
27th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்
- தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
- செந்தில் பாலாஜியின் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
- அதே சமயம் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
- அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியிடம் இருந்த வனத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சராக மனோ தங்கராஜும் பதவி ஏற்க உள்ளார்.
8 தொலைநோக்கு நிறுவனங்களுடன் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக, தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் 2025, ஏப்ரல் 25 அன்று புதுதில்லியில் உள்ள மின்னணு நிகேதனில் எட்டு தொலைநோக்கு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
- மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் கல்வி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்காக இந்தக் கூட்டாண்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள், பாடத்திட்ட மேம்பாடு, திறன் மேம்பாடு, பயிற்சி, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், புதுமைகளுக்கான ஆதரவு ஆகியவற்றில் ஒத்துழைப்புப் பகுதிகள் உள்ளன.