Type Here to Get Search Results !

14th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


14th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

நாட்டிலேயே முதல்முறை இணையத்தில் லோக் அதாலத் சேவைகள் கேரளா அறிமுகம்
  • இணையத்தில் (மக்கள் நீதிமன்றம்) லோக் அதாலத் சேவைகளை வழங்கும் முதல் மாநிலமாக கேரளம் மாறியுள்ளது. இதன்மூலம் இணையத்தில் மனுத்தாக்கல் செய்யவும், இணைய வாயிலாகவே ஆஜராகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • அனைவரும் குறிப்பாக விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எளிமையாக நீதித் துறையை அணுக வேண்டும் என்ற நோக்கத்தில் இணையத்தில் லோக் அதாலத் சேவைகளை கேரளம் அறிமுகம் செய்துள்ளது.
  • கேரளத்தில் தற்போது திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் இணைய வாயிலான லோக் அதாலத் அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • ஆனால், தற்போது இணைய வாயிலாகவும் லோக் அதாலத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பு இந்தத் தடைகளை உடைத்தெரியும். இச்சேவை மே மாத முதல் வாரத்திலிருந்து முழு வீச்சில் அமலுக்கு வரும்.
  • இந்த முறையில் அனைவரும் நீதித் துறையை அணுக, மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்துகளில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமும் மனுத்தாக்கல் செய்து விசாரணைக்கு ஆஜராகும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் கார்பன் வரி விதிக்க இந்தியா ஆதரவு
  • ஐக்கிய நாடுகள் சபையின் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தால் கப்பல் போக்குவரத்துத் துறையின் மீது விதிக்கப்பட்ட உலகின் முதல் உலகளாவிய கார்பன் வரிக்கு (Global carbon tax) ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. மேலும் 62 நாடுகளும் கார்பன் வரியை ஆதரித்து வாக்களித்துள்ளன.
  • ஒரு வார தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) லண்டனில் உள்ள சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) தலைமையகத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 
  • இது கப்பல்களில் இருந்து பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் (Greenhouse gas emissions) குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கார்பன் மாசு இல்லாத வகையில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது.
  • இந்த ஒப்பந்தத்தை இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட 63 நாடுகள் ஆதரிக்கின்றன. ஆனால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, வெனிசுலா போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகள் எதிர்க்கின்றன. அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகயில் பங்கேற்கவே இல்லை. வாக்கெடுப்பிலும் கலந்துகொள்ளவில்லை.
ட்ரோன்களை அழிக்கும் லேசா் ஆயுத அமைப்பு சோதனை வெற்றி
  • ஆந்திர மாநிலம் கா்னூலில் லேசா் வழிகாட்டுதலில் செயல்படும் 30 கிலோவாட் திறன்கொண்ட எம்கே-2(ஏ) எரிசக்தி ஆயுத அமைப்பை டிஆா்டிஓ பரிசோதனை செய்தது. 
  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுத அமைப்பு, தொலைதூரத்தில் இருந்த ட்ரோன்களை தாக்கி அழித்தது. அத்துடன் பல ட்ரோன் தாக்குதல்களையும் அந்த ஆயுத அமைப்பு தடுத்து, கண்காணிப்பு சென்சாா்களையும் அழித்தது. இதன் மூலம், அந்தப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தது.
  • மின்னல் வேகத்தில் செயல்பட்டு இலக்கை சில நொடிகளில் தாக்கியதன் மூலம், இது ட்ரோன்களுக்கு எதிரான மிகவும் ஆற்றல்வாய்ந்த ஆயுத அமைப்பாக உள்ளது.
உலகக் கோப்பை வில்வித்தை - இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி
  • அமெரிக்காவின் ஃபுளோரிடா நகரில் நடைபெறும் இப்போட்டியில் கலப்பு அணிகள் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா-ரிஷப் யாதவ் இணை 153-151 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதன் மூலம் 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
  • ரிஷப் யாதவுக்கு இது முதல் உலகக் கோப்பை தங்கம் ஆகும். ஜோதி சுரேகா வெல்லும் 11-ஆவது உலகக் கோப்பை தங்கம் இதுவாகும்.
  • ஆடவா் அணிகள் ரிகா்வ் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா, அதானு தாஸ், தருண்தீப் ராய்ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1-5 என்ற புள்ளிக் கணக்கில் சீன அணியிடம் தோற்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினா்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel