9th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து தமிழக பேரவையில் தனித் தீர்மானம்
- தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. அப்போது, மாநில அரசுகளின் அனுமதியின்றி சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
- அதாவது, தமிழகத்தின் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துகளுக்கு பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று "எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024" மற்றும் ராஜஸ்தான் உலகளாவிய வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
- இந்த ஆண்டு டிசம்பர் 9 முதல் 11 வரை நடைபெறவுள்ள முதலீட்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'நிறைவு, பொறுப்பு, தயார்நிலை' என்பதாகும்.
- நீர் பாதுகாப்பு, நீடித்த சுரங்கம், நீடித்த நிதி, அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுலா, வேளாண் வணிக கண்டுபிடிப்புகள் மற்றும் பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட கருப்பொருள்கள் குறித்து 12 துறை சார்ந்த கருப்பொருள் அமர்வுகளை இந்த உச்சிமாநாடு நடத்தும். 'வாழக்கூடிய நகரங்களுக்கான நீர் மேலாண்மை', 'தொழில்களின் பன்முகத்தன்மை உற்பத்தி மற்றும் அதற்கு அப்பால்' மற்றும் 'வர்த்தகம் மற்றும் சுற்றுலா' போன்ற கருப்பொருள்களில் பங்கேற்கும் நாடுகளுடன் எட்டு அமர்வுகளும் இந்த உச்சிமாநாட்டின் போது நடைபெறும்.
- வெளிநாடுவாழ் ராஜஸ்தானி மாநாடு, எம்.எஸ்.எம்.இ மாநாடு ஆகியவையும் மூன்று நாட்களில் நடைபெறும். ராஜஸ்தான் உலகளாவிய வர்த்தக கண்காட்சியில் ராஜஸ்தான் அரங்கு, உள்நாட்டு அரங்குகள், புத்தொழில் நிறுவன அரங்கு போன்ற கருப்பொருள் அரங்குகள் இடம்பெறும். இந்த மாநாட்டில் 16 பங்குதாரர் நாடுகள் மற்றும் 20 சர்வதேச அமைப்புகள் உட்பட 32-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
- விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான 2024 அக்டோபரில் 11 மற்றும் 10 புள்ளிகள் அதிகரித்து 1,315 மற்றும் 1,326 புள்ளிகளை எட்டியது என்று தொழிலாளர் அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்தது.
- அறிக்கையின்படி, செப்டம்பர் மாதம் விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான குறியீடு முறையே 1,304 புள்ளிகள் மற்றும் 1,316 புள்ளிகளாக இருந்த வேளையில், அக்டோபர் மாதத்திற்கான விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான பணவீக்க விகிதம் முறையே 5.96 சதவிகிம் மற்றும் 6.00 சதவிகிதமாக இருந்தது. இது 2023 அக்டோபரில் 7.08 சதவிகிதம் மற்றும் 6.92 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சஞ்சய் மல்ஹோத்ரா, 1990ஆம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
- தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸ் பதவிக் காலம் டிசம்பர் 10ஆம் தேதி (செவ்வாயன்று) நிறைவு பெறுவதையடுத்து, புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சக்திகாந்த தாஸ் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நாட்டின் 25வது ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்றார். அவரது மூன்று ஆண்டு கால பதவி நிறைவடைந்தபோது, அவருக்கு கூடுதலாக பணிக்காலத்தை நீட்டித்திருந்தது மத்திய அரசு.
- சஞ்சய் மல்ஹோத்ரா ஐஐடி-கான்பூரில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றவர். பிறகு அமெரிக்காவில் உள்ள பல்கலையில் பொதுக் கொள்கைப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
- கடந்த 33 ஆண்டு காலத்தில், சஞ்சய் மல்ஹோத்ரா மத்திய அரசின் எரிசக்தி, நிதி, வரித் துறை, தகவல் தொடர்பு மற்றும் சுரங்கத் துறை என பல துறைகளில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
- நிதி மற்றும் வரி விதிப்பில் பல ஆண்டு கால அனுபவம் கொண்டவர் சஞ்சய்.