நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது 2024 / NAMBOOTHIRI HARIVARASANAM AWARD 2024
TNPSCSHOUTERSJanuary 14, 2025
0
நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது 2024 / NAMBOOTHIRI HARIVARASANAM AWARD 2024: சபரிமலையில் மகரவிளக்கு தினத்தில் மலையாள இசையமைப்பாளர் கைப்பிரதம் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.
ஹரிவராசனம் விருது கேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து நிறுவிய விருதாகும். இசையின் மூலம் சபரிமலை சமயச் சார்பின்மை, சமத்துவம், உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவற்றைப் பரப்பும் பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, ஏராளமான ஐயப்ப பக்தி பாடல்களையும் கைதப்பிரம் தாமோதரன் நம்பூதிரி எழுதி இசையமைத்துள்ளார். விருது வழங்கும் விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பிகே.சேகர் பாபுவும் கலந்துகொண்டு விருதினை வழங்கினார்.
ஹரிவராசனம் விருது 2012 ஆம் ஆண்டு கேரள அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதல் விருது ஹரிவராசனம் பாடல் பாடிய பிரபல பாடகர் யேசுதாஸுக்கு வழங்கப்பட்டது.
2021-ல் தமிழ்ப் பின்னணிப் பாடகர் வீரமணி ராஜுவுக்கும், 2022-ல் பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான அழப்பு ரங்கநாதனுக்கும், 2023 ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது பாடலாசிரியர், இயக்குனர் மற்றும் நாவலாசிரியர் ஸ்ரீகுமரன் தம்பிக்கும், கடந்த ஆண்டு பி.கே.வீரமணி தாஸுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
NAMBOOTHIRI HARIVARASANAM AWARD 2024: Malayalam music composer Kaipradham Damotharan Namboothiri was presented with the Harivarasanam Award on Makaravilakku Day in Sabarimala.
The Harivarasanam Award is an award jointly instituted by the Government of Kerala and the Travancore Devasthanams. This award is given for his contribution to spreading the values of secularism, equality and universal brotherhood at Sabarimala through music. The award carries a cash prize of Rs. 1 lakh and a certificate.
Apart from film songs, Kaithapram Damotharan Namboothiri has also written and composed numerous Ayyappa devotional songs. Hindu Religious and Charitable Trusts Minister PK Shekhar Babu also attended the award ceremony and presented the award.
The Harivarasanam Award was introduced by the Government of Kerala in 2012. The first award was given to the famous singer Yesudas, who sang the song Harivarasanam.
It is noteworthy that in 2021, this award was presented to Tamil playback singer Veeramani Raju, in 2022 to lyricist and composer Alappu Ranganathan, and the Harivarasanam Award for 2023 was presented to lyricist, director and novelist Srikumaran Thambi, and last year to P.K. Veeramani Das.