
1st FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வெம்பகோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு
- விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன்.18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- அகழாய்வில் இதுவரை சூது பவளம், சுடுமண் முத்திரை, தங்க நாணயம், செப்பு காசுகள், சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3300-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில், இன்று தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் ஒரே நேரத்தில் 13 வட்டச்சில்லுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த காலங்களில் வட்ட சில்லுகளை பாண்டி விளையாடப் பயன்படுத்தி உள்ளதும், இதன்மூலம் முன்னோர்கள் பொழுது போக்கிற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளதும், தெரியவருவதாகத் தகவல் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்
- தொடர்ந்து 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன், பீகாரின் பாரம்பரிய கலை வடிவமான மதுபானி கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள வெள்ளை நிறத்திலான சேலையை அணிந்துள்ளார். சிவப்பு ரவிக்கை மற்றும் தங்க நிற பார்டர் கூடிய சேலை அனைவராலும் கவனிக்கப்பட்டுள்ளது.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை, ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் நீடித்தது, இதற்கு முந்தைய ஆண்டு 1 மணி நேரம் 25 நிமிடங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது.