
5th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சிறிய அளவு தங்கம், எலும்புமுனை கருவி கண்டெடுப்பு
- புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழக தொல்லியல் துறை சார்பில், இயக்குநர் தங்கதுரை தலைமையில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.
- முதற்கட்ட அகழாய்வு முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி முதல் 2-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.
- வடகிழக்குப் பருவமழையால் அகழாய்வு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஜன. 20-ம் தேதி முதல் 7 இடங்களில் மீண்டும் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. அதில், ஒரு குழியில் 196 செ.மீ. ஆழத்தில் எலும்புமுனைக் கருவி கண்டெடுக்கப்பட்டது.
- அந்தக் கருவி 7.8 கிராம் எடையில், 7.4 செ.மீ. நீளம், 1 செ.மீ. விட்டம் கொண்டுள்ளது. மற்றொரு குழியில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- 2-ம் கட்ட அகழாய்வில் இதுவரை கண்ணாடி மணிகள், வளையல்கள், இரும்பு ஆணி, குளவிக்கல், சூதுபவள மணி உள்ளிட்ட 1,743 தொல்பொருட்கள் கிடைத்துள்ளதாக அகழாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் 3,300-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
- இந்நிலையில் தற்போது இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
- இந்த அகழாய்வு பணியின் போது அலங்காரப் பொருட்களை மெருகேற்றி பாலிஷ் போடவும், வீட்டில் தரைத் தளத்தை சமப்படுத்த பயன்படும் மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் கார்பன் நீக்க முயற்சிகளை முன்னெடுப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக, இந்திய பெருநிறுவன விவகார நிறுவனம் (ஐஐசிஏ) மற்றும் இந்திய கார்பன் சந்தை சங்கம் (சிஎம்ஏஐ) ஆகியவை புதுதில்லியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- பிப்ரவரி 4-ம் தேதி உலகளாவிய மற்றும் இந்திய கார்பன் சந்தைகள் குறித்த நிகழ்ச்சியின் தொடக்க நாளில் இந்த மைல்கல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கலந்து கொண்டார்.