH DAY 2024: The year 2024 marks the 76th anniversary of WHO and as a part of celebration WHO has chosen 'My Health, My Right' as the theme of World Health Day 2024 which focuses on the fundamental human right access to quality health care, education and information.

World Health Day Theme 2023

  • WORLD HEALTH DAY 2024: World Health Day Theme 2023 is "Health For All". World Health Organization will observe its 75th birthday on 7th April 2023.
  • WHO’s 75th anniversary year is an opportunity to look back at public health successes that have improved quality of life during the last seven decades. It is also an opportunity to motivate action to tackle the health challenges of today ̶ and tomorrow. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel