11th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பாரதியாரின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்
- மகத்தான கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லி, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் வெளியிட்டார்.
- இந்திய கலாச்சாரம் மற்றும் நாட்டின் ஆன்மீக பாரம்பரியத்தின் சாரத்தை வெகுஜனங்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் வெளிப்படுத்தின. இந்த தொகுப்புகள் சீனி விஸ்வநாதனால் தொகுக்கப்பட்டு, அலையன்ஸ் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- இதில் சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள், தத்துவ விளக்கக்காட்சி உள்ளிட்டவை உள்ளன.
- இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறன்களை வலுப்படுத்துவதில் முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்புத்துறை பணியகத்தின்கீழ் செயல்படும் ‘கூட்டு போர்க்கால ஆய்வுகளுக்கான மையம்’ மற்றும் ‘தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்’ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- ஒட்டுமொத்த இந்தியாவையும் உள்ளடக்கிய கண்ணோட்டத்துடன் பேரிடர்கால சவால்களை எதிர்கொள்ள தயாராகுதலுக்கான முதல்கட்ட நகர்வாக இது அமைந்துள்ளது.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக, பேரிடர் மேலாண்மையில் தொழில்நுட்பம் சார்ந்த கண்ணோட்டத்துடன் அணுகுதல், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுடன் இசைந்து பேரிடர் மேலாண்மையில் சர்வதேச பங்களிப்பு ஆகியவை அடங்கும்.
- அந்த விதத்தில், பேரிடர் சவால்களை எதிர்கொள்ளும் திறன் பெற்ற இந்தியாவை கட்டமைப்பதில் இவ்விறு நிறுவனங்களும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும்.