Type Here to Get Search Results !

4th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


4th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

முதல்வர் படைப்பகம் மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
  • முதல் முறையாகத் தமிழ்நாடு அரசு முதல்வர் படைப்பகம் என்ற பெயரில் கோ வொர்க்கிங் ஸ்பேஸ் சேவையை அளிக்கிறது. புதிய இளைஞர் பயிற்சி மையமான முதல்வர் படைப்பகம், வடக்கு சென்னை பகுதியில் உள்ள அகரத்தில் ஜெகனாதன் தெருவில் அமைந்துள்ளது. 
  • சென்னை கொளத்தூர் ஜெகந்நாதன் சாலையில், மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் முதலமைச்சரின் சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் "முதல்வர் படைப்பகம்" புதிதாக கட்டப்பட்டுள்ளது.
  • ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த படைப்பகத்தில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படைப்பகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
  • இதற்கிடையே, படைப்பகத்திற்கு வரும் நபர்களுக்கு படிப்பதற்கென்று ஒரு தளமும், பணியாற்றுவதற்கு என்று ஒரு தளமும், உணவு அருந்துவதற்கு ஒரு தளமும் என 3 தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • அது மட்டுமல்லாமல், ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கும் அளவிற்கு இடவசதி உடன் கூடிய, பல்வேறு புத்தகங்களை கொண்ட நூலகம் அமைக்கப்பட உள்ளது.
  • இதற்கு ரூ.5 மற்றும் ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்தெரிவிக்கின்றது. மேலும் பணி செய்வதற்காக கோ- ஒர்க்கிங் ஸ்டேஷன் என்று அமைக்கப்பட்டுள்ள ஒரு தளத்தில், 38 நபர்கள் ஒரே நேரத்தில் பணியாற்றலாம் என்றும், இதில் 3 கலந்தாய்வு கூடங்கள் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • குறிப்பாக, பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருக்கும் நிறுவனங்களுக்கு கோ ஒர்க்கிங் ஸ்பேஸ் பணியிடத்தை பகிரவும் உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு குறைந்த அளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - வியட்நாம் கூட்டு ராணுவப் பயிற்சி வின்பாக்ஸ் 2024 
  • வியட்நாம் - இந்தியா இருதரப்பு ராணுவப் பயிற்சியின் 5 வது பதிப்பான "வின்பாக்ஸ் 2024" இன்று அம்பாலாவில் தொடங்கியது. இந்தப் பயிற்சியை  2024 நவம்பர் 04 முதல் 23 வரை அம்பாலா மற்றும் சண்டிமந்திரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
  • இந்தப் பயிற்சி 2023-ம் ஆண்டு வியட்நாமில் நடத்தப்பட்ட இருதரப்பு பயிற்சியின் தொடர்ச்சியாகும்.  இந்தியா- வியட்நாம் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
  • இரு நாடுகளையும் சேர்ந்த ராணுவ, விமானப்படை வீரர்கள் முதல் முறையாகப் பயிற்சியில் பங்கேற்பதன் மூலம் இந்தப் பதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருதரப்புப் பங்கேற்பையும் அளிக்கிறது. 
  • 47 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் பிரிவில், பொறியாளர் படைப்பிரிவும், பிற ஆயுதங்கள் மற்றும் ராணுவ சேவைகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இதேபோன்ற பலம் வாய்ந்த வியட்நாமிய படைப்பிரிவை வியட்நாம் மக்கள் ராணுவம் பிரதிநிதித்துவம் செய்கிறது.
  • வேலைவாய்ப்பில் இரு தரப்பினரின் கூட்டு ராணுவத் திறனை மேம்படுத்துவதும், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஏழாம் அத்தியாயத்தின் கீழ் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஐ. நா. படைப்பிரிவின் ஒரு பகுதியாக பொறியியல் பணிகளை மேற்கொள்வதற்கு பொறியாளர் நிறுவனம் மற்றும் மருத்துவக் குழுக்களை அனுப்புவதும் வின்பாக்ஸ் -2024-ன் நோக்கமாகும்.
  • முந்தைய இருதரப்பு பயிற்சிகளிலிருந்து மேம்பட்ட நோக்கங்களுடன், களப் பயிற்சியாக வின்பாக்ஸ் -2024-ஐ நடத்துவது, பரஸ்பர நம்பிக்கை, செயல்பாட்டை வலுப்படுத்தி, இந்திய ராணுவம், வியட்நாம் மக்கள் ராணுவம் இடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள உதவும். 
  • மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண விளக்கம் மற்றும் உபகரணங்கள் கண்காட்சியுடன் 48 மணிநேர சரிபார்ப்பு பயிற்சியும் இடம்பெறும். 
  • இந்தக் கூட்டுப் பயிற்சி இரு படைப்பிரிவுகளிலும் உள்ள வீரர்களுக்கு சமூக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel