8th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
விஜய கரிசல்குளத்தில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஜாஸ்பர், சர்ட் கற்கள் கண்டெடுப்பு
- விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு உள்ளிட்ட 2400 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில் சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய மிகவும் பழமையான ஜாஸ்பர், சர்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- இந்த கற்கள் பழங்காலத்தில் விலங்குகளை வேட்டையாட கருவிகள் தயாரிக்க மூலப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
- கூட்டு இராணுவப் பயிற்சியின் 3-வது பதிப்பு ஆஸ்த்ராஹிந்த் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் இன்று தொடங்கியது.
- இந்த பயிற்சி 2024 நவம்பர் 8 முதல் 21 வரை நடத்தப்படும். ஆஸ்த்ராஹிந்த் பயிற்சி என்பது இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இதே பயிற்சியின் கடைசி பதிப்பு ஆஸ்திரேலியாவில் 2023 டிசம்பரில் நடத்தப்பட்டது.
- 140 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில், முக்கியமாக டோக்ரா ரெஜிமெண்டின் ஒரு பட்டாலியன் மற்றும் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 14 வீரர்கள் இடம்பெறுவார்கள்.
- 120 வீரர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய இராணுவப் படைப்பிரிவு, 2வது படைப்பிரிவின் 10-வது அணியின் 13-வது இலகு குதிரை படைப்பிரிவால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.
- உத்தரபிரதேசம் அலிகார் பல்கலைக்கழகம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு சர் சையது அகமது கான் என்பவரால் நிறுவப்பட்டது. முஸ்லிம் மாணவ, மாணவிகள் அதிகம் பயின்று வரும் இந்தப் பல்கலையில் 50 சதவீத ஒதுக்கீடு இருந்தது.
- பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், அலிகார் முஸ்லிம் பல்கலைகழகம் சிறுபான்மை கல்வி நிறுவனமாக இருந்தது கிடையாது என்று தீர்ப்பளித்தது.
- இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தலைமை சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பை வெளியிட்டது.
- அதில், தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் ஒரு கருத்தையும், 3 நீதிபதிகள் மாறுபட்ட கருத்தையும் தெரிவித்தனர். பாராளுமன்ற சட்டத்தால் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் என்பதற்காக, அலிகார் பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கினர்.
- இதன்மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது உறுதியாகியுள்ளது. ஓய்வுபெற இருக்கும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு இது கடைசி வேலைநாளாகும்.