28th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சூரியனுக்கு மிக அருகில் பாதிப்பின்றி நெருங்கிச் சென்று வரலாறு படைத்த பார்க்கர் விண்கலம்
- கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆளில்லா பார்க்கர் விண்கலம் சூரியனின் அதீத வெப்பம் மற்றும் தீவிர கதிர்வீச்சைத் தாங்கிக்கொண்டு, அதன் வெளிப்புற வளிமண்டலத்தில் நுழைந்தது. இதையடுத்து பல நாட்கள் அதனிடம் இருந்து தொடர்பு இல்லாத சூழல் நிலவியது.
- 26.12.2024 நள்ளிரவுக்கு சற்று முன்பு (இந்திய நேரப்படி இன்று காலை 10:30 மணியளவில்) விஞ்ஞானிகளுக்கு பார்க்கர் விண்கலத்தில் இருந்து (Parker Solar Probe) சிக்னல் கிடைத்தது.
- தற்போது, சூரிய மேற்பரப்பில் இருந்து 61 லட்சம் கி.மீ தொலைவைக் கடந்து சென்றதைத் தொடர்ந்து விண்கலம் "பாதுகாப்பாக உள்ளது" என்றும் சாதாரணமாக இயங்குவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
- நாசா இணையதளத்தின்படி, 692,000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த விண்கலம் 1,800F (980C) வரையிலான வெப்பநிலையைத் தாங்கியுள்ளது.