Type Here to Get Search Results !

இந்திய ராணுவ தினம் / INDIAN ARMY DAY

  • இந்திய ராணுவ தினம் / INDIAN ARMY DAY: 1949, ஜனவரி 15-ம் தேதி சுமார் 200 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் கட்டுப்பாடு இந்தியர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
  • இந்த நாளில், ராணுவத்தின் சாதனைகள், தேசத்திற்கு ராணுவ வீரர்கள் ஆற்றிய சேவைகள், தியாகங்கள் நினைவுகூர்ந்து கவுரவிக்கப்படும்.

ராணுவ தினத்தை கொண்டாடுவது ஏன்?

  • இந்திய ராணுவ தினம் / INDIAN ARMY DAY: 1949, ஜனவரி 15-ம் தேதி ராணுவ தளபதி பதவி, பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியிடம் இருந்து முதன் முறையாக இந்தியர் ஒருவருக்கு வழங்கப்பட்டது. முப்படைகளுக்கும் தலைமைப் பதவியே ராணுவத் தளபதி என்று அழைக்கப்படுகிறது.
  • தற்போதைய நிலையில், இந்தியாவில் குடியரசுத் தலைவரே ராணுவ தளபதியாக இருக்கிறார். அவரே முப்படைகளின் தலைவர்.
  • ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சருக்குப் பிறகு ராணுவத் தளபதி பதவி ஏற்ற பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பாவே இந்திய ராணுவ தளபதி பதவியை அலங்கரித்த முதல் இந்தியர் ஆவார்.
  • இந்திய ராணுவ தளபதி பதவியை வகித்த கடைசி பிரிட்டிஷ்காரர் பிரான்சிஸ் புட்சர் ஆவார். அந்த நேரத்தில், பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா லெப்டினென்ட் ஜெனரலாக பதவி வகித்தார்.
  • கிழக்கு இந்திய கம்பெனியின் படைகளே பிரிட்டிஷ் இந்திய ராணுவமாக மாறி, சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய ராணுவமாக உருப்பெற்றது.
  • உலகின் வலிமையான 4-வது ராணுவமாக இந்திய ராணுவம் கருதப்படுகிறது.

பீல்டு மார்ஷல் கே.எம். கரியப்பா

  • இந்திய ராணுவ தினம் / INDIAN ARMY DAY: இந்திய ராணுவ தளபதியாக பதவியேற்றபோது கே.எம்.கரியப்பாவுக்கு வயது 49. 'இந்தியாவுக்கு வெற்றி' என்று பொருள்படும் 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கத்தை கே.எம்.கரியப்பா ஏற்றுக் கொண்டார்.
  • இந்திய ராணுவத்தில் 5 நட்சத்திர அந்தஸ்துக்கான பீல்டு மார்ஷல் பட்டம் பெற்றவர்கள் இரண்டே இரண்டு அதிகாரிகள் தான். அதில் முதலாமவர் கே.எம்.கரியப்பா, இரண்டாவதாக அந்த கவுரவத்தை அடைந்தவர் பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா.
  • கே.எம்.கரியப்பா 'கிப்பர்' என்றும் அழைக்கப்படுகிறார். ஃபடேகர் என்ற இடத்தில் கரியப்பா நியமிக்கப்பட்ட போது, அவரது பெயரை உச்சரிப்பதில் பிரிட்டிஷ் அதிகாரியின் மனைவிக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை 'கிப்பர்' என்று அவர்கள் அழைக்கத் தொடங்கினர்.
  • 1900, ஜனவரி 28-ம் தேதி கர்நாடகாவில் கே.எம்.கரியப்பா பிறந்தார். முதல் உலகப் போர் (1914-1918) கால கட்டத்தில் அவர் ராணுவப் பயிற்சி பெற்றார்.
  • 1942-ம் ஆண்டு, லெப்டினென்ட் ஜெனரல் பதவியைப் பெற்ற முதல் இந்திய அதிகாரி என்ற பெருமையை கரியப்பா அடைந்தார். 1944-ம் ஆண்டு, பிரிகேடியர் பதவியை ஏற்ற கரியப்பா, பான்னு முன்னணி பிரிகேடின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
  • 1986, ஜனவரி 15-ம் தேதி கே.எம்.கரியப்பா பீல்டு மார்ஷலாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 86.
  • 1947-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின் போது மேற்கு மண்டல தளபதி பொறுப்பை பீல்டு மார்ஷல் கரியப்பா வகித்தார்.
  • லே பிராந்தியம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியானதில் அவர் முக்கிய பங்காற்றினார்.
  • 1947, நவம்பர் மாதம் ராஞ்சியில் கிழக்கு மண்டல ராணுவ தளபதியாக கரியப்பா நியமிக்கப்பட்டார்.
  • அடுத்த இரண்டே மாதங்களில் காஷ்மீரில் நிலைமை மோசமானதால், டெல்லி மற்றும் கிழக்கு பஞ்சாபில் பயிற்சி மற்றும் ஆபரேஷனல் கமாண்ட் தலைமைப் பதவியில் டட்லி ருஸ்ஸெலுக்குப் பதிலாக கரியப்பா அமர்த்தப்பட்டார். அதற்கு மேற்கு மண்டலம் என்று பெயர் சூட்டியவர் அவரே.
  • உடனே, ஜம்மு-காஷ்மீர் படைப் பிரிவின் தளபதியாக ஜெனரல் திம்மையாவை அவர் நியமித்தார்.
  • ஜோஜிலா, டிராஸ் மற்றும் கார்கிலை இந்திய ராணுவம் கைப்பற்றும் வரை லே செல்லும் சாலையை பயன்பாட்டிற்கு திறக்க முடியவில்லை.
  • மேலிட உத்தரவுக்கு பணியாமல், கரியப்பா மேற்கண்ட இடங்களை கைப்பற்றினார். ஒருவேளை அவர் அவ்வாறு செய்யாமல் விட்டிருந்தால், லே பிராந்தியம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்திருக்காது.
  • அவரது திட்டத்தின்படி, நௌஷெரா, ஜாங்கர் ஆகிய பகுதிகளை கைப்பற்றிய இந்திய ராணுவம், ஜோஜிலா, டிராஸ், கார்கில் பகுதிகளில் இருந்து எதிரிகளை விரட்டியது.
  • 1953-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கே.எம்.கரியப்பா 1993-ம் ஆண்டு தனது 94-வது வயதில் காலமானார்.

ராணுவ தினம் எவ்வாறு கொண்டாடப்படும்?

  • இந்திய ராணுவ தினம் / INDIAN ARMY DAY: ராணுவ தின கொண்டாட்டம் இம்முறை கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெற்றது. தலைநகர் டெல்லிக்கு வெளியே இந்த கொண்டாட்டம் நடப்பது இதுவே முதல் முறை.
  • டெல்லி கன்டோன்ட்மென்டில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில்தான் ஒவ்வோர் ஆண்டும் ராணுவ தினம் ஏற்பாடு செய்யப்படும்.
  • தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை டெல்லிக்கு வெளியே நடத்தினால்தான் அதிகப்படியான மக்களை அவை சென்றடையும், மக்களின் பங்கேற்பும் அதிகரிக்கும் என்ற நோக்கததில்தான் இம்முறை பெங்களூருவில் நடத்தப்பட்டது.
  • "தென்னிந்திய மக்களின் வீரம், தியாகம் மற்றும் தேசத்திற்கான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த வரலாற்று நிகழ்வு பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
  • அத்துடன், கர்நாடகாவைச் சேர்ந்தவரான பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பாவுக்கு மரியாதை சேர்ப்பதாகவும் இது இருக்கும்," என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
  • பெங்களூருவில் நடைபெற்ற ராணுவ தின நிகழ்ச்சியில், இந்திய ராணுவத்தின் வலிமையையும், திறனையும் பறைசாற்றும் வகையில் அணிவகுப்புகள் நடைபெற்றன.
  • வேகமாக மாறி வரும் தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்தை எதிர்கொள்ள இந்திய ராணுவம் எவ்விதம் தயாராகியுள்ளது என்பதை எடுத்துக் காட்டும் வகையிலும் அது அமைந்தது.
  • மேலும், மோட்டார் சைக்கிள், பாரா மோட்டார்ஸ் மீது ராணுவ வீரர்கள் மெய் சிலிர்க்க வைக்கும் சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர்.

ராணுவ தினத்தின் கருப்பொருள் என்ன?

  • இந்திய ராணுவ தினம் / INDIAN ARMY DAY: இந்திய ராணுவ தினம் 2024 தீம் "நாட்டின் சேவையில்." இந்த தீம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தொழில் நிபுணத்துவத்துடன் தேசத்திற்கு சேவை செய்ய இந்திய ராணுவத்தின் இருப்பின் முக்கிய சாரத்தை உள்ளடக்கியது. 
  • தேசத்தின் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும் அதன் மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கும் இந்திய ராணுவ வீரர்கள் செய்த தன்னலமற்ற தியாகங்களை இது எடுத்துக்காட்டுகிறது.

ENGLISH

  • INDIAN ARMY DAY: On January 15, 1949, after nearly 200 years of British rule, control of the Indian Army was handed over to Indians. On this day, the achievements of the army, the services and sacrifices rendered by the soldiers to the nation are remembered and honoured.

Why celebrate Army Day?

  • INDIAN ARMY DAY: On 15 January 1949, the post of Chief of Army Staff was conferred on an Indian for the first time from a British Army officer. All the three armies have the post of Chief of Army Staff. At present, the President is the Chief of Army Staff in India. He is the leader of the three armies.
  • After General Sir Francis Butcher, Field Marshal KM Gariappa was the first Indian to hold the post of Chief of Army Staff. Francis Butcher was the last Britisher to hold the post of Commander-in-Chief of the Indian Army. At that time, Field Marshal KM Gariappa was serving as Lt. Gen.
  • The forces of the East India Company became the British Indian Army and became the Indian Army after independence. Indian Army is considered as the 4th strongest army in the world.

Field Marshal KM Gariappa

  • INDIAN ARMY DAY: KM Gariappa was 49 when he took over as the Chief of the Indian Army. KM Gariappa adopted the slogan 'Jai Hind' which means 'Victory to India'.
  • There are only two officers in the Indian Army who hold the 5-star rank of Field Marshal. The first was KM Gariappa and the second to achieve the honor was Field Marshal Sam Maneksha.
  • KM Gariappa is also known as 'Kipper'. When Gariappa was posted at Fatehgarh, the British officer's wife had difficulty in pronouncing his name. After that, they started calling him 'Kipper'.
  • KM Gariappa was born on January 28, 1900 in Karnataka. He received military training during the First World War (1914-1918).
  • In 1942, Gariappa became the first Indian officer to attain the rank of Lieutenant General. In 1944, Kariappa, promoted to the rank of Brigadier, was appointed as the Commander of the Pannu Front Brigade.
  • On January 15, 1986, KM Gariappa was announced as Field Marshal. He was 86 years old then. During the Indo-Pakistani War of 1947, Field Marshal Gariappa was the Western Zone Commander.
  • He played an important role in the integration of Leh region into India. In November 1947, Gariappa was appointed as the Eastern Zone Army Commander at Ranchi.
  • The situation in Kashmir worsened over the next two months, with Cariappa replacing Dudley Russell as head of the Training and Operational Command in Delhi and East Punjab. He was the one who named it as West Region.
  • Immediately, he appointed General Thimmiah as the Commander of the Jammu and Kashmir Army. The road to Leh could not be opened for use until the Indian Army captured Jojila, Drass and Kargil.
  • Disobeying the orders of his superiors, Cariappa captured the above places. Perhaps if he had not done so, the Leh region would not have been an integral part of India. 
  • According to his plan, the Indian Army captured Nowshera and Jhangar and drove out the enemy from Jojila, Drass and Kargil. KM Gariappa retired from the army in 1953 and died in 1993 at the age of 94.

How is Army Day celebrated?

  • INDIAN ARMY DAY: The Army Day celebration was held in Bengaluru, the capital of Karnataka. This is the first time that this celebration is being held outside the capital Delhi. Army Day is organized every year at Gariappa Parade Ground in Delhi Cantonment.
  • This time it was held in Bengaluru with the intention that events of national importance would reach more people and increase public participation if they were held outside Delhi.
  • "This historic event is being organized in Bengaluru to recognize the valor, sacrifice and service of the people of South India and to pay tribute to Field Marshal KM Gariappa, a native of Karnataka," the Defense Department said.
  • On Army Day in Bengaluru, parades were held to celebrate the strength and capabilities of the Indian Army. The Indian Army is fully prepared to face the future in a rapidly changing world. Also, soldiers performed thrilling adventures on motorcycles and para-motors.

Indian Army Day 2024 Theme

  • INDIAN ARMY DAY: Indian Army Day 2024 Theme is “In Service of the Nation.” This theme encapsulates the core essence of the Indian Army’s existence to serve the nation with unwavering commitment, dedication, and professionalism. 
  • It highlights the selfless sacrifices made by the Indian Army personnel to safeguard the nation’s security and uphold its values.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel