Type Here to Get Search Results !

இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்து குறித்த அறிக்கை 2024 / ROAD ACCIDENT REPORT 2024 IN INDIA

  • இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்து குறித்த அறிக்கை 2024 / ROAD ACCIDENT REPORT 2024 IN INDIA: Acko-வின் ஆக்சிடென்ட் இன்டெக்ஸ் 2024 அறிக்கையின்படி, நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளில் இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்கள் அனைத்தும் 78% பங்கு வகிப்பதோடு, ஹைதராபாத் மற்றும் டெல்லி என்சிஆர் ஆகியவை அதிக விபத்துகள் பதிவாகும் நகரங்களாக உள்ளன.
  • அறிக்கையின்படி, ஹைதராபாத் மற்றும் டெல்லி என்சிஆர் ஆகியவை விபத்து அட்டவணையில் முதலிடம் வகிக்கின்றன. இவற்றுக்கு அடுத்தபடியாக புனே மற்றும் பெங்களூரு நகரங்கள் ஆகியவை முறையே 15.9% மற்றும் 14.2% விபத்து நிகழ்வுகளைக் கொண்டுள்ளன. 
  • இந்த நகரங்களில் குறிப்பிட்ட விபத்துகள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பெங்களூருவின் பொம்மனஹள்ளி அடங்கும். 
  • இங்கு அதிக எண்ணிக்கையிலான விபத்துகள் பதிவாகியுள்ளன. இதனை தொடர்ந்து நொய்டா, புனேவில் மருஞ்சி மற்றும் மும்பையின் மீரா சாலை பகுதிகள் உள்ளன.
  • அதேபோல குறிப்பாக இந்த விபத்துகளில் சிக்கிய மிகவும் பொதுவான வாகனங்களை கூட இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. 
  • விபத்துக்குள்ளாகும் வாகனங்களில் முதலிடத்தில் இருப்பது ஹூண்டாய் ஐ10 ஆகும், இதனை தொடர்ந்து மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி சுசுகி பலேனோ போன்ற சில பிரபலமான கார் மாடல்கள் உள்ளன. இந்த பட்டியலில் இருக்கும் மேலும் இரண்டு மாடல்கள் ஹூண்டாய் ஐ20 மற்றும் மாருதி சுசுகி டிசையர் ஆகும்.
  • இந்த அறிக்கை பற்றி கருத்து தெரிவித்திருக்கும் ACKO ஜெனரல் இன்சூரன்ஸ், ஆட்டோ இன்சூரன்ஸ் துணைத் தலைவர் மயங்க் குப்தா, விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிவதன் மூலம், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கொள்கை வகுப்பவர்கள் மற்றும் குறிப்பிட்ட நகர நிர்வாகிகளுக்கு உதவுவதை இந்த அறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சாலை விபத்துகளுக்கான மிகவும் பொதுவான காரணங்கள்

  • இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்து குறித்த அறிக்கை 2024 / ROAD ACCIDENT REPORT 2024 IN INDIA: சாலை விபத்துகளுக்கான வழக்கமான காரணிகளை தவிர பிற காரணங்களை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 
  • பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு காரணம் தெருவிலங்குகள் தான் என்பது அதிர்ச்சியடைய வைக்கும் தகவலாக உள்ளது. இதுபோன்ற 62 சதவீத சாலை விபத்துகளுக்கு தெரு நாய்களே காரணமாக உள்ளன. 
  • இதனை தொடர்ந்து 29 சதவீத விபத்துகளுக்கு பசுக்களும், 4 சதவீத விபத்துக்களுக்கு எருமை மாடுகள் காரணமாக உள்ளன.
  • விலங்குகள் ஒருபக்கம் இருக்க இந்திய சாலைகளில் பள்ளங்கள் இன்னும் பெரிய ஆபத்தாக உள்ளன. இந்த பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. 
  • 44.8 சதவீத பள்ளங்கள் தொடர்பான விபத்துகள் இந்த நகரத்தில் நிகழ்கின்றன. டெல்லி மற்றும் மும்பை முறையே 13.3 சதவீதம் மற்றும் 12.3 சதவீதத்துடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
  • இந்த புள்ளி விவரங்கள் சிறந்த சாலை பாதுகாப்பிற்காக நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அவசியத்தை வெளிப்படுத்தி உள்ளன.
  • இயற்கை சீற்றங்களால் வாகனங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில், மைச்சாங் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 22 சதவீதம் இன்சூரன்ஸ் கோரிக்கைகள் வந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ENGLISH

  • ROAD ACCIDENT REPORT 2024 IN INDIA: According to Acko's Accident Index 2024 report, metro cities in India account for 78% of all road accidents in the country, with Hyderabad and Delhi NCR being the cities with the highest number of accidents.
  • According to the report, Hyderabad and Delhi NCR top the accident table. These are followed by Pune and Bengaluru cities with 15.9% and 14.2% accident incidences respectively. 
  • The areas with the highest risk of specific accidents in these cities include Bommanahalli in Bengaluru. The highest number of accidents were reported here. This was followed by Noida, Marunji in Pune and Mira Road in Mumbai.
  • The report also highlighted the most common vehicles involved in these accidents. The Hyundai i10 topped the list of vehicles involved in accidents, followed by some popular car models like Maruti Suzuki Swift and Maruti Suzuki Baleno. The other two models on the list are the Hyundai i20 and the Maruti Suzuki Dzire.
  • Commenting on the report, Mayank Gupta, Vice President, Auto Insurance, ACKO General Insurance, said that the report aims to help policymakers and specific city administrators implement measures to improve road safety by identifying the locations and root causes of accidents.

Most common causes of road accidents

  • ROAD ACCIDENT REPORT 2024 IN INDIA: The report sheds light on causes other than the usual ones. It is shocking to know that most road accidents are caused by stray animals. Stray dogs are responsible for 62 percent of such road accidents. This is followed by cows in 29 percent of accidents and buffaloes in 4 percent of accidents.
  • Apart from animals, potholes are an even bigger hazard on Indian roads. Bengaluru tops the list. The city accounts for 44.8 per cent of pothole-related accidents. Delhi and Mumbai are second and third with 13.3 per cent and 12.3 per cent respectively.
  • These figures highlight the need to improve urban infrastructure for better road safety. Natural disasters have also caused significant damage to vehicles. In Chennai, the report also said that 22 per cent of insurance claims were due to flooding caused by Cyclone Maichang.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel