Type Here to Get Search Results !

இ-வாடகை என்ற செயலி / E-VADAAKAI MOBILE APP

  • இ-வாடகை என்ற செயலி / E-VADAAKAI MOBILE APP: தமிழ்நாட்டை பொறுத்தவரை, வேளாண் துறையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை என்பது தொடர்கதையாகவே நிலவி வருகிறது. 
  • அதுமட்டுமல்ல, விதைப்பு முதல் அறுவடை முடிய அனைத்து சாகுபடி பணிகளையும் வேளாண் இயந்திரங்கள் மூலமாக மேற்கொள்வதற்காக முனைப்பு காட்டி வருகிறது என்றாலும், ஏராளமான விவசாயிகளுக்கு சொந்தமாக வேளாண் கருவிகள் கிடையாது.
  • எனவேதான், வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் தங்களுடைய வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளும் "இ-வாடகை" என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 
  • இந்த ஆப் மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. 
  • அதேபோல, கடந்த 2018 -ல் "உழவன் செயலி" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயலியில் 22 வகையான சேவைகள் கிடைக்கின்றன

விதைகள்

  • இ-வாடகை என்ற செயலி / E-VADAAKAI MOBILE APP: பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களையும் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்கான வழிமுறைகளையும் வழங்குவதே இந்த உழவன் செயலியின் குறிக்கோளாகும். 

தரவிறக்க இணைப்பு


வழிமுறைகள்

  • இ-வாடகை என்ற செயலி / E-VADAAKAI MOBILE APP: மேலும் உழவர் செயலியில் தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்களின் விவரங்களை விவசாயிகள் அறிந்து பயன்பெறுவதற்கான வழிமுறைகள் கீழ்க்கண்டவாறு விளக்கப்பட்டுள்ளது. 
  • உழவர் செயலியை திறக்கவும் - ஒருமுறை பதிவிற்கான தங்களது சுயவிவரங்களை பதிவு செய்யவும் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு என்ற மெனுவை கிளிக் செய்யவும். 
  • தனியார் இயந்திர உரிமையாளர் பற்றி அறிய என்ற மெனுவை கிளிக் செய்யவும்.
  • விவசாயிகளுக்கு தேவையான தனியார் அறுவடை இயந்திரங்கள் என்ற மெனுவை கிளிக் செய்யவும். 
  • விவசாயிகள் தங்கள் மாவட்டம் மற்றும் வட்டாரத்தை தேர்வு செய்து, தேடுக (Search)ஐக் கிளிக் செய்து உடன் தனியார் உரிமையாளரின் விவரங்கள் தோன்றும். 
  • அதில் தாங்கள் விரும்பும் தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்களின் அலைபேசி எண்ணை கிளிக் செய்தால் அவ்வுரிமையாளரின் அலைபேசிக்கு நேரிடையாக அழைப்புசெல்லும். 
  • உரிமையாளருடன் அலைபேசி மூலம் கலந்துரையாடி அவர்களின் நெல் அறுவடை இயந்திரத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் தேவை ஏற்படின் பிற மாவட்டங்களில் உள்ள இயந்திர உரிமையாளர்களை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம்.

ENGLISH

  • E-VADAAKAI MOBILE APP: In Tamil Nadu, the shortage of workers in the agricultural sector is a recurring issue. Not only that, but efforts are being made to carry out all the cultivation work from sowing to harvesting through agricultural machinery, but many farmers do not have their own agricultural equipment.
  • That is why Chief Minister Stalin has introduced an app called "e-Rent" that allows farmers to pre-register for agricultural machinery online from the comfort of their homes.
  • The machines are rented on a priority basis to farmers who register through this app. Similarly, the "Uzhavan App" was introduced in 2018. The app offers 22 types of services.

Seeds

  • E-VADAAKAI MOBILE APP: The aim of this Uzhavan App is to provide information on seeds, fertilizers, weather forecasts, subsidy schemes implemented by the Tamil Nadu government, yield-increasing technologies, etc. required for crop cultivation, and methods to get profitable prices for the produce.

Download Link


Instructions

  • E-VADAAKAI MOBILE APP: Furthermore, the instructions for farmers to know the details of private harvester owners in the Uzhavaar app and benefit from it are explained as follows.
  • Open the Uzhavaar app - Register your profiles for one-time registration Click on the menu Agricultural machinery for rent.
  • Click on the menu Know about private machine owner.
  • Click on the menu Private harvester machines required by farmers.
  • Farmers can select their district and block and click on Search, and the details of the private owner will appear.
  • If they click on the mobile number of the private harvester owner of their choice, the call will go directly to that owner's mobile phone. They can discuss with the owner over the phone and use their paddy harvester. If necessary, they can also contact the machine owners in other districts.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel