
13th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாட்டு பட்ஜெட்டில் தேவநாகரி எழுத்துருவான '₹' குறியீட்டிற்கு பதில் தமிழ் எழுத்தான ரூ
- தமிழ்நாடு அரசின் மாநில பட்ஜெட் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை சட்டமன்றத்தில் 2025-2026ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
- இந்நிலையில், பட்ஜெட்டிற்கான லச்சினையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், ரூபாயைக் குறிக்கும் தேவநாகரி எழுத்தான '₹' என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தான 'ரூ' எனும் எழுத்தை பயன்படுத்தி லச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (13.03.2025) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக் குழுவின் ஆறாவது கூட்டம் நடைபெற்றது.
- இக்கூட்டத்தில், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட "முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் தாக்கம் - இறுதி அறிக்கை", "பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைமுறைகள் குறித்த ஆய்வு" மற்றும் "சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வியல் பற்றிய ஆய்வு" ஆகிய மூன்று ஆய்வறிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார்.
- ''நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 2024 ஜனவரியில் 4.26 சதவீதமாகவும், பிப்ரவரியில் 5.09 சதவீதமாகவும் இருந்தது.
- 2024 நவம்பருக்குப் பிறகு நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கி அறிவித்த வரம்புக்குள் நீடித்து வருகிறது. நாட்டின் சில்லறை பணவீக்கம் 2 - 6 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.
- 2025 ஜனவரியை ஒப்பிடும்போது பிப்ரவரி உணவுப் பணவீக்கத்தில் 222 புள்ளிகள் சரிந்தது. 2023 மே மாதத்தில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு இந்த அளவுக்கு உணவுப் பணவீக்கம் சரிவை சந்தித்துள்ளது.
- ஓராண்டிலிருந்து மற்றொரு ஆண்டு வரை கணக்கிடப்படும் சில்லறை பணவீக்கத்தில் குறிப்பாக இஞ்சி (-35.81%), சீரகம் (-28.77%), தக்காளி (-28.51%), காலிஃபிளவர் (-21.19%), பூண்டு ((-20.32%) குறைந்த விலையில் இருந்தன.
- மாறாக தேங்காய் எண்ணெய் (54.48%), தேங்காய் (41.61%), தங்கம் (35.56%), வெள்ளி (30.89%), வெங்காயம் (30.42%) விலை உயர்ந்து காணப்பட்டன.
- நகர்ப்புற பணவீக்கம் ஜனவரியில் 3.87% ஆக இருந்த நிலையில் பிப்ரவரியில் 3.32% ஆக குறைந்துள்ளது. இதேபோன்று நகர்ப்புற உணவு பணவீக்கத்தில் 5.53 சதவீதத்தில் இருந்து 3.20 சதவீதமாக சரிந்துள்ளது.
- இதேபோன்று கிராமப் பகுதிகளில் ஜனவரியில் 4.59% ஆக இருந்த உணவு பணவீக்கம் பிப்ரவரியில் 3.79% ஆகக் குறைந்துள்ளது. குறைந்த பணவீக்கம் கொண்ட மாநிலமாக தெலங்கானா (1.13%) உள்ளது. அதிக பணவீக்கம் கொண்ட மாநிலமாக கேரளம் (7.31%) உள்ளது.
- நாட்டின் பாதுகாப்பு திறன்களை உள்நாட்டு மூலவளங்களால் வலுப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ரூ.2,906 கோடி செலவில் குறைந்த அளவிலான இடம் பெயர்த்து கொண்டு செல்லக் கூடிய ரேடாரை (அஸ்வினி) கொள்முதல் செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சகம் காஜியாபாத்தில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) உடன் மூலதன கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்த ரேடார் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மின்னணு மற்றும் ரேடார் வடிவமைப்பு பிரிவால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாகும்.
- இதற்கான ஒப்பந்தம் 2025, மார்ச் 12, அன்று புதுதில்லியில் பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.
- இந்த ரேடார், அதிவேக போர் விமானங்கள் முதல் ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்ற மெதுவாக நகரும் இலக்குகள் வரை வான்வழி ஏவப்படும் இலக்குகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் இந்திய விமானப்படையின் செயல்திறன் அதிகரிக்கும்.
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் இலகுரக போர் விமானம் மூலம் ஆஸ்ட்ரா ஏவுகணையை செலுத்தி துல்லியமாக இலக்குகளை தாக்கும் சோதனை ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- அதாவது தேஜஸ் இலகுரக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஆஸ்ட்ரா ஏவுகணை எதிர்பார்த்தபடி மிகத் துல்லியமாக வானில் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது.