
14th JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தேசிய மஞ்சள் வாரியத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்
- இந்தியாவில் 30 வகையான மஞ்சள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் இந்தியா 70% க்கும் அதிகமாகப் பங்களித்ததாக சொல்லப்படுகிறது.
- மகாராஷ்டிரா, மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பெருமளவில் மஞ்சள் உற்பத்தி செய்கின்றனா்.
- கொரோனா தொற்றுக்குப் பிறகு மஞ்சளின் பலன்கள் குறித்த விழிப்புணா்வு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், மஞ்சள் விவசாயிகளின் தேவைகள் மற்றும் எதிா்கால வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த 2023ம் ஆண்டு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
- இந்த நிலையில், தேசிய மஞ்சள் வாரியத்தை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். பல்லே கங்கா ரெட்டி இந்த வாரியத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். மஞ்சள் வாரியத்தின் தலைமையகம் நிஜாமாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த மஞ்சள் வாரியம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட 20 மாநிலங்களில் பரவியுள்ள மஞ்சள் விவசாயிகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மஞ்சள் வாரியம் அமைக்கப்பட்டிருப்பது நாட்டில் மஞ்சள் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த டிசம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டை (சிபிஐ) அடிப்படையாக கொண்ட பணவீக்க புள்ளிவிவரங்களை தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டது.
- இதன்படி, கடந்த நவம்பர் மாதம் 5.48 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் டிசம்பரில் 5.22 சதவீதமாக சரிந்துள்ளது. இது கடந்த 4 மாதத்தில் இல்லாத குறைவான அளவாகும். இதுவே கடந்த ஆண்டு டிசம்பரில் 5.69 சதவீதமாக இருந்தது.
- ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் மூத்த ராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், நீண்ட தூர மற்றும் குறுகிய தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையின் திறன் பரிசோதிக்கப்பட்டது.
- இந்த ஏவுகணையின் புதிய பதிப்பான ‘நாக் மாக்-2’ ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
- இதன் மூலம் இந்த ஏவுகணையின் ஒட்டுமொத்த தொகுப்பும், ராணுவ பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்வதற்கு தயாா் நிலையை எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐசிசி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா, ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் தென்னாப்பிரிக்கா வீரர் டான் பேட்டர்சன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
- இந்த சூழலில் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் சராசரியாக 14 புள்ளி 22 என்று அளவில் சராசரி வைத்திருந்த பும்ராவுக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது.