
29th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தாட்கோ புதிய தலைவர் நியமனம்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 1974 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது.
- தாட்கோவின் கட்டுமானப் பிரிவினால் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்குத் தீப்பிடிக்காத வீடுகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும், மேம்பாட்டுப் பிரிவால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் தேவைக்கேற்ப பல்வேறு பொருளாதா ர மேம்பாட்டுத் திட்டங்களும்செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
- தற்போது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக திரு.நா.இளையராஜா அவர்களை நியமித்து அரசாணை(ப) எண்.110. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நாள்.28.03.2025இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
- மொத்தமுள்ள 8 முக்கிய துறைகளில் பல துறைகளின் வளர்ச்சி கடந்த பிப்ரவரியில் பின்னடைவை சந்தித்துள்ளது. நிலக்கரி 1.7) சதவீதம் (கடந்த ஆண்டு பிப்ரவரியில் 11.6%), சுத்திகரிப்பு 0.8 சதவீதம் (2.6%), ஸ்டீல் 5.6 சதவீதம் (9.4%), மின்சாரம் 2.8 (7.6%) சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளன.
- கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. உரம் 10.2 சதவீதம், சிமெண்ட் 10.5 சதவீதம் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த 8 துறைகளும் நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் 4.4 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளன.
- முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் இது 7.8 சதவீதமாக இருந்தது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் 2.4 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது என ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மியான்மரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) ஏற்பட்டது.
- மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் மேற்கண்ட நாடுகளில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
- நிலநடுக்கத்தால் பலத்த சேதத்தை சந்தித்துள்ள மியான்மருக்கு 'ஆபரேசன் பிரம்மா' என்கிற பெயரில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. அந்த வகையில், இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
- உத்தரப் பிரதேச மாநிலம் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் (IAF C 130J) விமானத்தில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் மியான்மர் சென்றடைந்தன.