Type Here to Get Search Results !

முதல்வர் படைப்பகம் / MUTHALVAR PADAIPPAKAM

  • முதல்வர் படைப்பகம் / MUTHALVAR PADAIPPAKAM: தமிழ்நாட்டில் எப்படி அனைத்து மக்களுக்கும், அனைத்து விதமான சேவைகளும், வாய்ப்புகளும் கிடைக்கிறதோ, அதேபோல் தொழிற்துறையில் அனைவருக்கும், அனைத்து விதிமான வாய்ப்புகளும், வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளது.
  • இதன் ஒரு படியாகத் தனியார் நிறுவனங்கள் ஸ்டார்ட்அப் மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கோ வொர்க்கிங் ஸ்பேஸ் சேவையை அளிக்கும் முயற்சியில் இந்தியாவிலேயே முதல் முறையாகத் தமிழ்நாடு அரசு களமிறங்கியுள்ளது.
  • தமிழ்நாடு அரசு டைடல் பார்க் வாயிலாக டெக் நிறுவனங்களுக்கு அலுவலக இடங்களையும், சிப்காட் வாயிலாகத் தொழிற்சாலைகளுக்கான இடங்களையும் பல வருடமாக அளித்து வரும் வேளையில், முதல் முறையாகத் தமிழ்நாடு அரசு முதல்வர் படைப்பகம் என்ற பெயரில் கோ வொர்க்கிங் ஸ்பேஸ் சேவையை அளிக்கிறது.
  • முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய இளைஞர் பயிற்சி மையமான முதல்வர் படைப்பகம், வடக்கு சென்னை பகுதியில் உள்ள அகரத்தில் ஜெகனாதன் தெருவில் அமைந்துள்ளது. 
  • இந்த புது முயற்சியில் துவங்கப்பட்ட முதல் கோ வொர்க்கிங் ஸ்பேஸ் வசதியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திறக்கப்பட்டது.
  • இந்த முதல்வர் படைப்பகம் மையம் இளைஞர்களின் திறமையை மேம்படுத்தி, தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் படைப்பகம் சுமார் 2.85 கோடி ரூபாய் முதலீட்டில் 3 தளத்தில் கட்டப்பட்டு உள்ளது. 
  • இப்புதிய திட்டத்திற்கான நிதியை சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக்கு அமைப்பு, கொளத்தூர் எம்எல்ஏ ஸ்டாலின் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவை இணைந்து நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
  • சுமார் 2400 சதுரடியில் அமைக்கப்பட்டு உள்ள இந்த முதல்வர் படைப்பகம் தரைதளம் மற்றும் 2 மேல் தளம் உடன் அமைக்கப்பட்டு உள்ளது. முதல்வர் படைப்பகத்தின் தரைதளத்தில் 38 பேர் அமரும் வகையில் கோ வொர்க்கிங் ஸ்பேஸ் மற்றும் 4-6 பேர் பயன்படுத்தும் 3 கான்பிரென்ஸ் ரூம்-கள் உள்ளது. 
  • முதல் தளத்தில் சுமார் போட்டி தேர்வுகளுக்குப் பயிற்சி மேற்கொள்ள வசதியாக 2000 புத்தகங்கள், 3 கம்ப்யூட்டர் டெஸ்க் வசதிகள் உடன் 51 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
  • மேல் தளத்தில் டீ மற்றும் ஸ்னாக்ஸ் விற்கப்படும் 30 பேர் அமரும் வகையில் கேன்டீன் மற்றும் டைனிங் வசதிகள் உடன் அமைக்கப்பட்டு உள்ளது. 
  • கோ வொர்க்கிங் ஸ்பேஸ்-ஐ புக் செய்ய ஆன்லைன் வசதியும் உள்ளது, மேலும் கோ வொர்க்கிங் ஸ்பேஸ் இருக்கைகளை நாள், வார, மாத அடிப்படையில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையில் பயன்படுத்த முடியும்.
  • இந்த கோ வொர்க்கிங் ஸ்பேஸ் சேவை பெரிய நிறுவனங்களுக்கு அளிக்காமல் சிறிய நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கும் முக்கிய கண்டிஷனும் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
  • இதன் மூலம் சிறிய நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைய ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும். இந்த மையத்தில் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
  • இதில் தொழில்நுட்ப பயிற்சி, மென்பொருள் மேம்பாடு, மொழி பயிற்சி, தலைமைத்துவ பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகள் இடம்பெறும். இதன் மூலம் இளைஞர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளைப் பெற தயாராகலாம். 
  • மேலும், இந்த மையத்தில் இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.
  • தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிதி உதவி மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் இளைஞர்கள் தொழில்முனைவோராக மாறி, பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்க முடியும். 
  • இந்த மையம் வடசென்னை பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், சென்னை முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

ENGLISH

  • MUTHALVAR PADAIPPAKAM: It is very clear that in Tamil Nadu, all the services and opportunities are available to all the people, similarly in the industry, all the prescribed opportunities and facilities should be available to all.
  • As a step towards this, the Tamil Nadu government is the first in India to provide co-working space services to startups and small scale enterprises.
  • While the Tamil Nadu government has been providing office space to tech companies through Tidal Park and industrial space through ChipCot for many years, for the first time the Tamil Nadu government is providing a co-working space service under the name of Chief Minister's Creation.
  • Muthalvar Padaippagam, a new youth training center inaugurated by Chief Minister Stalin, is located on Jagannathan Street in Agarat, North Chennai. 
  • The first co-working space facility started in this new initiative was inaugurated by Chief Minister M.K. Inaugurated under the leadership of Stalin, this Muthalvar Padaippagam has been set up by the Government of Tamil Nadu with the aim of improving the skills of the youth and increasing career opportunities. Muthalvar Padaippagam has been built on 3 floors with an investment of about 2.85 crore rupees. 
  • The funds for this new project have been jointly allocated by Chennai Corporation, Chennai Metropolitan Development Organization and Kolathur MLA Stal Constituency Development Fund.
  • Spread over about 2400 sqft, this Chief Minister's residence has ground floor and 2 upper floors. There is a co-working space for 38 people and 3 conference rooms for 4-6 people on the ground floor of the Chief Executive Office. 
  • The first floor has 2000 books, 3 computer desk facilities and seating for 51 people to facilitate preparation for competitive exams. The upper floor has a canteen and dining facilities for 30 people where tea and snacks are sold. 
  • There is also an online facility to book the co-working space and the co-working space seats can be used on a daily, weekly, monthly basis between 7 am to 8 pm.
  • Through this, small companies will be an important opportunity to grow on a large scale. It has also been revealed that various trainings will be provided to the youth in this center. It will include technical training, software development, language training and leadership training. 
  • Through this the youth can improve their skills and prepare for employment. Also, the center will provide advice on starting a business for the youth. It is said that necessary financial assistance and guidance will be provided to start the business. 
  • Through this the youth can become entrepreneurs and contribute to economic development. This center is set up to benefit not only the youth of North Chennai but also the youth of Chennai as a whole.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel