Type Here to Get Search Results !

29th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


29th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தூத்துக்குடி மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
  • தூத்துக்குடி மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா கட்டடத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். மீளவிட்டானில் 63,000 சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் ரூ. 32.50 கோடி மதிப்பில் பல்வேறு அம்சங்களுடன் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
  • கள ஆய்வு மேற்கொள்ள 3 நாள்கள் பயணமாக தூத்துக்குடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக மீளவிட்டானில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை திறந்துவைத்தார்.
  • பல்வகை உணவுக் கூடம், வாகன நிறுத்துமிடம், உடற்பயிற்சிக் கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
  • மினி டைடல் பூங்கா மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, கீதா ஜீவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கிழக்கு லடாக் எல்லையில் 14,300 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை - இந்திய ராணுவம் திறப்பு
  • கடந்த 2020-ஆம் ஆண்டு, பாங்காங் ஏரிக்கரையில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனர். 
  • இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் போக்கு, பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அண்மையில் முடிவுக்கு வந்தது. 
  • டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த அக்டோபரில் இரு நாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது இரு நாட்டு உறவில் முக்கிய முன்னேற்றமாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • இந்நிலையில், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. 
  • லடாக்கின் லேவைத் தளமாகக் கொண்ட '14 கார்ப்ஸ்' ராணுவப் படைப் பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹிதேஷ் பல்லா கடந்த டிச. 26-ம் தேதி இந்த சிலையை திறந்து வைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel