- மத்திய பட்ஜெட் 2025 - 2026 / BUDGET 2025 - 2026: தொடர்ந்து 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன், பீகாரின் பாரம்பரிய கலை வடிவமான மதுபானி கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள வெள்ளை நிறத்திலான சேலையை அணிந்துள்ளார். சிவப்பு ரவிக்கை மற்றும் தங்க நிற பார்டர் கூடிய சேலை அனைவராலும் கவனிக்கப்பட்டுள்ளது.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை, ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் நீடித்தது, இதற்கு முந்தைய ஆண்டு 1 மணி நேரம் 25 நிமிடங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
திருக்குறளை மேற்கோள்காட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவ
கோல்நோக்கி வாழுங் குடி
மு.வரதராசனார் விளக்கம்
- உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன. அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
ஒரு ரூபாயில் மத்திய அரசின் வரவு - செலவு கணக்கு
- மத்திய பட்ஜெட் 2025 - 2026 / BUDGET 2025 - 2026: மத்திய பட்ஜெட்டில் செலவிடப்படும் தொகையை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் எவ்வாறு ஈட்டப்படுகிறது.
- அந்த ஒரு ரூபாய் எந்த வகைகளில் செலவிடப்படுகிறது என்ற விவரத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வரவு
- மத்திய பட்ஜெட் 2025 - 2026 / BUDGET 2025 - 2026: மத்திய அரசுக்குக் கிடைக்கும் ஒரு ரூபாயில் 0.24 காசுகள் கடன் வாங்குவதன் மூலமும், 0.22 காசுகள் வருமான வரி மூலமும், 0.18 காசுகள் ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் மூலமாகவும், 0.17 காசுகள் கார்ப்பரேட் வரியாகவும் 0.09 காசுகள் வரியில்லா வருவாய் மூலமும் 0.05 காசுகள் மத்திய கலால் வரியாகவும், 0.04 காசுகள் சுங்க வரியாகவும் 0.01 காசு கடனில்லா மூலதன வருவாயாகவும் ஈட்டப்படுகிறது.
செலவு
- மத்திய பட்ஜெட் 2025 - 2026 / BUDGET 2025 - 2026: மத்திய அரசிடம் இருக்கும் ஒரு ரூபாயில் 0.20 காசுகள் கடனுக்கான வட்டி செலுத்தவும், 0.22 காசுகள் மாநில வரிப்பகிர்வுக்காகவும் 0.16 காசுகள் மத்திய அரசின் திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது.
- மேலும் 0.08 காசுகள் மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களுக்கும் 0.08 காசுகள் நிதிக்குழு செலவினங்களுக்காகவும் 0.08 காசுகள் பாதுகாப்புக்கும், 0.06 காசுகள் மானியங்களுக்கும் 0.04 காசுகள் ஓய்வூதியத்துக்கும் 0.08 காசுகள் பிற செலவினங்களுக்கும் செலவிடப்படுகிறது.
துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விபரம்
- போக்குவரத்து - ரூபாய் 5.48 லட்சம் கோடி
- பாதுகாப்புத்துறை - ரூ. 4.91 லட்சம் கோடி
- ஊரக மேம்பாடு - ரூ.2.66 லட்சம் கோடி
- உள்துறை - 2.33 லட்சம் கோடி
- விவசாயம் - 1.71 லட்சம் கோடி
- கல்வி - 1.28 லட்சம் கோடி
- சுகாதாரத்துறை - 98,311 கோடி
- நகர மேம்பாடு - 96,777 கோடி
- தகவல் தொடர்பு - 95,298 கோடி
- ஆற்றல் துறை - ரூ.81,174 கோடி
- வணிகம் தொழில்துறை - 65,553 கோடி
- சமூக நலன் - 60,052 கோடி
- அறிவியல் வளர்ச்சி சார்ந்தவை - 55,679 கோடி
ஆறு முக்கியம்சங்கள்
- மத்திய பட்ஜெட் 2025 - 2026 / BUDGET 2025 - 2026: வரி, மின்சாரம், சுரங்கம், நிதி, சீர்திருத்தம் உள்ளிட்ட ஆறு முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
- வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
- தெலுங்கு கவிதையை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையாற்றினார்.
- உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்துள்ளது என்றும், உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாகவும் நிர்மலா சீதாராமன் பெருமிதம்.
விவசாயத் துறைக்கான அறிவிப்பு
- பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது.
- பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்.
- பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை பெருக்க திட்டம்.
- உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்க திட்டம் அறிமுகம்.
- சிறப்பான சாகுு ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க திட்டம்.
- பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
- பிகார் மாநில விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம் அறிவிப்பு
- விவசாயத் துறைக்கான அறிவிப்புகளைக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, மேசையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தார்.
விவசாயிகளுக்கும் சிறு நிறுவனங்களுக்கும் கடன்
- மத்திய பட்ஜெட் 2025 - 2026 / BUDGET 2025 - 2026: கிசான் கிரெடிட் கார்டு மூலம் 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் பெற நடவடிக்கை
- கிசான் கடன் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வசதி
- கூட்டுறவுத் துறைக்கு கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும்.
புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகைகள்
- சிறு குறு நிறுவனங்கள் இந்தியாவை உற்பத்தி மையமாக கொள்ளும் அளவுக்கு வசதிகள் உருவாக்கப்படும்.
- சிறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்கப்படும்.
- கிராமப்புறங்களில் கூடுதலாக 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும்.
- தபால் நிலையங்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படும்.
மருத்துவப் படிப்பு - கூடுதல் இடங்கள்
- மத்திய பட்ஜெட் 2025 - 2026 / BUDGET 2025 - 2026: அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.
- அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும்.
- நாடு முழுவதும் மேல்நிலைப் பள்ளிகள், சுகாதார நிலையங்களுக்கு பாரத் நெட் மூலம் பிராட்பேண்ட் வசதி.
- சிறு முதல் பெரிய தொழில் வரை உற்பத்தியை அதிகரிக்க தேசிய உற்பத்தி இயக்கம் உருவாக்கப்படும்.
- மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்.
- உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை
- எஸ்சி/எஸ்டி பெண்களை தொழில் முனைவோர்களாக்க முதன்முறையாக புதிய திட்டம்
- முதல் முறையாக தொழில்முனைவோராகத் தொடங்கும் பட்டியலின மற்றும் பழங்குடி பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் அறிமுகம்.
பொம்மை தயாரிப்பு
- மத்திய பட்ஜெட் 2025 - 2026 / BUDGET 2025 - 2026: தேசிய பொம்மைகளுக்கான செயல்திட்டம் மூலமாக பொம்மை தயாரிப்பில் இந்தியா உலக அளவில் மையமாக திகழ இந்தியாவில் பொம்மைகளை தயாரிக்க சிறப்பு திட்டம் உருவாக்கப்படும்
குறுகிய கால கடன் தொகை அதிகரிப்பு
- மத்திய பட்ஜெட் 2025 - 2026 / BUDGET 2025 - 2026: விவசாயத்தைத் தொடர்ந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இரண்டாவது பெரிய வளர்ச்சி இயந்திரமாகும்.
- கிசான் கடன் அட்டைகள் மூலம் 7.7 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட வட்டித் தொகை திட்டம் மூலமாக வழங்கப்படும் குறுகிய கால கடன் 3 லட்சம் முதல் 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
- உலகின் 2 வது மீன் வள உற்பத்தி மையமாக இந்தியா விளங்குகிறது.
- உத்யாம் தளத்தில் பதிவு செய்த குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் அட்டை மூலம் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
- நீண்ட கால மற்றும் குறுகிய கால கடனை உறுதி செய்தல், நீர்ப்பாசன வளர்ச்சி, பஞ்சாயத்துகள் மூலம் விவசாய உற்பத்திப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை 1.7 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் திட்டம் கொண்டுவரப்படும்.
புற்றுநோய் சிகிச்சை மையங்கள்
- அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
- வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது.
- நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
- கல்விக்கான செயற்கை நுண்ணறிவு மையம் உருவாக்கப்படும்.
பிகாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள்
- பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிகார் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பயிலகம் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உடான் திட்டத்தின் கீழ் பிகார் மாநிலத்தில் புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.
- ஏற்கெனவே இருக்கும் பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.
- பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஐஐடி விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- பிகார் மாநில உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு
- மத்திய பட்ஜெட் 2025 - 2026 / BUDGET 2025 - 2026: ஒரு கோடி பகுதிநேர பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
- பொருள் விநியோக சேவையில் உள்ள டெலிவரி ஊழியர்களுக்கும் மின்னணு அடையாள அட்டை.
- ஒப்பந்த ஊழியர்களை சமூக நல திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை.
- டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகம்.
- முதலீடு நாட்டின் 3-வது பெரிய வளர்ச்சி இயந்திரமாகும். மக்களின் மீது முதலீடு செய்வது புதுமையில் முதலீடு செய்வது ஆகியவை அரசின் நோக்கம்.
- விண்வெளித் துறை வளர்ச்சிக்காக தேசிய அளவில் ஜியோ ஸ்பேஸ் இயக்கம் உருவாக்கப்படும்.
- பிகாரில் தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பயிலகம் தொடங்கப்படும்.
- சுற்றுலா துறையில் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.20,000 கோடி ஒதுக்கீடு
வருமான வரி மசோதா
- மத்திய பட்ஜெட் 2025 - 2026 / BUDGET 2025 - 2026: வருமான வரி செலுத்துவதை எளிமையாக்கும் வகையில் புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் 5 சிறிய அணு உலைகள் 2033-ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
- காப்பீடு துறையில் அந்நிய முதலீடு 74 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதமாக அதிகரிப்பு.
- சுய உதவிக் குழு மற்றும் கிராமப்புற மக்களின் வங்கி பயன்பாட்டை ஊக்குவிக்க பொதுத்துறை வங்கி மூலம் சிறப்பு வங்கி பயன்பாட்டு நடைமுறைகள் அமல்படுத்தப்படும் நிதிப்பற்றாக்குறையின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக உள்ளது.
செல்ஃபோன், மின்சார வாகனங்கள் விலை குறைகிறது
- மத்திய பட்ஜெட் 2025 - 2026 / BUDGET 2025 - 2026: செல்போன் பேட்டரிகளுக்கான உற்பத்திக்கு வரி சலுகை
- லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும்.
- லித்தியம் பேட்டரிகளின் வரி விலக்கு உள்ளிட்ட அறிவிப்புகளால் மின்சார வாகனங்கள் மற்றும் செல்ஃபோன் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறைமுக வரிகளில் சீர்திருத்தங்கள்
- மத்திய பட்ஜெட் 2025 - 2026 / BUDGET 2025 - 2026: மூத்த குடிமக்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை வரி பிடித்தம் கிடையாது.
- கப்பல் கட்டுமானத்துக்கான சலுகைகள் மேலும் 10 ஆண்டுகளுக்குத் தொடரும்.
- பின்னலாடைகளுக்கு இறக்குமதி சலுகைகளை அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.
- ஏஐ தொழில்நுட்பத்தை விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- 100 ஜிகாவாட் அணு ஆற்றல் மையம் 2047ம் ஆண்டுக்குள் நாட்டில் அமைக்கப்படும்.
- 2033 ஆண்டுக்குள் 5 அணு மின்மாற்றி ரியாக்டர்கள் உள்நாட்டிலே தயாரிக்கப்படும்
- வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிப்பு.
- வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் உச்ச வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- 2 சொந்த வீடுகளுக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரி சலுகை நீட்டிப்பு.
உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரிச் சலுகை
- மத்திய பட்ஜெட் 2025 - 2026 / BUDGET 2025 - 2026: உயிர் காக்கும் 36 வகை மருந்துகளுக்கு சுங்க வரி முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் 6 வகை மருந்துகளுக்கு 5 சதவிகிதம் வரியில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த ஹீல் இந்தியா என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
- மாநிலங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1.5 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும்
- 2025-26 பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
நிதிப் பற்றாக்குறை
- மத்திய பட்ஜெட் 2025 - 2026 / BUDGET 2025 - 2026: வரும் 2025ஆம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8% ஆகவும், 2026ஆம் ஆண்டுக்கு 4.4% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- வரும் நிதியாண்டில் நிகர சந்தைக் கடன்கள் ரூ.11.54 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- நிதியல்லாத அனைத்து துறைகளிலும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்காக உயர்மட்டக் குழுவை அரசு அமைக்கும்.
- மாநிலங்களின் முதலீட்டு நட்புறவு குறியீடு இந்த ஆண்டு தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது
- வருமான வரி சட்டம் எளிதாக்கப்படும்.
- நடுத்தர வர்க்கத்தினருக்கு ரூ.12 லட்சம் வரை வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு தனி நபரின் ஆண்டு வருவாய் ரூ.12 லட்சம் வரை இருந்தால், வருமான வரி கிடையாது.
- தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மிகப்பெரிய மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய சலுகையாக இருக்கும். அதாவது மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்குப் பெறுவார்கள்.
- இதன் மூலம், வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- கடந்த 2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது, தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இது ரூ.12 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.50 ஆயிரம் ஆக இருந்தது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் கூடுதலாக 75,000 ரூபாய் வரை கழிவு பெறலாம்.
வருமான வரி விகிதங்கள்
- மத்திய பட்ஜெட் 2025 - 2026 / BUDGET 2025 - 2026: ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டியதில்லை. அனைத்து வரி செலுத்துவோருக்கும் பயனளிக்கும் வகையில் வரி விகிதம் மற்றும் வரிப் பிடித்தம் மாற்றப்படுகின்றன என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- மேலும், ஆண்டு வருமானம் ரூ. 4 லட்சம் வரை - வருமான வரி கிடையாது
- ரூ. 4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5% வருமான வரி
- ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை - 10% வரி
- ரூ. 12 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை - 15% வரி
- ரூ. 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை - 20% வரி
- ரூ. 20 லட்சம் முதல் ரூ. 24 லட்சம் வரை - 25%
- ரூ. 24 லட்சத்துக்கு மேல் - 30% வரி செலுத்த வேண்டும்.
- வரி செலுத்துவோருக்கு, மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு வருமானத்தைத் தவிர, அவர்கள் ஈட்டும் மாத வருவாய்க்கு வரி இல்லாத வகையில் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENGLISH
- BUDGET 2025 - 2026: Nirmala Sitharaman, who is presenting the budget for the 8th time in a row, is wearing a white saree made in the traditional art form of Madhubani of Bihar. The saree with a red blouse and a gold border has attracted attention from all.
- Finance Minister Nirmala Sitharaman's budget speech lasted for one hour and 17 minutes, compared to 1 hour and 25 minutes the previous year.
Central government's budget and expenditure account in one rupee
- BUDGET 2025 - 2026: How is the central government earning one rupee without taking the entire amount spent in the central budget, just as a pot of rice is worth one rice paddy. The Union Finance Ministry has released the details of how that one rupee is spent.
Revenue
- BUDGET 2025 - 2026: Out of one rupee received by the Central Government, 0.24 paise is earned through borrowing, 0.22 paise through income tax, 0.18 paise through GST and other taxes, 0.17 paise through corporate tax, 0.09 paise through non-taxable income, 0.05 paise as Central Excise Duty, 0.04 paise as Customs Duty and 0.01 paise as non-debt capital gains.
Expenditure
- BUDGET 2025 - 2026: Out of one rupee held by the Central Government, 0.20 paise is spent on interest on loans, 0.22 paise on state tax sharing and 0.16 paise on Central Government schemes. Further, 0.08 paise is spent on Central Government funded schemes, 0.08 paise on Finance Commission expenditure, 0.08 paise on Defence, 0.06 paise on Subsidies, 0.04 paise on Pension and 0.08 paise on Other Expenditure.
Department wise allocation details
- Transport - Rs. 5.48 lakh crore
- Defence Department - Rs. 4.91 lakh crore
- Rural development - Rs.2.66 lakh crore
- Home - Rs.2.33 lakh crore
- Agriculture - Rs.1.71 lakh crore
- Education - Rs.1.28 lakh crore
- Health sector - Rs.98,311 crore
- Urban development - Rs.96,777 crore
- Information and communication - Rs.95,298 crore
- Energy sector - Rs.81,174 crore
- Commerce and industry - Rs.65,553 crore
- Social welfare - Rs.60,052 crore
- Science and development related - Rs.55,679 crore
Six key aspects
- BUDGET 2025 - 2026: Six key aspects including tax, electricity, mining, finance and reform have been given importance in the budget.
- A new scheme will be introduced in collaboration with the state governments to increase agricultural production.
- Union Finance Minister Nirmala Sitharaman delivered the budget speech, citing a Telugu poem.
- Nirmala Sitharaman said that India has emerged as the world's food production hub and is the fastest growing economy in the world.
Announcement for the agriculture sector
- BUDGET 2025 - 2026: The government is working to achieve self-sufficiency in pulses.
- A new scheme to increase the production of pulses.
- A scheme to increase the production of fruits and vegetables.
- A scheme to increase the production of urad and dal has been introduced.
- A scheme to distribute high-quality sorghum seeds across the country.
- A target has been set to achieve self-sufficiency in pulses production in 6 years.
- She announced that a urea manufacturing plant will be set up in Assam.
- A new scheme for farmers' cooperatives in Bihar has been announced
- After hearing the announcements for the agriculture sector, Prime Minister Narendra Modi welcomed the announcements by knocking on the table.
Loans for farmers and small enterprises
- BUDGET 2025 - 2026: 7.7 crore farmers to get short-term loans through Kisan Credit Card
- Loan facility of up to Rs. 5 lakhs through Kisan Credit Card
- Additional loan facility will be provided to the cooperative sector.
- Subsidies on loan interest for innovative companies
- Facilities will be created to make India a manufacturing hub for micro, small and medium enterprises.
- Additional loans will be provided to small enterprises.
- 1.5 lakh additional post offices will be set up in rural areas.
- Development projects will be created in rural areas through post offices.
Medical education - additional seats
- BUDGET 2025 - 2026: 75 thousand additional seats will be created for medical education in the next five years.
- 10 thousand additional seats will be created for medical education in the next financial year.
- Broadband facility through Bharat Net for secondary schools and health centers across the country.
- National Production Movement will be created to increase production from small to large industries.
- Plan to provide lessons for students digitally in their mother tongue.
Steps to export locally made toys
- BUDGET 2025 - 2026: First-of-its-kind new scheme to make SC/ST women entrepreneurs
- New scheme to provide loans of up to Rs 2 crore over the next 5 years to SC/ST women starting their own businesses for the first time
- A special scheme will be created to make India a global hub for toy manufacturing through the National Toy Action Plan
Increase in short-term credit
- BUDGET 2025 - 2026: After agriculture, the MSME sector is the second largest growth engine.
- The short-term credit provided to more than 7.7 crore farmers and fishermen through Kisan Credit Cards has been increased from Rs 3 lakh to Rs 5 lakh through a modified interest rate scheme.
- India is the 2nd largest fish production hub in the world.
- Special concessions will be given through credit cards to micro-enterprises registered on the Udyog platform.
- A scheme will be launched to ensure long-term and short-term credit, develop irrigation, and promote the use of agricultural produce through Panchayats to encourage more than 1.7 crore farmers.
- Cancer Treatment Centres will be set up in all districts.
- The Jaljeevan Scheme for providing drinking water to households has been extended till 2028.
- Rs 1 lakh crore allocated for infrastructure facilities in urban areas.
- Artificial Intelligence Center for Education will be created.
Projects that give importance to Bihar
- BUDGET 2025 - 2026: With the upcoming assembly elections in Bihar, various projects that give importance to the state have been announced.
- New projects have been announced for Bihar farmers and cooperatives.
- It has been announced that the National Institute of Food Technology and Management will be started.
- New airports will be created in Bihar under the UDAN scheme.
- The existing Patna airport will be expanded.
- Steps will be taken to expand IIT Patna in Bihar.
- Steps will be taken to improve the infrastructure of Bihar.
Insurance for delivery workers
- BUDGET 2025 - 2026: Identity cards will be provided to one crore part-time workers.
- Electronic identity cards will also be provided to delivery workers in the delivery service.
- Steps will be taken to include contract workers in the social welfare scheme.
- Insurance scheme for delivery workers will be introduced.
- Investment is the 3rd largest growth engine of the country. The government's objective is to invest in people and invest in innovation.
- Geospace movement to be created at national level for space sector development.
- National Institute of Food Technology and Management to be launched in Bihar.
- Rs. 20,000 crore allocated to promote new technologies in the tourism sector
Income Tax Bill
- BUDGET 2025 - 2026: A new Income Tax Bill to simplify income tax payment will be introduced in Parliament next week.
- 5 small nuclear reactors to be built domestically for research and development will be made operational by 2033.
- Foreign investment in the insurance sector will increase from 74 percent to 100 percent.
- Special banking procedures will be implemented through public sector banks to promote banking among self-help groups and rural people. The revised estimates of fiscal deficit are at 4.8 percent of the gross domestic product.
Prices of cell phones and electric vehicles will fall
- BUDGET 2025 - 2026: Tax concessions for production of cell phone batteries
- Lithium batteries will be completely exempted from customs duty.
- Announcements including tax exemption on lithium batteries are expected to bring down the prices of electric vehicles and cellphones.
Reforms in indirect taxes
- BUDGET 2025 - 2026: No tax deduction up to Rs. 50 thousand for senior citizens.
- Shipbuilding concessions to continue for another 10 years.
- The Finance Minister has announced import concessions for knitwear.
- Rs. 500 crore allocated for using AI technology in sectors including agriculture
- A 100 GW nuclear power plant will be set up in the country by 2047.
- 5 nuclear power reactors to be manufactured domestically by 2033
- Deadline for filing income tax returns extended by 4 years.
- TDS ceiling on house rent has been increased to Rs. 6 lakh.
- Tax concessions announced for 2 own houses.
- Tax concessions for start-ups extended.
- Tax concession for life-saving medicines
- Customs duty is completely waived on 36 types of life-saving medicines. A 5 percent tax concession has been announced for 6 more types of medicines.
- It is planned to set up cancer treatment centers in all districts.
- A new scheme called Heal India will be implemented to promote medical tourism
- Rs. 1.5 lakh crore interest-free loans will be provided to improve the infrastructure of the states
- 21 thousand crores allocated for the tourism sector in the 2025-26 budget.
Fiscal deficit
- BUDGET 2025 - 2026: The fiscal deficit for the coming year 2025 has been set at 4.8% of the GDP and for the coming year 2026 at 4.4%.
- Net market borrowings are estimated to be Rs 11.54 lakh crore in the coming financial year.
- The government will set up a high-level committee for regulatory reforms in all non-financial sectors.
- It has also been announced that the Investment Friendliness Index of states will be launched this year.
No income tax up to Rs 12 lakh
- BUDGET 2025 - 2026: The income tax law will be simplified.
- A tax break of up to Rs 12 lakh has been announced for the middle class. That is, if an individual has an annual income of up to Rs 12 lakh, there will be no income tax.
- A major change in the personal income tax ceiling has been announced. This will be a huge relief for the middle class. That is, those earning up to Rs 1 lakh per month will be exempted from paying income tax.
- With this, the income tax ceiling has been increased from Rs. 7 lakh to Rs. 12 lakh.
- In the last Budget 2023, the personal income tax ceiling was increased to Rs. 7 lakh, but now it has been announced as Rs. 12 lakh.
- The tax exemption ceiling for senior citizens has been increased from Rs. 50 thousand to Rs. 1 lakh.
- An additional deduction of up to Rs. 75,000 can be claimed on the personal income tax ceiling.
Income tax rates
- BUDGET 2025 - 2026: Those earning up to Rs. 12 lakh per year will not have to pay tax. Finance Minister Nirmala Sitharaman has announced that the tax rate and tax deduction are being changed to benefit all taxpayers.
- Annual income up to Rs. 4 lakh - No income tax
- Rs. 4 lakh to Rs. 8 lakh - 5% income tax
- Rs. 8 lakh to Rs. 12 lakh - 10% tax
- Rs. 12 lakh to Rs. Up to Rs. 16 lakhs - 15% tax
- Rs. 16 lakhs to Rs. 20 lakhs - 20% tax
- Rs. 20 lakhs to Rs. 24 lakhs - 25%
- Above Rs. 24 lakhs - 30% tax.
- It has also been informed that the tax rate has been reduced so that the monthly income earned by taxpayers, except for special income such as capital gains, is tax-free.