7th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது "தகுதி வரைமுறைகளை " மாற்ற முடியாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- ராஜஸ்தான் மாநிலத்தில் பணி நியமனத்தில் விதிமுறைகளை சிலருக்கு ஏற்ற வகையில் தளர்த்தியதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மூன்று நீதிபதிகள் அமர்வில் கடந்த 2013ம் ஆண்டு விசாரிக்கப்பட்டு பின்னர், அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
- ஒரு பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் பெற்ற பிறகு அல்லது பாதி வழியில் விதிமுறைகளை மாற்றக்கூடாது என்று தீர்ப்பில் கூறியுள்ளது. பணியிடங்கள் நிரப்பப்படுவது பாகுபாடின்றி வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
- ஆசிய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மதிப்புகள் வரலாற்றின் தாக்குதலைத் தாங்கியுள்ளன, இருப்பினும் உறுதியாக நிற்கின்றன, புத்தரின் உள்ளார்ந்த மதிப்புகளுக்கான சான்றுகள், முதல் ஆசிய பௌத்த உச்சிமாநாட்டின் 2-வது நாளில் பொதுவான பேசு பொருளாக இருந்தது.
- புத்தரின் போதனைகள் தத்துவ ரீதியாக மட்டுமல்லாமல், நடைமுறையிலும் பிணைக்கும் சக்தியாக இருப்பதை பேச்சாளர்கள் ஆமோதித்தனர்.
- நெருக்கடி காலங்களில் ஆசிய நாடுகளையும் கலாச்சாரங்களையும் நிலைநிறுத்த அவை உதவியுள்ளன.
- கலாசார அமைச்சகம், சர்வதேச பௌத்த கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த முதலாவது ஆசிய பௌத்த உச்சி மாநாட்டில் 'ஆசியாவை பலப்படுத்துவதில் புத்த தம்மத்தின் பங்கு' எனும் கருப்பொருளில் 32 நாடுகள் பங்கேற்றதுடன் 160-க்கும் மேற்பட்ட சர்வதேசப் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- மகாசங்கத்தின் உறுப்பினர்கள், பல்வேறு துறவற மரபுகளின் பிதாமகர்கள், பிக்குகள், கன்னியாஸ்திரிகள், ராஜதந்திர சமூகத்தின் உறுப்பினர்கள், பௌத்த ஆய்வுகளின் பேராசிரியர்கள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் உள்பட சுமார் 700 பங்கேற்பாளர்கள் இதில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
- ‘பாரத் 6ஜி தொலைநோக்கு’, ‘மேட் இன் இந்தியா’ ‘தற்சார்பு இந்தியா’ ஆகியவற்றுடன் இணைந்து, மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையின் முதன்மையான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி.டாட்) பிலானியில் உள்ள சிஎஸ்ஐஆர் – மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (சிஇஇஆர்ஐ) 2ஜி, 3 ஜி, 4 ஜி, 5 ஜி ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் ஒற்றை பிராட்பேண்ட் ஆண்டெனாவிற்கான மல்டிபோர்ட் ஸ்விட்ச் மற்றும் டியூனபிள் இம்பிடான்ஸ் மேட்சிங் நெட்வொர்க்கை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையின் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகிறது.
- இந்திய புத்தொழில் நிறுவனங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், தொலைத்தொடர்பு தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வடிவமைத்தல், உருவாக்குதல் மற்றும் வணிகமயமாக்குவதற்கான ஒரு முக்கியமான சாதனமாகும்.
- மேலும் மேம்பட்ட ஆண்டெனா செயல்திறனுடன் பல தகவல்தொடர்பு பேண்டுகளை உள்ளடக்கிய மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் தொழில்நுட்ப அடிப்படையிலான மாறுதல் நெட்வொர்க்கை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்.