5th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மாநில திட்டக்குழு துணைத் தலைவராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நியமனம்
- தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். துணைத்தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெரஞ்சன், முழு நேர உறுப்பினராக ஆர்.சீனிவாசன், கூடுதல் முழு நேர உறுப்பினராக எம்.விஜயபாஸ்கர், பகுதிநேர உறுப்பினர்களாக சுல்தான் அகமது இஸ்மாயில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, ஆயிரம் விளக்கு எம்எல்ஏ என்.எழிலன், மல்லிகா சீனிவாசன், ஜெ.அமலோற்பவநாதன், ஜி.சிவராமன், நர்த்தகி நடராஜ் ஆகியோரும் உள்ளனர்.
- அலுவல்சாரா உறுப்பினர்களாக திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் செயலர் ரமேஷ் சந்த் மீனா, நிதித்துறை செயலர் டி.உதயசந்திரன் ஆகியோரும், உறுப்பினர் செயலராக ஐஎஃப்எஸ் அதிகாரி எஸ்.சுதாவும் உள்ளனர்.
- இந்நிலையில், தமிழக அரசு மாநில திட்டக்குழுவுக்கு கூடுதலாக இருவரை நியமித்துள்ளது. அதாவது, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் அமைச்சர் என்ற முறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அலுவல்சாரா துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இதையடுத்து, ஜெ.ஜெயரஞ்சன் செயல் துணைத்தலைவராகியுள்ளார். இதுதவிர, தமிழக தலைமைச்செயலர் நா.முருகானந்தம் அலுவல்சாரா உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதன்கிழமை ஒருமனதாக தோ்வு செய்யப்பட்tட நிலையில், அவரது தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்றுக் கொண்டது.
- மும்பை ஆசாத் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- இதனைத் தொடர்ந்து துணை முதல்வர்களாக அஜீத் பவாரும், ஏக்நாத் ஷிண்டேவும் பதவியேற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்பு நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- 288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் கடந்த நவ. 20-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில், பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.
- ராணுவத்தில் ரூ.21,772 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் 5 நவீனமயமாக்கல் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.
- கடற்படை பயன்பாட்டுக்கு 31 வாட்டர் ஜெட் அதிவேக படகுகள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சில் தலைமையிலான கொள்முதல் கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்தது.
- இந்த அதிவேக படகுகள் மூலம் கடற்கரை பகுதிகளில் ரோந்து, கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடற்கொள்ளை தடுப்பு பணிகளுக்கும் இந்த விரைவுப் படகுகள் ஈடுபடுத்தப்படும்.
- மேலும் கடலோர பகுதிகளில் போர்க்கப்பல்களுக்கு பாதுகாப்பாக செல்ல 120 அதிவேக படகுகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- விமானப்படையில் உள்ள சுகோய் போர் விமானங்களில் ஜாமர் மற்றும் ரேடார் போன்ற எலக்ட்ரானிக் பாதுகாப்பு கருவிகளை பொருத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் விமானத்தின் திறன் மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கும்.
- கடலோர காவல் படைக்கு 6 நவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தரைப்படையில் உள்ள டி-72 மற்றும் டி-90 டேங்க்குகள், கவச வாகனங்கள் மற்றும் சுகோய் போர் விமானங்களின் இன்ஜின் ஓவர்ஹாலிங் பணிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் இவற்றின் பணிக்காலம் அதிகரிக்கும்.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 'நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்' அமைப்பு மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வா்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தி வருகின்றன.
- அந்த வகையில், சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்து இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- அதன்படி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து நேற்று டிசம்பர் 4ம் தேதி புதன்கிழமை மாலை 4.08 மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் டிசம்பர் 3ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
- இறுதிகட்ட சோதனைகளில் ப்ரோபா-3 செயற்கைக்கோளில் சில தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த ராக்கெட் ஏவும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது.
- அதன்படி ராக்கெட் ஏவுதல் இன்று டிசம்பர் 5ம் தேதி வியாழக்கிழமை மாலை 4.04 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பிஎஸ்எல்வி சி-59 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.