
20th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் நியமனம்
- தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டப்படி, லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை இந்த அமைப்பு விசாரிக்கும்.
- ஒரு தலைவர், 2 நீதித்துறை உறுப்பினர்கள், நீதித்துறை சாரா 2 உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இருப்பார்கள். இதில், தலைவர் மற்றும் நீதித் துறை சாராத உறுப்பினர்கள் பணியிடம் காலியாக இருந்த நிலையில், தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
- இதைத் தொடர்ந்து, தற்போது நீதித்துறை சார்ந்த உறுப்பினராக உள்ள சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ராஜமாணிக்கம், லோக் ஆயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- காலியாக உள்ள நீதித் துறை சாரா உறுப்பினர்கள் இடங்களுக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட நுகர்வோர் விவகாரங்கள் குறைதீர்வு ஆணையத்தின் தலைவர் வி.ராமராஜ், வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ளனர்.
- தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜமாணிக்கம் 2027 ஏப்ரல் 17-ம் தேதி வரை பதவியில் இருப்பார். புதிய உறுப்பினர்கள் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்கள் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
- இந்தியாவின் தலைநகர் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற நிலையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1993ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்ததது.
- இந்த சமயத்தில் சாகிப் சிங் வர்மா, மதன் லால் குரானா, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முதல்வர்களாக பதவி வகித்தனர். அதன்பிறகு, 27 ஆண்டுகளுக்கு பிறகு நடந்து முடிந்த தேர்தலில் 70 தொகுதிகளில் 44 தொகுதியில் பாஜக வெற்றிபெற்று டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.
- 2007 மற்றும் 2012ல் டெல்லியில் கவுன்சிலர் பதவி, முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் அதிலும் வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வான ரேகா குப்தா டெல்லியின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். டெல்லியின் 9வது முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவருடைய பதவியேற்பு விழா நடைபெற்றது.
- டெல்லி முதல்வராக தேர்வாகியுள்ள ரேகா குப்தா இன்று பிப்ரவரி 20, 2025) டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பாஜக ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- கரடு முரடான சாலைகளில் ஆயுத தளவாடங்களை ஏற்றிக் கொண்டு செல்லும் வகையில் 1868 ட்ரக் வாகனங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
- முப்படைகளுக்காக ரூ.697.35 கோடி செலவில் இந்த வாகனங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் பாதுகாப்புத்துறைச் செயலர் திரு ஆர் கே சிங் முன்னிலையில் ஏஸ் லிமிடெட் மற்றும் ஜேசிபி இந்தியா லிமிடெட் நிறுவனங்களுடன் கையெழுத்தானது.
- பாதுகாப்புப் படைகளின் செயல் திறனை மேம்படுத்தும் வகையில் ஆயுதங்களை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல ஏதுவாக இந்த வாகனங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
- உள்நாட்டுத் தளவாட உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதன் மூலம் நாட்டின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் திறன் மேலும் அதிகரிக்கும். இதன் மூலம் ஏராளமானவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
- ஆயுதத்தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இத்தகைய நடவடிக்கைகள் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.
- நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு, நவீனப்படுத்தும் வகையிலும் உள்நாட்டு தொழில்நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த கொள்முதல் நடவடிக்கை அமைந்துள்ளது.
- இந்தியக் கடலோர காவல்படைக்கு மென்பொருளால் இயக்கப்படும் 149 வானொலிகளை கொள்முதல் செய்ய பெங்களுருவில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்துடன் ரூ. 1220.12 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில பாதுகாப்பு அமைச்சகம் இன்று (2025 பிப்ரவரி 20) கையெழுத்திட்டுள்ளது.
- இந்த நவீன வானொலிகள் அதிவேக தரவு மற்றும் உறுதியான குரல் தொடர்பு மூலம் பாதுகாப்பான, நம்பகமான தகவல் பகிர்வு, ஒத்துழைப்பு, சூழ்நிலை சார்ந்த விழிப்புணர்வு தகவலைப் பெற உதவும்.
- கடல்சார் சட்ட அமலாக்கம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், மீன்பிடிப்பு பாதுகாப்பு, கடல்சார் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியக் கடலோர காவல்படையின் முக்கியமான பொறுப்புகள் நிறைவேற்றப்படும் திறனை இவை வலுப்படுத்தும்.
- மேலும், இந்தியக் கடற்படையுடன் கூட்டுச் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் இந்த வானொலிகள் உதவும்.